ஒரு வில்லிலிருந்து எய்யப்பட்ட தேவனுடைய விடுதலையின் அம்பு THE ARROW OF GOD'S DELIVERANCE SHOT FROM A BOW 56-08-01 ஷ்ரீவ்போர்ட் லூசியானா அமெரிக்கா எங்களோடிரும் கர்த்தாவே - இரவுக்குப் பின் இரவாக இந்த கூட்டங்களிலே நாங்கள் கடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது, கர்த்தாவே! உம்முடைய பிரசன்னம் இங்கே இருப்பதாக. பரிசுத்த ஆவியின் மகத்தான வல்லமையால் ஆட்கொண்டவர்களாய் மக்களுக்கு வெளியே போக கூட மனம் இல்லாத அளவுக்கு நீர் செய்வீராக. திங்கட்கிழமையும் அது தொடர்வதாக. கர்த்தாவே! ஓ உம்முடைய ஆவியானவர் இறங்கி வருவாராக. நாங்கள் உம்மை தொழுது கொள்ளுகிறதான இந்த வேளையிலே எங்களுக்கு உதவி செய்யும். உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் நாங்கள் இதை கேட்கிறோம். ஆமென். 2. இன்றிரவு வெளியிலே அது சிறிதளவு சேராக இருக்கிறது, இல்லையா? ஆனால் அதிகமாக குளிர்ச்சியாக இருக்கிறது. அது நாம் சந்தோஷப்பட வேண்டிய ஒரு நல்ல காரியம். அது உண்மையில் அதை நான் உணர்கிறேன். நான் இந்த கூட்டங்களில் சிலதை ரத்து செய்ய வேண்டும் என்று இருந்தேன், ஆனால், இப்பொழுது எனக்கு ரொம்ப சந்தோஷம் என்னவென்றால், சகோதரன் ஹயர்ஹோல்சர் நமக்கு உதவி செய்யும்படியாக இங்கே வந்திருக்கிறார். நீங்கள் ஒவ்வொருவரும் வந்து அவருடைய செய்தியை கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மேலும் அவர் உங்களுக்கு மிகவும் நன்மையானதை செய்வார். நான் ஊழியத்துக்குள் பிரவேசிக்கவே இல்லை அப்பொழுதிலிருந்தே அவர் வியாதியஸ்தருக்காக ஜெபித்துக்கொண்டு வருகிறார். ஆகவே அதே மனிதன் தான். அது சரியா? ஆகவே அது மிகவும் அருமையாக இருக்கும். மேலும் நான் உண்மையில் இங்கு வருவதற்கு இதுதான் காரணம்... [ஒலிநாடாவில் காலியிடம்]..?...நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. மேலும், அதாவது நான் ஞாயிற்றுக்கிழமை இங்கிருந்து புறப்பட்டால் நான் அதை செய்வதற்கு எனக்கு ஒரு அரை நாள் தான் இருக்கிறது. மேலும் அதன் பிறகு அந்த கூட்டங்களுக்கு செல்வதற்கு மூவாயிரத்து ஐந்நூறு மைல் தூரம் கார் ஓட்டிச் செல்ல வேண்டி இருக்கிறது. எனக்கு அதற்கிடையில் சில கூட்டங்கள் இருக்கின்றன. நான்... அது என்ன என்று நீங்கள் கற்பனை செய்யலாம், பாருங்கள்! மேலும் நான் சகோதரன் மூரிடம் கேட்டேன், "நாம் இதுபோல ஒரு இரண்டு நாட்கள் முன்பதாகவே கிளம்ப முடியுமா?" என்று. அதற்கு அவர் சொன்னார் 'நிச்சயமாக சகோதரன் பிரான்ஹாம்' மேலும், அதுதான் சகோதரன் மூர்-ஐ குறித்து எனக்கு பிடித்த விஷயம். மேலும் இங்கே இருக்கிற இந்த சபை, காரியங்களை புரிந்து கொள்வதில் இவர்கள் உண்மையான கிறிஸ்தவர்கள். மேலும், உங்களுக்கு ஒரு சகோதரனைக் காட்டிலும் மிகவும் உங்களோடு கூட நெருங்கி ஒட்டி உறவாடக் கூடிய ஒரு நண்பன் இருக்கிறான் என்றும் உங்களை நன்றாக புரிந்து கொள்ளக்கூடிய மக்கள் இருக்கிறார்கள் என்றும் அறிந்து கொள்வது மிகவும் அருமையாக இருக்கிறது. 3. ஆனால், ஓ நிச்சயமாக, நான் உங்களோடு கூட ஒரு மாதம் கூட தங்குவதற்கு எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு அப்படி செய்ய விருப்பம். ஆனால் என்னால் அதை செய்ய முடியாது ஏனென்றால், நண்பர்களே! உங்களுக்கு தெரியாது, நான் ஒன்றை சொல்லுவேன். இங்கே வருவதற்கு நான் கண்கள் வீங்கிப் போனவனாய் வந்தேன். பாருங்கள்! அதுதான் சரி. எனக்கு நூறு கூட்டங்கள், நூற்றுக்கும் மேலான கூட்டங்கள். அதுவும் வெறும் இரண்டு வாரங்களுக்குள் பதிவு செய்யப்பட்டவை. நான் கன்வென்ஷன் கூட்டங்களில் இருந்து வந்தேன். மேலும் ஜனங்கள், சில இடங்கள் அவை எனக்கு சொல்லப்பட்டதே இல்லை. அப்படியாக ஜனங்கள் சகோதரன் பிரான்ஹாம் ஒரே ஒரு இரவு கூட்டத்திற்கு நீங்கள் வர மாட்டீர்களா என்று கேட்டு பத்து வருடங்களாக காத்துக் கிடக்கிறார்கள். மாதக் கணக்கில் பத்து வருடங்களாக. அதன் பிறகு அப்படியே அந்தப் பக்கமாக ஷ்ரீவ்போர்ட்டுக்கு நான் வருகிறதை அவர்கள் கண்டு... அங்கேதான் என்னுடைய அதிகமான நேரம், இரண்டு வார கூட்டங்கள். அவர்கள், "நீங்கள் எதற்காக ஷ்ரீவ்போர்ட்டுக்குப் போகிறீர்கள்? நல்லது, அங்கே என்ன அப்படி இருக்கிறது? ஷ்ரீவ்போர்ட்டில் அப்படி என்ன முக்கியமாக இருக்கிறது" என்று கேட்கிறார்கள். 4. ஆகவே, உங்களுக்குத் தெரியும், இயேசு இந்த வாழ்க்கையிலே இருந்த தம்முடைய ஊழியத்தில் இருந்த பொழுது, தன்னோடு இருந்த ஒவ்வொருவரோடும் காரியங்களை பகிர்ந்து கொள்ள முயற்சித்தார். நானும் அதே விதமாகத்தான் செய்ய முயற்சிக்கிறேன். மேலும், நமக்கு ஒரு அருமையான நேரம் உண்டாகி இருந்தது என்று நான் அறிந்திருக்கிறேன். எனக்கு சில சிறந்த அபிஷேகமும் விசேஷமாக அங்கே கர்த்தர் எனக்கு ஒரு சிறந்த செய்தியை கொடுத்தார். என் ஜீவியத்தில் என்னை அந்த அளவுக்கு பாதிக்கக் கூடிய ஒரு செய்தியை நான் பெற்றுக்கொண்டதில்லை. சபைக்கு ஒரு செய்தி. "ஆட்டுக்குட்டியும் புறாவும்" அதை மறந்து விடாதீர்கள். 5. இப்பொழுது, கடந்த இரவு இங்கே மேடையின் மேலே... வழியருகே, நான் அதை சொல்ல ஆரம்பிப்பதற்கு முன்பாக, சகோதரர் மூரும் நானும் சரியாக கலிஃபோர்னியாவில் இருக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். மேலும் ஒருவேளை தேவனுக்குச் சித்தமானால் நான் கலிஃபோர்னியாவுக்குப் புறப்படும் பொழுது நான் சற்று பின்னால் தங்கி ஒரு சிறிய, ஒரு இரவு அல்லது இரண்டு இரவு நாங்கள் கலிஃபோர்னியாவுக்கு செல்லுகிற வழியில், அதுவும் ஒரு விதமாக ஓர் அளவுக்கு எண்ணிக்கை சமன் செய்வதாக இருக்குமா? அப்படி இருந்தால் நல்லது. இப்பொழுது எத்தனை பேர் அதை புரிந்து கொள்கிறீர்கள்? மேலும், எத்தனை பேர் எனக்காக ஜெபிப்பீர்கள்? நான் - நான் மிகவும் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். நன்றி சகோதரனே! சகோதரியே! அது நல்லது. நான் அதற்காக உங்களை நேசிக்கிறேன். மேலும் இப்பொழுது, நான்... சகோதரன் மூர் கலிபோர்னியா வரைக்கும் செல்கிறார். நாங்கள் சர்வதேச அசூசா தெரு பேரணிக்குச் செல்லுகிறோம். இது ஐம்பதாவது வருடம். நான் ஒரு விதமாக அதை என் இருதயத்தில், ஒரு வெளிப்பாட்டை போல வைத்திருக்கிறேன். இது ஐம்பதாவது வருடம். பெந்தெகொஸ்தே துவங்கி ஐம்பதாவது வருடம். மேலும் நான் அந்த வெஸ்ட்கேட்ஸில் இருந்த பொழுது, ஒரு வருடம் அல்லது அதற்கும் முன்பு கர்த்தர் அதை என் இருதயத்திற்குள்ளாக வைத்தது போல் இருந்தது. நானும் அதை அனேக ஆயிரம் ஜனங்களுக்கு முன்பாக அறிவித்தேன். அது இப்பொழுது அக்கினியாக பற்றி எரிகிறது. மேலும் இப்பொழுது அந்த "ஏஞ்சல்ஸ் டெம்பிள்" அங்கே ஒரு பெரிய "அசூசா தெரு பேரணி" நடக்க இருக்கிறது. மேலும் இந்த வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி, நான் நினைக்கிறேன் அது 16-ம் தேதி என்று, 16-ம் தேதி ஆரம்பிக்கிறது. மேலும் அந்த கூட்டங்களை துவக்கி வைக்கிற அந்த ஒரு சிலாக்கியமும் ஒரு கவுரவமும் எனக்குக் கிடைத்திருக்கிறது. முதல் சில ஆராதனைகள், சகோதரன் ஓரல் ராபர்ட்ஸ், டாமி ஹிக்ஸ் மேலும், ஓ இன்னும் அநேகர் அந்தப் பேரணியில் கலந்து கொள்ளப் போகிறார்கள். மேலும் உலகத்தின் பல்வேறு பாகங்களில் இருந்தும் மகத்தான மனிதர்கள் அங்கே இந்த மகத்தான பேரணிக்கு வருவார்கள். அதுதான் அமெரிக்காவில் பெந்தெகொஸ்தேயின் துவக்கம். அந்த பழைய அசூசா தெரு. மேலும் இது ஐம்பதாவது வருடம். யூபிலி முழங்கி இருக்கிறது. இப்பொழுது நீங்கள் விடுதலையாகிப் போகலாம் இல்லையென்றால் இங்கேயே தரித்திருக்கலாம். 6. ஆகையால் நாங்கள் அங்கே போகிறோம். அதன் பிறகு, சகோதரன் எஸ்பினோசா அவர் அங்கே மெக்சிகோவில் சில மாதங்களுக்கு முன்பாக நானும் சகோதரன் மூரும், சகோதரன் பிரவுன் எங்கள் எல்லோருடனும் கூட அங்கே இருந்தார். எங்கள் எல்லோருக்கும் அங்கே கர்த்தருக்குள்ளாக ஒரு அற்புதமான நேரம் உண்டாயிருந்தது. மேலும் சகோதரன் எஸ்பிநோசா அவர் என்னுடைய மொழிபெயர்ப்பாளராக இருந்தார். அவ்வளவு ஒரு அருமையான சகோதரன். அவர் எனக்கு மிகவும் அருமையானவராய் இருந்தார். மேலும் அவருக்கு நான் அவருடைய இடத்திற்கு வந்து ஒரு மாதங்கள் தங்கி ஒரு மாத கூட்டத்தை நடத்த முடியுமா என்று தெரிந்து கொள்ள விரும்பினார். ஒரு மாத கூட்டங்கள்! நல்லது, என்னால் அப்படி செய்ய முடியாது. என்னுடைய கூட்டங்கள் நீண்ட நாள் கூட்டங்களாக அமைக்கப்படும் என்றால் நல்லது, அப்பொழுது அது வித்தியாசமாக ஆகிவிடும். (பாருங்கள்?) ஒரு மாதங்கள் என்னால் தங்க முடியும், ஆனால் சிறிய கூட்டங்களை தான் நான் நடத்திக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் அதில் அதிகளவு பணம் செலவிடப்படுவதில்லை. வானொலி நிகழ்ச்சிகள் மற்ற வேறு எந்த நிகழ்ச்சிகள் அங்கு இருப்பதில்லை. நான் கர்த்தர் எங்கே என்னை அனுப்ப சித்தமாய் இருக்கிறாரோ அங்கே போவதற்கு நான் சுதந்திரமாக உணருகிறேன். (பாருங்கள்?) மேலும் இங்கே சில இரவுகள் தங்கி மற்றும் அங்கே சில இரவுகள் தங்கி இன்னும் வேறு ஒரு இடத்தில் சில இரவுகள் தங்கி ஒரு சபையில் அல்லது வேறு எங்காகிலும் அந்த கூட்டங்களை நடத்துவது அதில் ஒரு பிரச்சனையும் இல்லை. அதே போல நான் உடுத்திக்கொள்கிற உடையைத் தவிர வேறு எதையும் நான் எதிர்பார்ப்பதில்லை. 7. மேலும் நான் சொல்ல வந்தது, அந்த வழியருகே ஒரு பெண்மணி, நான் இங்கே இருந்த பொழுது, ஒரு உடையை, ஒரு சூட்டை எனக்குக் கொடுத்தாள். நான் நிச்சயமாக அதை பாராட்டுகிறேன். என் அருமை நண்பர்களே! அது யாராக இருந்தாலும் சரி. அங்கே பின்னாலே அதற்கும் பின்னாலே இருக்கிற ஒரு பெண்மணி, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக! சகோதரியே, அதை செய்ததற்காக தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! சகோதரியே, நிச்சயமாகவே நான் அதை பாராட்டுகிறேன். நேற்று இரவே நான் அதை சொல்ல வேண்டுமென்றிருந்தேன். மேலும் நான் உங்களுக்கு 'நன்றி' என்று சொல்கிறேன். மேலும், என்னுடைய உடைகள் எல்லாம் இவ்விதமாக தான் எனக்குக் கிடைக்கின்றன. என்னுடைய உடைகள் எல்லாம் ஜனங்கள்தான் எனக்குக் கொடுக்கிறார்கள். மேலும் நான் நினைவு கூறுகிறேன், மற்றவர்கள் பயன்படுத்திய உடைகளை பெற்றுக்கொள்வதற்கு நான் தயங்குவதில்லை. அது பரவாயில்லை. எனக்கு அதில் பிரச்சனை ஒன்றும் இல்லை. ஏனென்றால், நான் அவ்விதமாக தான் வளர்க்கப்பட்டேன். ஆகவே, நான் - நான் - ஆகவே - நான் - நான் - நிச்சயமாக அதை பாராட்டுவேன். மேலும் நான்... என் கர்த்தருக்கு தலை சாய்க்க ஒரு இடம் இல்லாதிருந்தது. அது சரி. மேலும் எனக்கோ, கர்த்தர், நானும் என்னுடைய குடும்பமும் ஜீவிக்கும்படியாக கர்த்தர் எனக்கு ஒரு இடத்தைத் தந்திருக்கிறார், மேலும் நாங்கள் அதில் சந்தோஷமாக இருக்கிறோம். எங்களுக்கு என்ன இருக்கிறதோ, அதில் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம். எங்கள் குடும்பத்திற்கு காரியங்கள் இல்லை என்று நான் சொல்லவில்லை, இன்னும் சற்று பெரிய ஒரு அன்பின் காணிக்கை எனக்குக் கிடைத்தால் நாங்கள் இன்னும் சற்று வசதியான வீட்டிற்குள் வசதியாக வாழ முடியும். நான் அப்படிச் செய்வதில்லை. இல்லை எனக்குக் கொஞ்சம் கூடுதலாக ஏதாவது கிடைத்தால், நான் அதை வெளிநாட்டு ஊழியங்களுக்குக் கொடுத்து விடுகிறேன். அது உண்மை என்று கர்த்தருக்குத் தெரியும். மேலும் இப்பொழுது அது எனக்குக் கொடுக்கப்படும் பொழுது நான் அதற்கு உக்கிராணக்காரனாக இருக்கிறேன். மேலும் அந்த நாளிலே எனக்குக் கொடுக்கப்படுகிற ஒவ்வொரு பணத்துக்காகவும், ஆசீர்வாதங்களுக்காகவும் நான் கணக்கு சொல்ல வேண்டியவனாய் இருக்கிறேன். ஆகவே, நான் அங்கே வரும்பொழுது இப்பொழுது நான் சொன்ன வண்ணமாகவே அது இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்... ஆற்றண்டையில் நான் வரும்பொழுது எல்லாமே சரியாக, தெளிவாக இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அப்பொழுது எனக்கு எந்த பிரச்சனையும் இருக்கக்கூடாது. அங்கு ஏதாவது பிரச்சனை இருக்கும் என்றால், அதை இப்பொழுதே நான் சரி செய்து கொள்ள விரும்புகிறேன். அது சரி. இப்பொழுதே, இப்பொழுதே அது சரி செய்யப்பட வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஏனென்றால், அவள் வெளியே அழைக்கப்படும்பொழுது, அப்பொழுது நான் என்னுடைய பயணச்சீட்டை என் கையில் வைத்துக்கொண்டு ஆயத்தமாய் இருக்க விரும்புகிறேன். மேலும், சகோதரனே! சகோதரியே! என்னால் முடிந்த அளவுக்கு சிறந்த விதத்தில் காரியங்களை செய்ய நான் முயற்சிக்கிறேன். 8. மேலும் இப்பொழுது, அநேகம் நல்ல பாப்திஸ்துகளும், பிரஸ்பிட்டேரியன்களும் மற்றும் எல்லாரும் இங்கே இருக்கிறீர்கள். மேலும் இங்கே வந்து என்னோடு கூட சேர்ந்து கிறிஸ்துவிற்காக இந்த ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துவதில் எனக்கு நீங்கள் செய்கிற உதவிக்காக உங்களை நான் மிகவும் மெச்சிக் கொள்கிறேன். ஆகையால் இப்பொழுது, உங்கள் பாஸ்டரைப் போல என்னால் பேச முடியாமல் இருக்கலாம்! எனக்குக் கல்வி அறிவு இல்லை. எனக்கு அந்தத் திராணி இல்லை. ஆனாலும் பாவிகளை இரட்சிப்பதற்காக தேவன் எனக்கு என்ன கொடுத்திருக்கிறாரோ அதை நீங்கள் பொறுத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆகவே அதையும் நான் பாராட்டுகிறேன். 9. ஜெபத்துக்குக் கிடைத்த ஒரு பதிலை நான் உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். எத்தனை பேர் கடந்த இரவில் இங்கே இருந்தீர்கள்? நான் உங்கள் கரங்களைக் காணட்டும்! கட்டிடம் முழுவதுமாக, நல்லது, அது மிகவும் நல்லது. இப்பொழுது நான் இதைக் கூற விரும்புகிறேன். அதாவது உங்களுக்கு நினைவிருக்கும், இங்கே எங்கோ ஒரு பெண் இருந்தாள், நான் நினைக்கிறேன், அது முதல் பெண் அல்லது எதுவோ, எப்படியோ அது அந்த ஒலிநாடாவில் எங்கோ பதியப்பட்டிருக்கிறது அதைப் பார்த்தால் அது உங்களுக்குக் காண்பிக்கும். நான் அந்தப் பெண்ணிடம் கேட்டேன், அவளுக்கு அவளுடைய உடம்பில் அதிகப்படியான நீர் சேர்ந்து அவள் வீங்கிப் போய் இருந்தாள், அவளை 'கர்த்தர் ஒரு விதத்தில் தொட்டார்' என்று நான் அவளுக்குச் சொன்னேன். மேலும் நான் அவளுக்குச் சொன்னேன், "பெண்மணியே! தயவுசெய்து நான் சொல்லுகிற விதமாக நீங்கள் செய்வீர்களா?" அல்லது அந்த விஷயத்தில் ஏதோ ஒன்று. அவர்கள் அதை எனக்கு மீண்டும் காண்பித்தார்கள் ஏனென்றால், அது எனக்கு ஒரு சொப்பனம் போல இருந்தது. நான் சொன்னேன், "இன்று இரவிலே நீங்கள் உங்கள் உடலை அளவெடுத்து அதை ஒரு நூலில் சுற்றி வைத்துக் கொள்ளுங்கள், நாளைய தினம் அந்த நூலை கொண்டு வந்து உங்கள் உடல் எந்த அளவுக்கு சுருங்கி இருக்கிறது என்று எனக்குக் காண்பியுங்கள்" என்று. நீண்ட நேரமாக அந்தப் பெண் இங்கே நின்றுக் கொண்டிருந்தாள். நான் அந்த பெண்ணுக்கு அவ்விதமாகச் சொன்னதைக் குறித்து எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கிறது? நல்லது இப்பொழுது அவள் அந்த நூலைக் கொண்டு வந்திருக்கிறாள். இதோ, அது இங்கே இருக்கிறது. அவள் இப்பொழுது ஒரு அங்குலம் அல்லது ஒன்றரை அங்குலம் அளவிற்கு ஒரே இரவிலே சுருங்கி இருக்கிறாள். அது கிட்டத்தட்ட பதினெட்டு மணி நேரத்திற்குள்ளாக. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 10. அந்த பெண்மணி இங்கே இருக்கிறாளா? நேற்று இரவு சுகமான அந்த பெண்மணி வந்திருக்கிறாளா? சரியாக இங்கே இருக்கிறாள். அந்த பெண்மணி இங்கே இருக்கிறார்கள். இப்பொழுது நாம், "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று சொல்லுவோம். நாம் எல்லோரும் சொல்வோம். [சபையார் "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று சொல்லுகின்றனர் - ஆசி] இப்பொழுது சகோதரியே! நீர் உம்மை விட்டுக் கொடுத்ததற்காக கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக, இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்பதற்கு இது ஒரு சான்றாக இருக்கும். ஆமென். நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்! அதேபோல சகோதரியே உம்முடைய உத்தமத்துக்காகவும் நான் மிகவும் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன். இப்பொழுது அது தொடர்ந்து அப்படியே போய்க்கொண்டே, போய்க்கொண்டே, போய்க்கொண்டே இருக்கும். இப்பொழுது நீ நன்றாக சுகம் அடைவாய். கர்த்தராகிய இயேசு... இப்பொழுது, நீங்கள் சொல்லலாம், "அங்கே பார்" ஒரு அங்குலம் அல்லது ஒன்றரை அங்குலம் சுருங்கி இருந்தது, பதினாறு அல்லது பதினெட்டு மணி நேரத்திற்குள் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்! அவள் இங்கிருந்து போனதிலிருந்து அவள் தன்னை அளந்து பார்த்துத் திரும்பி வந்த பொழுது, மேலும் இப்பொழுது அன்றைக்கு அந்த எலியா ஒரு மனிதனுடைய உள்ளங்கை அளவு மேகத்தைப் பார்த்தான், அவன், "பெருமழையின் இறைச்சலின் சத்தத்தை நான் கேட்கிறேன், ஆகையால் நீர் இரதத்தைப் பூட்டி போய்விடும் என்று சொன்னான். 11. ஆகவே, ஓ என்னே, நான் ஜெபிக்கிறேன் அதாவது இந்த வாரத்தில் நமக்கு ஒரு அற்புதமான நேரம் உண்டாயிருக்கும் என்று. இங்கே சுற்றிலும் இருக்கிற கம்பங்களில் எல்லாம் மனிதர்களுடைய கக்கத் தண்டங்கள் தொங்கிக் கொண்டிருக்கப் போகிறது. அந்த அளவுக்கு தேவன் மகிமைப்படுவாராக. அது அவ்விதமே இருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன். மேலும் ஒரு நாள் நான் இங்கே இருக்கிற ஷ்ரீவ்போர்ட்டுக்கு கூட்டங்களை நடத்தும்படியாக அங்கே வருவேன். அப்பொழுது ஜனங்கள் கடந்து செல்லும் பொழுது நான் அங்கே நின்று அவர்களுக்காக ஜெபிப்பேன். அதை எப்படியாவது செய்ய வேண்டும் என்று எனக்கு விருப்பம். ஆனால் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனாலும் எனக்கு இப்படி ஒரு ஊழியம் கொடுக்கப்பட்டிருக்கிறபடியால் நான் அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தை துவங்க வேண்டும் என்றால் அது இன்னும் துவங்காமல் இருக்கிறது. அது நல்லது. ஆனால், அது ஒரு விசை துவங்கி விட்டால் அதன் பிறகு என்னால் அந்த கூட்டங்களை ரத்து செய்ய முடியாது. ஒவ்வொரு முறையும் நான் ஒரு நபரை சந்திக்கிறேன், அது மறுபடியும் அங்கே இருக்கிறது, மறுபடியும் அங்கே இருக்கிறது, அவர்கள் எல்லா இடங்களிலுமிருந்து என்னை இழுக்கிறார்கள். மேலும் அந்த காரணத்தினால் தான் என்னுடைய ஊழியமானது அமெரிக்காவில் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. ஆனால், ஓ கர்த்தர் எவ்வளவாக அந்த வெளிநாட்டு கூட்டங்களை ஆசீர்வதித்தார்! பாருங்கள்? அமெரிக்காவில் உள்ள மக்கள் அவர்கள் எப்படி கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால், நீங்கள் அவர்கள் தலையின் மீது கைகளை வைத்து ஜெபிக்க வேண்டும் அல்லது கொஞ்சம் எண்ணெயை எடுத்து அவர்கள் தலையில் ஊற்றி ஜெபிக்க வேண்டும். இப்பொழுது அவர்கள் அதைத்தான் விசுவாசிப்பார்கள். இப்பொழுது அதை மாற்றுவதற்கு வேறு வழியே இல்லை, பாருங்கள்? அது ஏற்கனவே அவர்களுக்குள்ளாக நன்றாக வேரூன்றி விட்டது. அதைக் குறித்து இப்பொழுது நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. ஆம். 12. மேலும் ஒரு நாள் தேவனுக்குச் சித்தமானால், நான் அதை விட்டு வெளியே வர முயற்சிக்கிறேன். மேலும் பரம பிதாவிடத்தில் நான் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், ஒரு தரிசனத்தின் மூலமாக அவர் அதை எனக்குச் சொன்னார். சகோதரன் மூர் மற்றும் சிலர் இப்பொழுது கலிபோர்னியாவுக்குச் சென்று முதல்முறையாக ஒரு காரியத்தை செய்யப் போகிறார்கள். அது என்னவென்றால், அவர்கள் அந்தக் கூட்டம் நடக்கிற இடத்தில் எனக்கென்று ஒரு சிறிய இடத்தை ஆயத்தப்படுத்துவார்கள் அங்கே இருந்து கொண்டு நான் ஜனங்களுக்காக ஜெபிப்பேன், அப்பொழுது நான் ஜனங்களை விட்டு ஒரு நிமிடம் தள்ளி இருப்பேன். அப்பொழுது நான் வழக்கமாக ஜெபிக்கும் பொழுது நான் உணர்கிற அந்த 'இழுப்பு' அதை நான் உணராமல் இருப்பேன். அதுதான் என்னை பலவீனமாக்குகிறது. அதுதான் என்னை சீக்கிரமாக மேடையை விட்டுப் புறப்படச் செய்கிறது. அந்தப் பழியை என் குழந்தையின் மேல் போடாதீர்கள். அவன் என்னுடைய குழந்தை அல்ல ஏனென்றால் என் வாழ்க்கையில் நான் அவ்வளவு நெருக்கமாக பெற்றிருந்த எதைக் காட்டிலும் அவன் எனக்கு சிறந்தவனாய் இருக்கிறான். அவன் எப்பொழுது எதை எப்படிச் செய்ய வேண்டும் என்று சரியாக அறிந்திருக்கிறான். அவன் மாத்திரம் இல்லையென்றால் நான் இந்நேரம் மனநிலை மருத்துவமனையில் தான் இருந்திருக்க வேண்டியது. ஏனென்றால் அவர்கள் அப்படியே என்னை இழுத்துப் பிடித்து வைத்து விடுகிறார்கள். நான் ஒருமுறை அதை ஊழியக்காரர்களை நம்பி ஒப்படைத்தேன், ஆனால் அதனால் நான் ஒரு இரண்டு அல்லது மூன்று வருடங்கள் ஊழிய களத்துக்கே வர முடியாமல் போய்விட்டது என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் என் மகனோ அதில் மிகவும் உண்மையாய் இருக்கிறான். நான் அதை மெச்சிக் கொள்கிறேன். மேலும் அவன் எப்பொழுதும் என் கூடவே ஒட்டிக் கொண்டிருக்கிறான். ஆகவே அவன் மேடையில் என் அருகே நின்று கொண்டு என்னை கவனித்துக் கொண்டே இருப்பான். என் வாயில் வெள்ளையான ஒரு காரியத்தைப் பார்க்கும் பொழுது அவன் வந்து சொல்லுவான், "அப்பா இங்கே ஐம்பதாயிரம் பேர் இருந்தாலும் எனக்கு அதைக் குறித்து அக்கறை இல்லை, இப்பொழுது நீங்கள் வரவில்லை என்றால் நான் உங்களைத் தூக்கி என் தோள்மேல் போட்டுக் கொண்டு போய் விடுவேன், ஆகையால் நீங்கள் வந்து விடுங்கள்" என்று சொல்லுவான். ஏனென்றால் அப்படிச் செய்யும்படி அவனுடைய தாய் தான் அவனுக்குச் சொல்லி வைத்திருக்கிறாள். அவன் இல்லாமல் அவள் அவ்வளவு எளிதாக என்னை கூட்டங்களுக்கு அனுப்ப மாட்டாள். அவள் சொன்னாள், "பில்லி நீ போ, உன் அப்பாவுக்கு என்ன சம்பவிக்கும் என்று எனக்குத் தெரியும். அவர் திரும்பி வரும் பொழுது கிழிந்து கந்தல் கந்தலாக தான் வருவார். ஆகவே, நீ நேராக அங்கே போய் அங்கே யார் இருக்கிறார்களோ இல்லையோ அது ஒரு காரியம் இல்லை. அவர் போதுமான அளவுக்கு விடாய்த்துப் போய்விட்டார் என்று கண்ட உடனே, உடனடியாக அவரை மேடையிலிருந்து அப்பால் கொண்டு சென்று விடு" என்று. ஆகவே நான் அதை பாராட்டுகிறேன். என் மகன் பில்லி பால் அதை சரியாக செய்கிறான். 13. மேலும் இப்பொழுது, நண்பர்களே, என்னுடைய ஊழியம் இதுதான். என்னுடைய ஊழியம் ஜனங்களைத் தொடுவதல்ல. ஏனென்றால், நான் கண்டு கொண்டேன் அமெரிக்க மக்களுக்கு அது அவ்வளவாக செல்லுபடி ஆகாது என்று. ஆனால் வெளிநாடுகளில், அவர்களுக்குத் தேவையானது ஒன்றே ஒன்று, அது என்னவென்றால், ஒரே ஒரு இயற்கைக்கு மேம்பட்ட அற்புதம் செய்யப்படுவதை அவர்கள் பார்க்க வேண்டும். அவ்வளவுதான், அவர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் கையில் என்ன இருக்கிறதோ, அது கக்கத்தண்டங்களாகட்டும் அல்லது சக்கர நாற்காலிகளாகட்டும், அதையெல்லாம் அப்படியே கீழே போட்டுவிட்டு அவர்கள் அப்படியே எழுந்து சுகமாகி வீட்டிற்கு நடந்து சென்று விடுவார்கள். ஒருவேளை சற்று நேரம் அவர்களுக்கு நடப்பதற்கு பெலன் தேவைப்படுகிற வரைக்கும் யாராவது அவர்களுக்கு கைத் தாங்கலாக நடத்த வேண்டும் என்றால் மட்டும் அப்படிச் செய்வார்கள்... தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பனில், அங்கே ஒரு நபர், அங்கே அந்த இயற்கைக்கு மேம்பட்ட வரமானது கிரியை செய்து அற்புதத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தது. நான் நினைக்கிறேன்... இல்லை, என்னை மன்னிக்க வேண்டும். நான் நினைக்கிறேன் அது ஒருவர் அல்ல அது நான்கு பேர் அவர்கள் நான்கு பேர், அதில் ஒரு நபர் மேடை மேல் இருந்தார். நான் அந்த பக்கமாக திரும்பி மக்களுக்காக ஒரு ஜெபத்தை செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது சகோதரன் பாஸ்வொர்த், இன்றைக்கு உலகத்திலே எனக்குத் தெரிந்த ஒரு நேர்மையான மனிதன் என்றால் அது அவர்தான். அவர் அதை கணக்கிட்டார். ஒரே ஜெபத்தில் இருபத்தைந்தாயிரம் பிரமிக்கத்தக்க சுகமளித்தல்கள் உண்டாயிருந்தன. ஏழு லாரிகள் நிறைய கக்கத்தண்டங்கள், பிடிப்புகள், கொம்புகள் மற்றும் தடிகள், அவர்கள் ஊன்றி நடப்பதற்கு பயன்படுத்தியவைகள். உங்களுக்குத் தெரியுமா? அந்தக் கூட்டம் முடிந்த பிறகு அவற்றை அத்தனை லாரிகளில் அள்ளினார்கள். அவர்களுக்கு அதற்குப் பிறகு அவைகள் தேவைப்படவில்லை. அவர்கள் எல்லாரும் சுகமாகிவிட்டனர். எப்படி? ஒரே ஒரு அற்புதத்தைக் கண்ட பிறகு. ஆம். அவர் தேவன். அவர் ஜீவிக்கிறார். அங்கே தேவைப்பட்டதெல்லாம் அவ்வளவுதான். அவ்வளவு சுலபமாக. 14. ஆனால் நாமோ மெத்த படித்தவர்கள். ஓ, நாம் அதை நம்முடைய வழியில் தான் பெற வேண்டும் என்று இருக்கிறோம். பாருங்கள்? அங்கே - அங்கே தான் நாம் அதைத் தவறவிடுகிறோம். சரியாக அங்கே தான், அங்கேதான். இப்பொழுது நானும் ஒரு அமெரிக்கன் என்று உங்களுக்குத் தெரியும். மேலும் பூமியிலேயே இது மிகவும் அழகான ஒரு தேசம். அது அதனுடைய பின் வாங்கிப் போன நிலையில் இருந்தாலும், இதுதான் என்னுடைய ஊர். நான் இதை நேசிக்கிறேன். ஆனால் இன்னுமாக, எனக்குத் தெரிந்தவரை இந்த உலகத்திலேயே மற்ற தேசங்களுக்கு சுவிசேஷகர்கள் தேவைப்படுவதைக் காட்டிலும் நமக்கு தான் அதிக சுவிசேஷகர்கள் தேவைப்படுகிறார்கள். அதுதான் சரி. அவ்வளவு மோசமான அளவுக்கு இங்கே சுவிசேஷகர்கள் தேவைப்படுகிறார்கள். அங்கே ஒரே ஒரு இயற்கைக்கு மேம்பட்ட அற்புதம் தான், அங்கே உட்கார்ந்து கொண்டிருந்த அவ்வளவு அஞ்ஞானிகளும், அவர்களுக்கு தங்களுடைய வலது கை எது இடது கை எது என்று கூட தெரியாது, ஒரு துண்டு துணி கூட மேலே இல்லாமல் முற்றிலும் நிர்வாணமாக சரியாக அங்கே உட்கார்ந்து கொண்டு அப்படியே அவர்கள் தலைகளிலே மண்ணை போட்டுக்கொண்டு அங்கே மேலே நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மேலும் நீங்கள் அவர்களை நேசிப்பது போல நீங்கள் நடித்தால் போதும் அவர்கள் அதற்கு அப்படியே அழுது விடுவார்கள். அப்படி இருக்கும் பொழுது அந்த இயற்கைக்கு மேம்பட்டது அது அவர்களை சென்றடைந்து அந்த அஞ்ஞானிகளை பெயர் சொல்லி அழைத்ததை பார்த்த பொழுது, அவனிடத்தில் இருந்த தவறு என்ன என்று அவனுக்குச் சொல்லப்பட்ட பொழுது. ஓ அவர்களுக்குக் தெரிய வேண்டியதெல்லாம் அதுவாகத் தான் இருந்தது. அது அவர்களுக்கு மிகவும் போதுமானதாய் இருந்தது. நீங்கள் "அவர் இங்கே இருக்கிறார் என்று சொன்னால் போதும், அது எனக்குப் பொருந்துகிறது" என்று சொல்லி உடனே அவர்கள் தங்கள் கைகளில் உள்ளதை அப்படியே கீழே போட்டுவிட்டு, அப்படியே நடந்து சென்று விடுவார்கள். அது அவ்வளவு சுலபம். ஆனால், நாம் இங்கே நம்முடையதை கீழே போடச் சொன்னால் நாம் என்ன செய்கிறோம், "ஓ, நான் ஆச்சரியப்படுகிறேன்! நான் எதற்கும் பார்க்கட்டும், ஒருவேளை இது கிரியை செய்யுமா செய்யாதா என்று நான் பார்க்கட்டும்" என்று. பாருங்கள்? அப்படி நீங்கள் சொல்லும் பொழுது அது கிரியை செய்யாது. அது அவ்வளவுதான். நீங்கள் அதை அங்கேயே தவற விட்டு விட்டீர்கள். மேலும் ஆகவே ஒருவேளை தேவன் எனக்கு உதவி செய்தால் அமெரிக்காவில் நான் இது முதற்கொண்டு நாம் அதை ஒரு பெரிய கூடாரத்தில் நடத்துவோம். நான் அப்படியே வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கப் போகிறேன். நான் அமெரிக்காவில் இருக்கிற வரைக்கும் அப்படித்தான் செய்யப் போகிறேன். அதன் பிறகு கர்த்தர் என்னை எப்படி நடத்துகிறாரோ அப்படியாக அது நடக்கும் படி சில காரியங்களை அவ்விதமாக செய்து விட்டு, அதன் பிறகு அதை நான் அப்படியே வெளிநாடுகளுக்கு என்று விட்டு விடுவேன். ஏனென்றால் வெளிநாடுகளிலே அது நூறு அல்லது ஆயிரக் கணக்கில் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துகிறது. (நீங்கள் பாருங்கள்?) ஆனால் இங்கேயோ, அது அவ்வளவாக பிரயோஜனப் படுவதில்லை. 15. ஆகவே இப்பொழுது, நான் வார்த்தையிலிருந்து உங்களுக்கு ஒன்றை வாசிக்கப் போகிறேன். நாம் நேரடியாக அதற்குள் சென்று இதுவரை நமக்கு இருந்தவைகளிலேயே மிகச் சிறந்த ஒரு ஆராதனையாக இன்று இரவு ஆராதனையை நமக்கு மாற்றித் தருமாறு நான் தேவனிடத்தில் எதிர்பார்க்கிறேன். மேலும் நாளை இரவு சகோதரன் மேடைக்கு நடந்து வரும் பொழுது பரிசுத்த ஆவியானவர் தாமே இந்த கட்டிடம் முழுவதுமாக, ஒவ்வொரு மூலை முடுக்கிலும் அசைவாடி இந்த கூடாரத்தின் கீழாக இருக்கிற எல்லா வியாதியஸதரும் சுகமாக்கப்பட வேண்டும் என்றும் வெளியிலே கார்களில் அமர்ந்திருக்கிறவர்கள் கூட சுகமாக்கப்படுவார்கள் என்றும் நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுது எத்தனை பேர் அவரை உங்கள் முழு இருதயத்தோடும், உங்கள் முழு ஆத்துமாவோடும், உங்கள் முழு மனதோடும் நேசிக்கிறீர்கள்? ஆமென். அது அருமையாய் இருக்கிறது. இப்பொழுது நாம் அந்த ஆசீர்வதிக்கப்பட்ட அந்த வேதாகமத்தை வாசிக்கின்றதான வேளையிலே ஆயத்தமாகவும், ஜெபத்தோடும் இருங்கள். இராஜாக்களின் புஸ்தகத்தில், நாம் அதை வாசிப்போம்: அப்பொழுது அவன், கிழக்கே இருக்கிற ஜன்னலைத் திறவும் என்றான். அவன் அதைத் திறந்த போது, எலிசா "எய்யும்" என்றான். இவன் எய்த போது அவன், அது கர்த்தருடைய இரட்சிப்பின் அம்பும், சீரியரினின்று விடுதலையாக்கும் இரட்சிப்பின் அம்புமானது... வாசிக்கப்பட்ட வார்த்தையோடு கூட அவர் தாமே தம்முடைய ஆசிர்வாதத்தைக் கூட்டுவாராக! "ஒரு வில்லிலிருந்து எய்யப்பட்ட தேவனுடைய விடுதலையின் அம்பு." 16. இப்பொழுது, உங்களுக்குத் தெரியும், இல்லை - அது பார்ப்பதற்கு எவ்வளவு மர்மமாகக் காணப்பட்டாலும் அது ஒரு காரியமே இல்லை. தேவன் தம்முடைய வார்த்தையை எப்பொழுதுமே காத்துக் கொள்கிறார். அது எவ்வளவு நியாயமற்றதாகக் காணப்பட்டாலும் ஒரு காரியமே இல்லை தேவன் எப்பொழுதுமே தம்முடைய வார்த்தையை காத்துக் கொள்கிறார். மேலும் தேவன் எதைக் குறித்தாவது ஒரு வாக்குத்தத்தம் செய்வார் என்றால் தேவன் அந்த வாக்குத்தத்தை காத்துக்கொள்வார். நீங்களும் நானும் வாக்கு கொடுக்கிறோம் ஆனால் அதை செய்ய மனம் இல்லாத படியால், நாம் அதை முறித்துப் போடுகிறோம். அல்லது சில நேரங்களில் சூழ்நிலையானது நம்மை அவ்வாறு செய்ய வைக்கிறது. ஆனால் தேவன் முடிவில்லாதவராய் இருக்கிற படியால், அவர் எதிர்காலம் முழுவதையும் துவக்கத்திலிருந்தே அறிந்திருக்கிறார். மேலும் என்ன சம்பவிக்கப் போகிறது என்பதை அறியாமல் அவர் ஒரு வாக்குத்தத்தையும் செய்ய மாட்டார் ... செய்வதும் இல்லை. மேலும் அவர் எப்பொழுதுமே தம்முடைய வாக்குத்தத்தத்தைக் காத்துக் கொள்கிறார். சில நேரங்களில் அவர் தம்முடைய வாக்குத்தத்தை நிறைவேற்றுவதற்கு சுற்றி வளைத்து காரியங்களை செய்யும்பொழுது அது சற்று வேடிக்கையாக காணப்படும். ஆனாலும் தேவன் தாம் வாக்குத்தத்தம் செய்ததை எப்பொழுதுமே நிறைவேற்றுகிறார். 17. "வானத்திலிருந்து மழை வரும்" என்று சொல்லி தன்னையும் தன் குடும்பத்தாரையும் காத்துக் கொள்வதற்காக 'நோவா' தன்னுடைய நாட்களிலே அந்த பேழையை கட்டிக் கொண்டிருந்த பொழுது, அது "வினோதமாக இருக்கிறது" என்று எந்த அளவுக்கு மக்கள் நினைத்திருக்கக் கூடும்? ஆனால் அவன் சொன்ன வண்ணமாகவே தேவன் அங்கே மழையை பெய்ய வைத்தார். மேலும் நான் மோசையைக் குறித்து சிந்தித்துப் பார்க்கிறேன். எப்படியாக அந்த மோசே அந்த மலையின் பக்கவாட்டில் இருந்த அந்த எரிகின்ற முட்புதரின் அருகே, விடுதலையைக் குறித்த எல்லா நம்பிக்கையையும் இழந்து போனவனாய் இருந்திருக்கக்கூடும்! அந்த ஜனங்களின் விடுதலைக்காக ஒரு நாளிலே அவன் எவ்வளவு துணிச்சலாக நின்றான். ஆனால் அந்த விடுதலை இனியும் சம்பவிக்குமா என்ற ஒரு ஐயம்! ஆனால் தேவனுடைய வெளிச்சத்தில், அந்த எரிகின்ற முட் புதர் அருகே நின்ற பொழுது அவனுக்குள் இருந்த எல்லாம் மாறிவிட்டது. மேலும் நான் நினைக்கிறேன், இன்றைக்கும் காரியம் அதே விதமாகத்தான் இருக்கிறது. அதாவது நம்மில் அநேகர் அந்த விடுதலையின் காட்சியை இழந்து விட்டோம். நான் நினைக்கிறேன் இங்கே ஒரு சிறு பையன் எனக்கு முன்னால் உட்கார்ந்திருக்கிறான். ஒருவேளை அனேகமாக அது இளம்பிள்ளை வாதம், அந்த சிறிய கரங்கள் முறுக்கப்பட்டு. நான் நான் அங்கே ஒரு பெண்ணை எனக்கு முன்பாக ஒரு வெள்ளை பிரம்புத் தடியோடு கூட உட்கார்ந்து கொண்டிருக்கிறதை நான் பார்க்கிறேன். ஒரு - ஒரு அனேகமாக ஒரு பார்வையற்ற பெண்ணாக இருக்க வேண்டும். இங்கே ஒரு அழகான வாலிபப் பெண் சிறிய கட்டிலின் மேல் படுத்துக் கிடக்கிறாள். மேலும் அங்கே இருக்கிற உங்களில் அநேகர் உங்களைக் கொல்லப் போகிற புற்றுநோயோடும், இருதய வியாதியோடும் இன்னும் அது போன்ற வியாதிகளோடும் இங்கே இருக்கிறீர்கள். அந்த வியாதிகள் குணப்படுத்த முடியாதவைகள் என்று மருத்துவர் உங்களிடம் சொன்ன உடனேயே நீங்கள் உங்கள் விடுதலையைக் குறித்த எல்லா நம்பிக்கையும் இழந்து விட்டீர்கள். 18. ஏன், சகோதரனே நாம் எப்பொழுதாவது, மோசே செய்தது போல தேவனுடைய பிரசன்னத்திற்குள் வருவோம் என்றால், பாருங்கள்? அது அவனுக்கு ஒரு புரட்சிகரமானதாய் இருந்தது. ஏன்? அது புரட்சிகரமாக்கும். அந்த தேவனுடைய தூதனுடைய வெளிச்சத்திற்குள் அவன் வந்து, அந்த மலையின் மேல் அங்கு அவன் நின்று கொண்டிருந்த பொழுது, ஒரு நாளில் அவனுக்குள் இருந்த, இனி இதெல்லாம் சம்பவிக்கப் போவதில்லை என்கிறதான எண்ணங்கள் எல்லாம் ஒரு நிஜ ரூபத்திற்கு வந்தன. மேலும் நான் நினைக்கிறேன் மனிதர்களும் ஸ்திரீகளும் இன்றைக்கு எப்பொழுதாவது அந்த பரிசுத்த ஆவியின் வெளிச்சத்திற்குள்ளாக கால் எடுத்து வைத்து, அந்த தேவனுடைய ஆவியின் அபிஷேகத்தின் கீழாகவும் அந்த தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தின் கீழாகவும் வருவார்கள் என்றால், தேவன் வாக்குத்தத்தம் பண்ணின அத்தனை காரியங்களும் அவர்களுக்கு ஜொலித்து, மறுபடியும் நிஜமான காரியமாக இருக்கும். 19. மோசே முதலில் தோல்வி அடைந்த காரணம் என்னவென்றால், இதுதான் அந்த காரணம். அது எரிகிற முள் புதருக்குள்ளாக என்ன இருந்ததோ அதை அவன் பெற்றிராமல் இருந்தான். அதுதான் சரி. மேலும் இன்றைக்கும் நம்முடைய தோல்விக்கான காரணம் என்னவென்றால், பரிசுத்த ஆவி எதை பெற்றிருக்கிறாரோ அதை நாம் பெற்றிராமல் இருப்பது. மேலும் பரிசுத்த ஆவியானவர் எல்லா நல்ல ஈவுகளையும் நமக்காக வைத்திருக்கிறார். ஆகவே நாம் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டால், அப்பொழுது நமக்கு எல்லாம் கூடும். எல்லாம் கூடும் என்பது மாத்திரமல்ல, அது நமக்கு வாக்குத்தமும் பண்ணப்பட்டிருக்கிறது. இயேசு சொன்னார், "நீங்கள் என் நாமத்திலே பிதாவைக் கேட்டுக் கொள்ளுகிறதெதுவோ அதை நான் உங்களுக்கு அருளுவேன்" என்று. "நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், உங்களுக்கு எது வேண்டுமோ நீங்கள் கேளுங்கள் அது அப்பொழுது உங்களுக்கு அருளப்படும்." பாருங்கள்? நாம் தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்திற்குள்ளாக கால் எடுத்து வைக்கும் பொழுதும், உன்னதத்திலிருந்து வரும் பரிசுத்த ஆவியின் அபிஷேகம், அந்த வெளிச்சத்தை அதன் மேல் பிரகாசிக்கச் செய்யும் பொழுதும் சகோதரனே! அப்பொழுது கூடாத காரியங்கள் எல்லாம் சிறிய காரியங்களாக மாறி விடுகின்றன. தேவன் அவருடைய வார்த்தையை விசுவாசிக்கும்படி நம்மிடத்தில் கேட்கிறார். அந்த வார்த்தை அங்கே உள்ளே விழுந்த உடனே அதற்கு சக்தி ஊட்டுவதற்கு அவர் பரிசுத்த ஆவியை அனுப்புகிறார். வார்த்தையானது பிரசங்கிக்கப்படும் பொழுது, பரிசுத்த ஆவியானவர் அந்த வார்த்தையை கொண்டு வருகிறார், அவர் அந்த வார்த்தைக்கு சக்தி ஊட்டி தேவனுடைய ஆசீர்வதிக்கப்பட்ட வாக்குத்தத்தமாகிய அதே வெளிச்சத்தை அவர் அங்கே பிரகாசிக்கச் செய்கிறார். தேவன் சொன்னார், "நான் ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும் மற்றும் யாக்கோபுக்கும் பண்ணின என்னுடைய வாக்குத்தத்தத்தை நினைவுகூர்ந்தேன், மேலும் இப்பொழுது அதை நிறைவேற்றுவதற்கு நான் அதை அனுப்புகிறேன்" என்று. பாருங்கள்? அதன் பிறகு தேவனுடைய வார்த்தை, அவருடைய வாக்குத்தத்தம் கர்த்தருடைய தூதனுடைய பிரசன்னத்தின் மூலமாக அது பிரகாசிப்பிக்கப்படும் பொழுது, நில்லுங்கள் மோசே இப்பொழுது; அவன் தன்னுடைய வழியில் போய்க் கொண்டிருந்தான். ஆனால் தேவன் எப்பொழுதுமே தன்னுடைய வாக்குத்தத்தத்தை காத்துக்கொள்கிறார். 20. மேலும் இன்றிரவு நம்முடைய பொருள் அது எனக்கு மிகவும் பிரத்தியேகமான ஒரு பொருளாய் இருக்கிறது. அதாவது ஆகாப் மரித்ததிலிருந்து அவர்களுக்கு மிகப்பெரிய ஒரு ராஜாக்களின் வம்ச வரலாறு இருந்தது. மேலும் அவன் எப்படி மரிக்கப் போகிறான் என்பதை குறித்து எலியா அவனுக்கு சொல்லி இருந்தான். அவன் துன்மார்க்கனாய் இருந்த காரணத்தினால் தேவன் அவனுக்கு என்ன செய்யப் போகிறார் என்பதையும் மேலும் அந்த யேசபேல் அவள் செய்த அந்த பொல்லாங்கான காரியத்தின் நிமித்தம் அவள் எப்படியாக நாய்களுக்கு இரையாக்கப்படப் போகிறாள் என்பதைக் குறித்தும் எலியா சொல்லி இருந்தான். மேலும் நினைவு கூறுங்கள், என் சகோதர, சகோதரிகளே! நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுப்பீர்கள். நீங்கள் அதாவது ... நல்லது, அது தேவனுடைய சட்டமாய் இருக்கிறது. அது தேவனுடைய இயற்கையின் பிரமாணம். நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுப்பீர்கள். 21. ஆகவே இப்பொழுது, ஷ்ரீவ்போர்ட்டில் இருக்கிற அருமையான ஜனங்களாகிய நீங்கள், இது உங்களுக்கு ஒரு எச்சரிப்பாக இருக்கட்டும். நீங்கள் என்னை தேவனுடைய தீர்க்கதரிசி என்று விசுவாசித்தால், கவனியுங்கள், ஜீவ கூடாரத்திலும் மற்றும் அருகிலும் இருக்கிற ஜனங்களாகிய நீங்கள் செய்யக்கூடிய மிகச்சிறந்த காரியம் என்னவென்றால், ஒரு பழைய பாணியிலான ஜெபக்கூட்டத்தை தொடர்ந்து உடையவர்களாக இருங்கள். மேலும் ஆவியின் ஒருமைப்பாட்டை காத்துக்கொண்டு கர்த்தருடைய வருகைக்காக மேலே நோக்கிப் பார்த்தவாறு காத்துக்கொண்டிருங்கள். உங்களுக்குள் இருக்கிற எல்லா உலக காரியங்களையும் உங்களை விட்டு அகற்றுங்கள். அதை விடுவது உங்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் பரவாயில்லை, பரிசுத்த ஆவியினாலே விருத்தசேதனம் செய்து கொள்ளுங்கள். அவர் அந்த உலக காரியங்களை உங்களை விட்டு வெட்டி எறிந்து விடுவார், இப்பொழுது உங்களுக்குள்ளாக நிறைய உலகப் பிரகாரமான காரியங்கள் ஊர்ந்து வருகிறதை நான் காண்கிறேன். ஆகவே இப்பொழுது அதை வெளியே அகற்றுங்கள். அது எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் பரவாயில்லை. ஜீவ கூடாரம், நான் உங்களுக்குத் தான் பேசிக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது பாப்திஸ்ட் சகோதரர்களாக நீங்கள் உங்களுடைய ஜனங்களிடத்திலும் இதே விதமாகப் பேசி காரியங்களைச் செய்யுங்கள். ஆனால் அங்கே ஒரு வித்தியாசம் இருக்கிறதை நான் காண ஆரம்பிக்கிறேன். அது நான் வழக்கமாக வருகிற ஜீவ கூடாரம் போல் இல்லை. மேலும் இன்று இரவில் நீங்கள் நினைவு கூற வேண்டும் என்று நான் விரும்புகிறேன், நீங்கள் அந்த பழைய பாணியிலான ஜெப கூட்டங்களை வையுங்கள். உங்கள் மத்தியிலே அந்த பழைய பாணியிலான பரிசுத்த ஆவியின் நிரப்புதலைப் பெற்றிருங்கள். உலகத்தை வெளியே தள்ளி கிறிஸ்துவை உள்ளே வைத்து முத்திரை போடுங்கள். நீங்கள் ஏதோ ஒரு விதத்தில் ஜெபத்தில் குறைவுபட்டு வருகிறீர்கள். நினைவில் கொள்ளுங்கள், "நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுப்பீர்கள்" அதை மாத்திரம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 22. நான் என் ஜீவியத்தில் எந்த கண்டத்திலும், எங்குமே சென்றிராத ஒரு சிறந்த சபையை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். 'ஜீவ கூடாரம்' எனக்குப் பிரியமானவைகளில் ஒன்று. நீங்கள் செய்கிற காரியங்கள் மூலமாக உலகத்தை உங்களுக்குள்ளே நீங்கள் அனுமதித்துக் கொண்டிருக் கிறதை நான் பார்க்கும் பொழுது அது என் இருதயத்தை உடைத்துப் போடுகிறது. ஆகவே இனிமேல் அது போல் செய்யாதீர்கள். அதை உதறித்தள்ளிவிட்டு வெளியே வாருங்கள். அதிலிருந்து வெளியேற ஜெபியுங்கள். தேவன் தாமே உங்கள் மத்தியில் திரும்பி வந்து பொறுப்பெடுத்துக்கொள்வாராக. உங்களை தேவனுக்கு அர்ப்பணித்து அந்த பழைய பாணியிலான ஆசீர்வாதத்தை உங்களுக்குள் திரும்ப கொண்டு வாருங்கள். மேலும் ஷ்ரீவ்போர்ட்டில் இருக்கிற என் அன்பானவர்களே, எனக்கு அருமையான அங்கே இருக்கிறதான தெற்கத்திக்காரர்களே. நான் இதுவரை சந்தித்தவர்களில் மிகவும் அருமையான ஜனங்கள் நீங்கள். உங்களோடு ஒத்துப்போவதற்காக நான் அப்படிச் சொல்லவில்லை. நான் உங்களை நேசிக்கிறபடியினால்தான் அப்படிச் சொல்லுகிறேன். உங்களுக்கு உண்மையில் ஒரு சிறந்த கவனிப்பு வேண்டுமென்றால், உண்மையில் மிகச் சிறந்த பழைய பாணியிலான உபசரிப்பு வேண்டுமென்றால், லூசியானாவுக்கு வாருங்கள். நான் அதை என் உள்ளத்திலிருந்து உணர்ந்து சொல்லுகிறேன். மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உலகம் உங்களுக்குள்ளே ஊர்ந்து வர இடம் கொடுக்காதீர்கள். உலகம் உங்கள் சபைகளுக் குள்ளாக நுழைந்து விட இடம் கொடுக்காதீர்கள் சகோதரர்களே, அதை ஜெபித்து வெளியேற்றுங்கள். தேவன் உள்ளே வந்து எல்லாவற்றையும் பொறுப்பெடுத்துக் கொள்கிற வரைக்கும் உபவாசித்து அவைகளை வெளியேற்றுங்கள். அதுதான் சரி. பரிசுத்தவான்கள் மத்தியிலே கர்த்தருடைய சந்தோஷத்தைக் காத்துக்கொள்ளுங்கள். அவர்களை ஜெபத்திலே தாங்குங்கள். ஒவ்வொரு சிறு இடத்தையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை நோவா அவன் செய்த அந்த பேழைக்குள்ளாக ஒரு சிறு கசிவை பார்த்திருப்பான் என்றால், ஓ என்னே, அவன் அதன் மேலாக கொஞ்சம் கீலை எடுத்துப் பூசி இருப்பான். ஆகவே அந்த கசிவை அடைப்பதற்கு, உலகத்தை வெளியேற்றுவதற்கு, அந்த கசிவை தடுத்து நிறுத்துவதற்கு செய்யக்கூடிய நான் அறிந்த சிறந்த ஒன்று அதுதான். அந்த ஓட்டை இருக்கிற இடத்தை உடனடியாக கீல் பூசி அடைப்பது. அதை செய்வதற்கு இன்றைக்கு நமக்கு இருக்கிற ஒரே ஒரு வழி, அதுதான் ஜெபம். ஜெபம் கசிவை அடைக்கிறது. ஜெபம் காரியங்களை மாற்றுகிறது. 23. இப்பொழுது ஒரு நீண்ட வரிசை ராஜாக்கள் வந்திருக்கிறார்கள். ஆகாப் என்கிற அந்தப் பொல்லாதவனோ அவன் ஒரு அம்பினால் எய்யப்பட்டு கொல்லப்பட்டான். மேலும் யேசபேல் அவள் கண்களில் மை தீட்டிக் கொண்டு நடனம் ஆடவும், காதல் லீலை புரியவும் முயற்சித்த பொழுது மாடியில் உள்ள அவளுடைய அறையில் இருந்து தூக்கி வெளியே வீசப்பட்டாள், அல்லது யெகூ தன் ரதத்தில் ஏறி அங்கே சென்ற பொழுது அவளை ஜன்னல் வழியாக தூக்கி தெருவிலே எறிவதற்கு அவனுக்கு அந்த அரண்மனைக்குள்ளேயே சில பிரதானிகள் இருந்தார்கள். மேலும் அது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? ஜீவ கூடாரமே நான் உங்களுக்குச் சொல்லட்டும், பெண்களாகிய நீங்கள் உலகத்தில் உள்ள மற்ற பெண்களைப் போல நீங்களும் உங்கள் ஒப்பனை அலங்காரங்கள் மற்றும் பிற அணிகலன்களை அணிந்து கொள்ள ஆரம்பிக்கிறதை பார்க்கும் பொழுது, அன்றொரு நாள் நான் இங்கே உள்ளே நடந்து வந்த பொழுது நான் அதைப் பார்த்த பொழுது அது கிட்டத்தட்ட என்னை கொன்று போட்டு விட்டது. பாருங்கள் வேதாகமத்திலேயே தன்னுடைய முகத்துக்கு சாயம் தீட்டின ஒரே ஒரு பெண் தான் இருக்கிறாள், ஆகவே நீங்கள் தேவனை சந்திப்பதற்கு உங்கள் முகத்திற்கு சாயம் தீட்ட வேண்டாம். நீங்கள் மனிதர்களை சந்திக்க அதை செய்யலாம். ஆனால் அதை செய்த பெண் அவள் என்ன ஆனாள்? தேவன் அவளை நாய்களுக்கு இரையாக்கினார். ஆகவே நீங்கள் அதை அணிந்து கொள்ளும் பொழுதோ அல்லது மற்றவர்கள் யாராவது அதை செய்கிறதை நீங்கள் காணும் பொழுதோ, தேவன் உங்களையும் ஒரு நாயின் உணவாக மாற்றிவிட்டார் என்பதை நினைவு கூறுங்கள். 24. இப்பொழுது, இப்பொழுது, அதில் இருந்து விலகி இருங்கள். பொல்லாப்பின் முகத்திற்கு விலகி ஓடுங்கள். நான் உங்களுக்கு எரிச்சல் ஊட்டுவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் சகோதரனே, அது இங்கே இப்பொழுது தேவைப்படுகிறது என்று நான் நம்புகிறேன். அங்கே ஏதோ ஒன்று தவறாக இருக்கிறது. அங்கே ஏதோ ஒன்று... இப்பொழுது நீங்கள் என் மேல் கோபப்பட வேண்டாம் என்று நான் நினைக்கிறேன். நான் உங்கள் சகோதரன். ஆனால் அன்றைக்கு நியாயத்தீர்ப்பு நாளிலே தேவன் உங்களுக்கு முன்பாக என்னிடத்திலே கணக்கு கேட்பார். அதுதான் சரி. மேலும் இந்த முழு பெந்தெகொஸ்தே உலகமும் அவர்களும் இந்த காரியங்களை தளர்த்தி விட்டாலும் பரவாயில்லை நீங்கள் அப்படிச் செய்யாதீர்கள். நீங்கள் தேவனுக்கு உண்மையாய் நிலைத்திருங்கள். ஜெபித்து அகற்றுங்கள். சரியாக ஜீவியுங்கள். தேவனோடும் அவருடைய ஜனங்களோடும் ஐக்கியம் கொள்ளுங்கள். வேதம் கண்டனம் செய்கிற உலகப் பிரகாரமான காரியங்களை விட்டும், அவபக்தியான காரியங்களை விட்டும் வெளியே வாருங்கள். பரிசுத்த ஆவியானவர் ஜனங்களை வெளியே வரும்படி அழைக்கிறார். உங்களுக்குப் பக்கத்தில் இருக்கிறவர்கள் என்ன செய்தாலும் அது ஒரு காரியம் இல்லை. அவள் எவ்வளவு நல்லவளாக இருந்தாலும், அவர் என்ன செய்கிறார் என்பது அது காரியம் அல்ல, அந்த அவிசுவாசத்தோடு உங்களை இணைத்துக் கொள்ளாதீர்கள். அது அப்படியே உங்கள் மேலும் தாவி குதித்து விடும். ஆமென். அவர்களை விட்டுப் பிரிந்து வெளியே வாருங்கள். "வேறு பிரிக்கப்பட்டவர்களாய் இருங்கள், அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்கொள்ளுவேன்" என்று கர்த்தர் உரைக்கிறார். அது தான் சரி. அந்த காரணத்தினால் தான் இங்கே ஒரு கூடார கூட்டத்தை நடத்துவது என்பது அவ்வளவு கடினமாக இருக்கிறது. அந்த காரணத்தினால் தான் இங்கே எந்தவிதமான ஒரு கூட்டத்தையும் நடத்துவது என்பது கடினமான காரியமாய் இருக்கிறது. ஏனென்றால் அது போன்ற காரியங்களையெல்லாம் நாம் தளர விட்டு விட்டோம். நாம் ஒரு உண்மையான கூட்டத்தை இங்கே நடத்த வேண்டும். நிச்சயமாக நமக்கு அது இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு நல்ல மக்களோடு கூட. மேலும் பிரசங்கிகளாகிய நீங்கள் அவர்களுக்கு இதையெல்லாம் நீங்கள் சொல்லவில்லையென்றால், உங்கள் பாவம் நிறைந்த ஆத்துமாக்கள் மேல் தேவன் இரக்கம் பாராட்டுவராக. அதுதான் சரி. நிச்சயமாக. அங்கு ஏதோ தவறு இருக்கிறது. கிறிஸ்து உள்ளே வருவதற்கு முன்பாக உலகத்தை நீங்கள் முதலாவது வெளியேற்ற வேண்டும். அவரால் அவிசுவாசத்தோடும் உலகப்பிரகாரமான காரியங்களோடும் கூட ஐக்கியம் கொள்ள முடியாது. 25. இப்பொழுது, கவனி, நண்பனே. அங்கே அந்த எல்லைக் கோட்டு விசுவாசிகள், அவர்கள் அப்படியே கடந்து வந்து அந்த ஆகாப் வரை வந்தார்கள். அந்த ஆகாப் கடந்து சென்ற பிறகு வேறொருவன் அவன் இடத்தைப் பிடித்துக் கொண்டான். இன்னொருவன், இப்படியாக நாம் யோவாஸ் ராஜா வரைக்கும் வருகிறோம். அவன் தான் அப்பொழுது அந்த நேரத்திலே ராஜாவாய் இருந்தான். மேலும் அவன் ஒரு வெதுவெதுப்பான எல்லைக்கோட்டு பிரசங்கியாய் இருந்தான் அல்லது விசுவாசி. ஜனங்கள் என்னவெல்லாம் செய்ய விரும்புகிறார்களோ அதெல்லாம் யோவாசுக்கு சரியாகவே இருந்தது. அவன் அஞ்ஞானிகள் பலி செலுத்தி வந்த சில உயர்ந்த மேடைகளையெல்லாம் தகர்த்துப் போட்டு விட்டான். இன்னும் இதுபோன்ற சில காரியங்களையெல்லாம் அவன் செய்தான். இருப்பினும், அவன் தன் தகப்பன் செய்த பாவங்களை விட்டு விலகவில்லை. மேலும் அதே போன்று, ஜனங்கள் எப்படியெல்லாம் செல்ல விரும்புகிறார்களோ அப்படியெல்லாம் அவனும் செல்ல விரும்பினான். இப்பொழுது, அது அப்படியே சரியாக இன்றைக்கு இருக்கிற பிரசங்கிகளைப் போலவே இல்லையா? சபையார் எவ்விதமாக செல்ல விரும்புகிறார்களோ அவ்விதமாகவே பிரசங்கியும் அவர்களுக்குப் பிரசங்கம் செய்கிறார். நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்: ஒரு தேவனால் அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவினால் பிறந்த பிரசங்கி எப்படிப்பட்ட சபையோடும் ஒத்துப்போக மாட்டான். அதுதான் சரி. யோவான் ஸ்நானனை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அவர்கள் அன்று இரவு ஏரோதியாளை அங்கே கொண்டு வந்த பொழுது மற்றும் ஏரோது, ஏன் யோவான் நேராக அவனுடைய முகத்துக்கு நேராக நடந்து சென்று, அவன் சொன்னான், "நீர் உம்முடைய சகோதரனின் மனைவியை வைத்துக்கொள்வது உமக்கு நியாயமல்ல" என்றான். அந்த மனிதன் பரிசுத்த ஆவியை உடையவனாய் இருந்தான். அவன் ஒத்துப்போகவில்லை. அவன் சத்தியத்தைச் சொன்னான். ஆனால், இப்பொழுது அது எப்படி இருக்கிறது? அதெல்லாம் போய்விட்டது. நியாயத்தீர்ப்பு நாளிலே அது என்னவாய் இருக்கும்? ஏரோதியாளுக்கு முன்பாக யோவான் ஸ்நானனின் தலை உருண்டு வரும்பொழுது, அப்பொழுது அது என்னவாய் இருக்கும்? 26. சகோதரனே, நீங்கள் எப்பொழுதாவது தேவனுக்காக ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும் என்று விரும்பினால் அதை இப்பொழுதே செய்யுங்கள். இதுதான் அந்த நேரம். நமக்கு அது எப்பொழுதாவது தேவைப்பட்டிருக்கும் என்றால் அது இப்பொழுதுதான். சபையானது தராசிலே நிறுக்கப்பட்டு எப்போதாகிலும் குறைய காணப்பட்டிருக்கும் என்றால், அது இப்பொழுதுதான். இந்த மகத்தான எல்லா அற்புதங்களையும், அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்கிற மனிதர்களையெல்லாம் தேவன் தேசத்தின் ஊடாக அனுப்பிய பிறகும், இன்னுமாக சபையானது கடந்த ஆண்டுகளில் இதுவரை நான் பார்த்திராத அளவுக்கு மிகவும் பரிதாபமான பின்வாங்கிப் போன நிலையில் இருக்கிறது. அதுதான் சரி. நான் பெந்தெகொஸ்தேகாரர்களுக்குப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறேன். ஆமென். பத்து வருடங்களுக்கு முன்பாக நான் முதன் முதலாக உங்களுடைய கூட்டத்திற்கு வந்த பொழுது, அது பார்ப்பதற்கு ஒரு சபையைப் போலவே இருந்தது. ஆனால் இன்றைக்கோ அது ஒரு உலகத்தைப் போல காணப்படுகிறது. அதுதான் உண்மை. எங்கோ ஏதோ நேர்ந்து விட்டது. நீங்கள் சற்று நல்ல உடைகளை உடுத்த விரும்பினீர்கள், நீங்கள் இன்னும் சற்று கூடுதலாக பணம் சம்பாதிக்க விரும்பினீர்கள், அது என்ன செய்து விட்டது? உங்களுக்குள்ளாக இருந்த அந்த சாரத்தை வெளியே எடுத்துப் போட்டு விட்டது. அவ்வளவுதான். இப்பொழுது நீங்கள்... அதுதான் சத்தியம். அதுதான் சரி. நீங்கள் என்ன செய்ய முயற்சிக்கிறீர்கள் என்றால். நீங்கள் உலகத்தில் உள்ள மற்றவர்களைப் போல நடந்து கொள்ள முயற்சிக்கிறீர்கள். நீங்கள் இதை எடுத்துக்கொள்ளுங்கள்... இன்றைக்கு இது ஒத்துப்போகிற காலம். அதுதான் உண்மை. நீங்கள் உங்கள் வீட்டு படிக்கட்டுக்கு சிவப்பு நிற வர்ணம் தீட்டுங்கள், அதன் பிறகு கவனித்துப் பாருங்கள் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரும் அதேபோல செய்கிறாரா இல்லையா என்று. நிச்சயமாக நீங்கள் ஒரு சிறிய வட்டமான தொப்பியை அதிலே ஒரு சிறிய இறகை செருகிக்கொண்டு சபைக்கு வாருங்கள், பிறகு கவனியுங்கள் சபைக்கு வருகிற எல்லா பெண்களும் அவரவர் தலையில் ஒரு சிறிய வட்டமான தொப்பியை அணிந்து கொண்டும் அதில் ஒரு இறகை செருகிக்கொண்டும் வருவார்கள். அதுதான் சரி. ஆம் ஐயா. அவர்கள் எல்லாருக்கும் மற்றவர்களைப் போல காணப்பட வேண்டும். 27. இது பொருத்தம் பார்க்கிற நேரம். அது உண்மை என்று உங்களுக்குத் தெரியும். இது ஒரு பொருத்தம் பார்க்கிற நேரம். ஆமென். அந்த காலம் மலையேறி இருக்க வேண்டும். அதுதான் சரி. கவனியுங்கள் அது உண்மை. என் சகோதரனே நான் உனக்கு ஒன்றை சொல்லப் போகிறேன். எனக்கு என்னுடைய ஷூ என்னுடைய பேன்ட்டுக்கு பொருத்தமாய் இருக்கிறதா? அல்லது என்னுடைய பேண்ட் என்னுடைய கோட்டுக்குப் பொருத்தமாய் இருக்கிறதா? என்பது முக்கியமல்ல. என்னுடைய அனுபவம் தேவனுடைய வேதாகமத்துக்குப் பொருத்தமாய் இருக்கிறதா? அதுதான் முக்கியம். அதுதான் பொருத்துகிற நேரம். உங்களுக்கு எதையாவது பொருத்திப் பார்க்க வேண்டும் என்றால், உங்கள் அனுபவத்தை பவுலுடைய அனுபவத்தோடு பொருத்திப் பாருங்கள். ஆமென். இன்றைக்கு நமக்குத் தேவையானது அதுதான், இது வேதாகமத்தில் இருக்கிற பவுலுடைய விசுவாசத்தோடு நம்முடையதை பொருத்திப் பார்க்க வேண்டிய நேரமாய் இருக்கிறது. அதுதான் நம்முடைய உதாரணம். மிகச் சரியாக. உண்மையான பொருத்துகிற நேரம். நீங்கள் உங்களை உங்கள் பக்கத்தில் இருக்கிறவரோடு பொருத்திப் பார்க்காதீர்கள். வேதாகமத்தில் உள்ள ஏதாகிலும் ஒரு பரிசுத்தவானோடு உங்களுடைய அனுபவத்தை பொருத்திப் பாருங்கள். நீங்கள் ஒரு பரிசுத்தவானாக இருந்தால், ஒரு பரிசுத்தவானைப் போல நடந்து கொள்ளுங்கள். ஒரு பரிசுத்தவானைப் போல நடவுங்கள். ஒரு பரிசுத்தவானைப் போல உடை உடுத்துங்கள். ஒரு பரிசுத்தவானைப் போல பேசுங்கள். ஒரு பரிசுத்தவானைப் போல ஜெபியுங்கள். ஒரு பரிசுத்தவானைப் போல விசுவாசியுங்கள். ஒரு பரிசுத்தவானைப் போல கத்துங்கள். ஒரு பரிசுத்தவானைப் போல இருங்கள். ஒரு பரிசுத்தவானைப் போல ஜீவியுங்கள். ஒரு பரிசுத்தவானைப் போல மறித்து, ஒரு பரிசுத்தவானைப் போலவே பரலோகத்துக்குச் செல்லுங்கள். ஆமென். 28. வேறு பிரிக்கும் நேரம்... இந்த எல்லைக்கோடு விசுவாசம், இந்த அரைகுறை விசுவாசம் அது வெதுவெதுப்பானது, உங்களுக்குத் தெரியுமா? இப்படிப்பட்ட ஒரு காலம் வரும் என்று வேதம் சொல்லியிருக்கிறது என்று. அதுதான் லவோதிக்கேயா சபைக்காலம். அவர் சொன்னார், "நீங்கள் வெதுவெதுப்பாய் இருந்து தேவனுடைய வயிற்றில் குமட்டலை உண்டாக்குகிறீர்கள்" என்று. அவர் சொன்னார், "அவர் தம்முடைய வாயிலிருந்து உங்களை வாந்தி பண்ணி போடுவார்" என்று. 'லவோதிக்கேயா' என்பது உங்களை வியாதியுறச் செய்யும் அளவுக்கு போதுமான பக்தி உள்ளவர்களாய் இருப்பது. நாம் இன்னுமாக உலகத்தின் காரியங்களுக்காக ஏக்கம் கொண்டவர்களாக இருக்கிறோம். நீங்கள் சொல்லுகிறீர்கள், "நான் அதை செய்யாமல் இருப்பது நல்லது" என்று. ஓ சகோதரனே எனக்கு ஒன்றைச் செய்ய வேண்டும் என்று தோன்றினால் அதை நான் செய்வேன். ஆனால், இன்று இரவு உன்னை தேவனிடத்தில் மிகவும் அதிகமாக அன்பு கூறச் செய்யத்தக்க ஒரு பழைய பாணியிலான பரிசுத்த ஆவியின் அபிஷேகம் ஒன்று இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும், ஆனாலும் அதை செய்வதற்கு உங்களுக்கு மனமில்லை. ஆமென். அது சொல்லி முடியாத சந்தோஷமும், முழுவதும் மகிமை நிறைந்ததுமாய் இருக்கிறது. எப்படியாக அந்த பழைய காலத்து தேவனுடைய பரிசுத்தவான்கள் சுற்றி அமர்ந்து, தேவனுடைய வல்லமையை குறித்தும், அவருடைய இரத்தத்தைக் குறித்ததுமான அந்த மீட்பின் பாடல்களை அவர்கள் பாடுவார்கள். ஆனால் இன்றைக்கோ அது கிட்டத்தட்ட பூஜ்ஜியம் அளவிற்கு குளிர்ந்து போய்விட்டது. நீங்கள் வழக்கமாக பாடுகிற அந்தப் பண்டைய பாணியிலான அந்தப் பாடல்கள் இப்பொழுது உங்களுக்கு இல்லை. நீங்கள் னிமேல் சோள வயல்களில் இராத்தங்கி, இருட்டில் விளக்கைக் கொளுத்தி இவர் யார் என்று அவர்கள் முகத்தை நீங்கள் பார்க்கப்போவதில்லை, முழு இரவும் கைகளைக் கொட்டி பாடல்களைப் பாடி, உங்கள் கைகளை தேவனுக்கு நேராக உயர்த்தி ஜெபிக்கப் போவதில்லை. ஏன் உங்களால் தான் சபையிலேயே அரை மணி நேரம் கூட முணுமுணுக்காமலும், புலம்பாமலும் உட்கார முடிவதில்லையே! உண்மை. அதுதான் உண்மை. எல்லைக்கோடு, வெதுவெதுப்பு, லவோதிக்கேயா... என்னே, உங்களுக்கு அவமானம். 29. ஓ, எப்படிப்பட்ட ஒரு நாளில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், யோவாசுடைய நாளைப் போல, எல்லைக்கோடு, அரைகுறை, வெதுவெதுப்பு, சிணுங்குதல், காற்றைப் போல் அலைசடி படுதல், காற்றுகளால் அடியுண்டோடுகிற தண்ணீரற்ற மேகங்களைப் போல, எப்போதும் கற்றாலும் ஒருபோதும் உணர்வில்லாதவர்களாய், சத்தியத்தை அறிகிற அறிவை பற்றிக்கொள்ளாமல். எல்லாவிதமான காரியங்களாலும் அலைசடி படாதீர்கள். தொலைக்காட்சியை பார்க்கும் பொழுது அதில் வருகிற காட்சிகளில் அப்படியே அடித்துக்கொண்டு போய் விடாதீர்கள். இன்றைக்கு சில கிறிஸ்தவர்கள் ஏன் புதன்கிழமை ஆலயத்துக்கு வராமல் வீட்டிலேயே தங்கி விடுகிறார்களென்றால், ஏதோ ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்ப்பதற்காக. அது உண்மை என்று உங்களுக்குத் தெரியும். ஏன் அது அங்கே இருக்கிற எல்லா விதமான ஹாலிவுட்டுக்கான திறந்த வாசல் என்று உங்களுக்குத் தெரியும். ஏன் அது ஒரு கூட்டம் வேசிகளை தவிர வேறொன்றுமில்லை என்றும், இன்னும் சில அவலட்சணமான காரியங்கள்... உங்களுக்குத் தெரியும். காவல்துறை பதிவுகளில் பாருங்கள்; என்னிடம் அவை இருக்கின்றன. காவல்துறை பதிவுகளில், அங்கே அந்த சினிமா நட்சத்திரங்களுடைய லட்சணத்தை நீங்கள் பார்க்கலாம். நீங்களோ அவர்களைப் போல நடந்து கொள்ள விரும்புகிறீர்கள்? கிறிஸ்துவுக்கு என்ன நேரிட்டது? வேதத்தில் உள்ள பரிசுவான்களுக்கு என்ன நேரிட்டது? நீங்களோ ஹாலிவுட்களைப் போல வாழ விரும்புகிறீர்கள். ஹாலிவுட்களைப் போல உடை உடுத்தவும், ஹாலிவுட்களைப் போல நடந்து கொள்ளவும் விரும்புகிறீர்கள். அதற்குக் காரணம் என்னவென்றால், நீங்கள் மேடை மீது நின்று, மேலும் கீழும் குதித்து, காணிக்கைக்காக மாத்திரம் இரண்டு மணி நேரத்தை செலவழிக்கிற ஏராளமான ஹாலிவுட் சுவிசேஷப் பிரசங்கிகளை பெற்றிருக்கிறீர்கள். நாம் அவர்களை விட்டு வெளியேறி, தேவன் மீது விசுவாசம் வைத்து, ஜெபத்திலே முகம் குப்புற விழுந்து, இருதயத்தை ஊற்றி தேவன் அனுப்பின பழைய பாணியிலான பரிசுத்த ஆவியின் எழுப்புதலை மீண்டும் கொண்டு வர வேண்டும். ஆமென். அது சரி. இப்பொழுது நாம் நடந்து கொள்ளுகிற விதமானது அவமானத்துக்குரியதாய் இருக்கிறது. தேவனிடத்தில் திரும்புங்கள். 30. இப்பொழுது, அந்த ராஜா, அவன் நினைத்தான் காற்று எந்த திசையிலெல்லாம் அடிக்கிறதோ அந்த திசையிலெல்லாம், எல்லாவற்றாலும் அலைசடி பட்டுக்கொண்டு அப்படியே போகலாம் என்று அவன் நினைத்தான். ஏனெனில் நீங்கள் ஒருபோதும் நிலையாய் இருப்பதில்லை. நீங்கள் எதை விசுவாசிக்கிறீர்கள் என்றே உங்களுக்குத் தெரியவில்லை. இன்றைக்கு மக்கள் சபைக்கு வருவதற்குப் பதிலாக வீட்டிலேயே இருந்து கொண்டு "அன்பே வா" அல்லது வேறு என்ன? "காதல் பைத்தியம்" அதுபோல ஒன்று, அவர்கள் மிகவும் பைத்தியமாய் இருக்கிறார்கள். நான் அதை மறுபடியும் எடுத்துக்கொள்வேன். அவர்கள் போதிய அளவுக்கு பைத்தியம் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நரகத்திற்கு நேராக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக. அஞ்ஞானிகளுக்கு அது பரவாயில்லை. ஆனால், அது கிறிஸ்தவர்களுக்கு அல்ல. அது சரி. அது கிறிஸ்தவர்களுக்கு அல்ல. கிறிஸ்தவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள். ஆனால், அவர்கள் தேவனுடைய வார்த்தையை நேசிப்பார்கள். உங்களுக்குள் இருக்கிற ஏதோ ஒன்று அது போன்ற புத்தி கெட்ட காரியங்கள் மேல் மேய்ந்து கொண்டிருக்கும் என்றால், நீங்கள் மனந்திரும்ப வேண்டும். அதுதான் சரி. உங்களுடைய அந்த எல்லா பழைய ராக் அண்டு ரோல் மற்றும் பூகி வூகி, அது எங்கிருந்து வந்தது? ஆப்பிரிக்காவின் மையப் பகுதியில் இருந்து. நான் இப்பொழுதுதான் ஆப்பிரிக்காவை விட்டு வந்தேன். பெண்களாகிய நீங்கள் உங்கள் முகத்தில் அந்த சாயங்களை பூசிக்கொண்டு அலைகிறீர்கள். அது எங்கிருந்து வந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? அது ஒரு அஞ்ஞானிகளின் அடையாளம். அது அவர்கள்தான் தங்கள் முகங்களில் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்கள். அங்கிருந்து தான் நீங்கள் அதை பெற்றுக் கொண்டீர்கள். அஞ்ஞானிகள் தான் அப்படிச் செய்கிறார்கள். கிறிஸ்தவர்களோ தங்கள் முகங்களைக் கழுவி, ஆமென். அது சரி. இது சற்று உங்களுக்கு எரிச்சல் ஊட்டுவதாக தான் இருக்கும் சகோதரனே, நீ கொஞ்சம் எரிச்சல் அடைவது நல்லது தான். வேறு எங்கோ போய் நீ எரிவதை விட, இங்கேயே அது உன்னை எரிக்கட்டும். ஆகவே, நீ இப்பொழுதே உன்னை சரிப்படுத்திக்கொள்வது நல்லது. ஆமென். 31. தேவன் சத்தியத்தை நேசிக்கிறார். மேலும் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். நீங்கள் சத்தியத்தை அறிந்து கொள்ள வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். கிறிஸ்துவே சத்தியமாய் இருக்கிறார். அந்த பரிசுத்த ஆவி...? (சபையார் ஆராதிக்கிறார்கள்] அவர் இப்பொழுது இங்கே இருக்கிறார். அந்த பரிசுத்த ஆவியானவர், விருப்பம்..?வல்லமை..? அவருடைய வார்த்தையை எண்ணிப்பார்க்கும் பொழுது. மேலும் அந்த பரிசுத்த ஆவி உனக்குள் இருப்பாரென்றால் அவர் தேவனுடைய வார்த்தையின் மேல் பசியாறுகிறார். தொலைக்காட்சியில் அல்ல. உண்மையான கதை. பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் அல்ல. அது ஜனங்களாகிய நீங்கள் தான் உங்களுக்கு நீங்களே ஒரு போர்வையை போர்த்திக்கொண்டு, உங்களை நீங்களே கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்ளுகிறீர்கள். பிறகு உங்கள் பிள்ளைகள் ஏன் அப்படிச் செய்ய மாட்டார்கள்? சற்று சற்று இங்கே பாருங்கள், ஒரு மூன்று மாதத்திற்குள்ளாக இந்த தேசம் முழுவதும் இருக்கிற ஐந்து வயதிலிருந்து பதினெட்டு வயது வரைக்கும் இருக்கிற எல்லா சிறு பிள்ளைகளும் டேவி க்ரோக்கெட் யார் என்பதை அறிந்து வைத்திருக்கிறார்கள். தெருவெல்லாம் எங்கு பார்த்தாலும் டேவி க்ரோக்கெட் என்று பாடிக் கொண்டிருக்கிறார்கள். அது என்ன? அது ஒரு முட்டாள்தனமான கற்பனை கதை. அந்த டேவி க்ரோக்கெட் என்பவன் மூன்று வயது குழந்தையாக இருக்கும் பொழுதே ஒரு கரடியை கொன்றானாம். ஆனால் பிள்ளைகள் எல்லாம் கூன் (மரநாய்)தோலிலான தொப்பியை அணிந்து கொண்டு, இடுப்பிலே துப்பாக்கியை வைத்துக்கொண்டு, இன்னும் மற்ற எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு திரிந்து கொண்டிருக்கிறார்கள். ஓ அந்த பத்து சென்ட் (Ten Cent Mall) கடை முழுவதும் இதனால் தான் நிறைந்திருக்கிறது. இன்னும் எங்கு பார்த்தாலும். அது முட்டாள் தனம். ஆனால் தேவனுடைய செய்தியை பெற்றிருக்கிற கிறிஸ்தவர்களாக நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? இந்த உலகமானது அது போன்ற ஒரு முட்டாள்தனமான காரியத்தை ஒரு கற்பனையான காரியத்தை பிள்ளைகள் மத்தியிலே அந்த அளவுக்கு அவர்களால் அதை பரவச் செய்ய முடியுமானால், கிறிஸ்தவர்களாக நாம் எந்த அளவுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை குறித்தும், பரிசுத்த ஆவியின் வல்லமையை குறித்தும் அவருடைய உயிர்த்தெழுதல் மற்றும் நித்திய ஜீவன் மற்றும் கர்த்தருடைய வருகையை குறித்த காரியங்களை பரவச் செய்யலாம். இன்று இரவிலே நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான சிறுபிள்ளைகள் இந்த அமெரிக்க தேசத்தில் டேவிட் க்ரோக்கெட் குறித்து அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவை குறித்து ஒரு வார்த்தை கூட அவர்களுக்கு தெரிவதில்லை. 32. என்ன ஆயிற்று? அதனால்தான் அவர்கள் வீடுகளிலேயே உட்கார்ந்து கொண்டு வேதத்திற்கு பதிலாக தொலைக்காட்சி பெட்டிக்குள்ளாக தங்கள் தலைகளை திணித்துக் கொண்டிருக் கிறார்கள். தொலைக்காட்சியை குறித்து நான் தவறாக சொல்ல வரவில்லை, அது தேவனுடைய திட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டால் அது நல்லது. அது முதலாவது தேவனுடைய வழியாய் இருந்தது. அந்த காற்று அலைகள், இன்னும் மற்றவைகளையெல்லாம் யார் உண்டாக்கினது. ஆனால் பிசாசு அவைகளையெல்லாம் எடுத்துக் கொண்டு அவைகளை தாறுமாறுக்கி விட்டான். தொலைக்காட்சி அதுவாக தான் இருக்கிறது. ஹாலிவுட் அதைப் பிடித்துக்கொண்டது... அது எதைப் பிடித்துக் கொண்டாலும் அது அழுகிப் போய் விடுகிறது. ஏனென்றால் அதற்குள் சிக்கிக்கொண்டால் அவர்களால் வேறு எதற்கும் வெளியே வர முடிவதில்லை. ஒரு குற்ற பத்திரிகையில் நான் படித்தேன், அங்கே இந்த மிகவும் பிரபலமான அந்த பெண்மணி அவள் தெருக்களில் நின்று ஒரு இரவுக்கு ஐம்பது டாலருக்கு அவள் தன் கற்பை விற்கிறாள், அப்படியாக அநேகம் மனிதர்களோடு அது போன்ற காரியங்களை இங்கும் அங்குமாக சென்று கடற்கரைகளிலும் அதை செய்து கொண்டிருக்கிறாள். அதன் பிறகு அங்கிருந்து ஓடிப்போய் ஒரு நான்கு அல்லது ஐந்து கணவன்மார்களை வைத்துக்கொள்கிறாள். ஆனால், சிறு பிள்ளைகளாகிய நீங்கள் அவளை உங்களுடைய முன் மாதிரியாக பின்பற்ற விரும்புகிறீர்கள். அதேபோல உங்களுக்கு வருகிற கணவன் அந்த திரைப்பட நடிகர்களைப் போலவும் இன்னும் மற்ற நட்சத்திரங்களைப் போலவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அவர்கள் பெண்களோடு அவ்வளவு நெறி கெட்ட விதத்தில் வாழ்ந்து வாழ்க்கையின் இயற்கையான கண்ணியமே கெட்டுப் போகும் அளவுக்கு அவர்கள் அதை தாறுமாறாக்கி விடுகிறார்கள். ஆனால் நீங்களோ வாழ்ந்தால் அவர்களைப் போல வாழ வேண்டும் என்று சொல்லுகிறீர்கள்? அங்கே கல்வாரியை நோக்கிப் பாருங்கள். அங்கே ஒரு மனிதன் சிலுவையில் தொங்கி மரித்தார். மனிதர்கள் நோக்கிப் பார்த்து ஜீவிக்கும்படியாக இது வரை இந்த உலகத்திலே வைக்கப்பட்ட ஒரே சரியான சிறந்த முன்மாதிரி யார் என்றால்? அது அந்த மனிதனாகிய இயேசு கிறிஸ்து. அது தான் சரி. ஆனால் நாம் எல்லோரும் நம்மை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொண்டு இது போன்ற காரியங்களில் நம்முடைய ஆத்துமாக்களில் ஒப்புரவாகி விடுகிறோம். உலகம் கசிந்து உள்ளே வருவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏதோ ஒன்று சம்பவிக்கப் போகிறதில் நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆத்துமாக்களை சிலிர்க்கச் செய்யக்கூடிய கூட்டங்கள் இனிமேல் இருக்கப்போவதில்லை என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால், உலகம் கசிந்து உள்ளே வந்து விட்டது. எல்லைக்கோடு, அரைகுறை, இரண்டும் கெட்டான், என்னே! எப்பேர்பட்ட ஒரு நிலை. 33. இப்பொழுது இவைகளையெல்லாம் சந்தித்த பிறகும், இன்னுமாக அங்கே ஒரு நம்பிக்கை இருக்கிறது என்று உங்களுக்கு காண்பிக்கப் போகிறேன்... அன்றைக்கு அந்த ராஜாவாகிய யோவாஸ் அந்த தீர்க்கதரிசி வியாதியாய் இருக்கிறார் என்று அவன் கேள்விப்பட்ட பொழுது, அவன் அவனை சந்திக்கும் படியாக இறங்கி சென்றான். மேலும் அவன் அவனை சந்திக்க சென்ற பொழுது, அவன் அவமரியாதையோடு கூட வரவில்லை. அவன் மரியாதையோடு கூட வந்திருக்க வேண்டும். அவன் அங்கே நடந்து சென்றான். மேலும் அந்த தீர்க்கதரிசியை மரியாதையோடு கூட சந்திக்க வேண்டும் என்பதில் அவன் தனக்குள்ளே போதுமான அளவுக்கு தேவனை உடையவனாய் இருந்தான். ஆகவே அங்கு அவன் நடந்து சென்று அவனைப் பார்த்து, அழுது, அவன் சொன்னான், "என் தகப்பனே! என் தகப்பனே! இஸ்ரவேலின் ரதமும், குதிரை வீரருமாய் இருந்தவரே! என்றான்." மேலும் அவன் அப்படி செய்த பொழுது... பாருங்கள், அந்த விதமாகத்தான் நீங்கள் தேவனிடத்திலிருந்து எதையாவது பெற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே இது போன்ற ஒரு கூட்டங்களுக்கு வந்து இங்கே வேடிக்கை விளையாட்டுகளை செய்து கொண்டு இருக்காதீர்கள். இங்கே வந்து இங்கிருந்து ஏதாவது ஒரு காரியத்தை எடுத்துக்கொண்டு வேறு இடத்துக்கு போய் கோள் சொல்லிக்கொண்டும் கதை சொல்லிக்கொண்டும் இருக்காதீர்கள். அப்படி நீங்கள் செய்வீர்களென்றால் நீங்கள் ஒருபோதும் தேவனிடத்தில் வந்து சேர மாட்டீர்கள். ஆகவே வாக்குவாதம் செய்கிற நோக்கத்திற்காக வேதத்தை வாசிக்காதீர்கள். ஜீவிப்பதற்காக வேதத்தை வாசியுங்கள். அதுதான் சரி. 34. ஆகவே அவன் அங்கே இறங்கி சென்ற பொழுது, அவன் அந்தத் தீர்க்கதரிசியை பார்த்தான், அவருக்கு மரியாதை செலுத்தினான். அவன் சொன்னான், "என் தகப்பனே! என் தகப்பனே! இஸ்ரவேலின் ரதமும், குதிரை வீரருமாய் இருந்தவரே" என்றும், வேறு வார்த்தையில் சொல்லவேண்டுமானால், "என் தகப்பனே! என் தகப்பனே! நீர் இஸ்ரவேலில் இருக்கிற எல்லா ரதங்களைக் காட்டிலும், எல்லா குதிரை வீரர்களைப் பார்க்கிலும், மற்றவைகளைப் பார்க்கிலும் நீர் மேலானவராய் இருக்கிறீர்" என்றான். மேலும் அது எவ்வளவு உண்மையாய் இருக்கிறது? இன்றிரவு நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எலியா என்பவன் ஒரு பரிசுத்த உருளை என்றும் ஒரு மத வெறியன் என்றும் நவ நாகரீக உலகத்தாலே கருதப்பட்டிருந்தாலும், அவனுடைய பிரசன்னம் அந்த தேசத்திலே அவர்கள் பெற்றிருந்த எல்லா குதிரைகள் மற்றும் ரதங்கள் மற்றவைகளைப் பார்க்கிலும் மேலானதாய் இருந்தது. மேலும் நான் உங்களுக்கு சொல்லுகிறேன், அதாவது இன்று இரவிலே ஒரு பண்டைய பாணியிலான பரிசுத்த ஆவியின் கூடாரக் கூட்டம் என்பது நீங்கள் பத்து லட்சம் வருடங்களில் தயாரிக்கக்கூடிய அணுகுண்டுகள் எந்த அளவுக்கு உங்களை காப்பாற்ற முடியுமோ அதைவிட மேலாக காப்பாற்ற முடியும். ஆமென். மரியாதைகள்... அவன் போய் இப்படிச் சொல்லவில்லை, இப்பொழுது, ஏய், பரிசுத்த உருளையே! உன்னைக் குறித்து என்னுடைய பாஸ்டர் என்ன சொன்னார் என்று உனக்கு தெரியுமா? அவன் அப்படிச் செய்யவில்லை. அவன் மரியாதையோடு அங்கே நடந்து சென்று அவனைப் பார்த்து, அவன் மேல் விழுந்து அழுது, ஏனென்றால், அவன் அவனை மரியாதையோடு கூட வந்து சந்தித்தான். தேவனும் அவனுக்காக மரியாதை வைத்திருந்தார். தேவன் சொன்னார், "இப்பொழுது" எலியாவை பார்த்து "எழுந்திரு" அந்த எலியா எழுந்திருந்தான். மேலும் அங்கே அவர்கள் தங்களுடைய பின்வாங்கி போன நிலையில் மற்றொரு தேசத்தினாலே அவர்கள் வளைந்து கொள்ளப்பட இருந்தார்கள். அது சீரியர்கள். அவர்கள் இவர்களை வளைந்து கொள்ளும்படியாக வந்து கொண்டிருந்தார்கள். அதை எலியா அறிந்து கொண்டான். ஆனால் இந்த ஒரு மனிதன் தன்னை தாழ்த்தினதினால் தேவனுக்கு முன்பாக தன்னை தாழ்த்தி அவன் சொன்னான், "ஓ என் தகப்பனே! நீர் எவ்வளவாய் எங்களுக்கு தேவைப்படுகிறீர்" என்று. தேவன் அதை கனப்படுத்தினார். அவன் எலியாவை கணப்படுத்தினான் இப்பொழுது தேவன் அந்த ராஜாவை கனப்படுத்தினார். அதேபோல நீங்களும் தேவனுடைய வேதாக மத்துக்கும், தேவனுடைய பரிசுத்த ஆவியானவருக்கும் மரியாதை கொடுப்பீர்களென்றால் அப்பொழுது அவர் உங்களுக்கு மரியாதை கொடுப்பார். ஆமென். அப்படியெல்லாம் இல்லை என்று சொல்லி எனக்கு முரண்பட முயற்சிக்க வேண்டாம். அப்படியே விசுவாசியுங்கள். அவ்வளவுதான். 35. இப்பொழுது அவனை கவனியுங்கள். மேலும் எலியா சொன்னான், "நீர் போய் உம் வில்லை எடும்" என்று. அவன் போய் அந்த வில்லை எடுத்து அதற்குள் ஒரு அம்பை வைத்தான். "கிழக்கே இருக்கிற ஜன்னலை திறவும்" என்று சொன்னான். கிழக்கிலிருந்து தான் இயேசு வருவார். மேலும் அவன் சொன்னான் "இப்பொழுது கவனியும், இப்பொழுது நீர் அந்த அம்பை அந்த வில்லில் வைத்து பின் நோக்கி எவ்வளவு தூரம் இழுக்க முடியுமோ அவ்வளவு தூரமாக இழும்" என்றான். மேலும் அவன் சொன்னான், "எய்யும்" என்று. அவன் எய்தபொழுது என்ன நடந்தது? அந்த அம்பு புறப்பட்டு சென்றது. அவன், "அந்த அம்பை கொண்டு வாரும்" என்று சொன்னான். அவன் திரும்பி வந்த பொழுது அவன், "தரையிலே அடியும்" என்று சொன்னான். அவன் தரையிலே மூன்றுவிசை அடித்து நின்றான். அப்பொழுது தீர்க்கதரிசி அவன் மேல் கோபம் கொண்டு, அவன், "ஏன் நீர் இன்னும் அதிக தடவை அடித்து இருக்க வேண்டியது, ஆனால் ஏன் மூன்றுவிசை மாத்திரம் அடித்தீர், நீர் அதிக தடவை அடித்து இருக்கலாமே" என்றான். அவன் சொன்னான் நீர் மூன்றுவிசை அடித்ததினால் நீர் மூன்றுவிசை மாத்திரம் சீரியர்களை முறியடிப்பீர் என்றான். அவன்... அது அதைக் குறித்து என்னவென்றால், அதே காரியம் தான் இன்று இரவு கிறிஸ்தவ சபையில் சம்பவிக்கிறது. நாம் தேவனுடைய விடுதலையின் அம்பை எய்திருக்கிறோம். அதுதான் என்று அவர் சொன்னார். தேவன் தம்முடைய விடுதலையின் அம்பை நமக்கு அனுப்பினார். விடுதலையின் அம்பு என்னவென்றால் தேவனுடைய அன்பு என்ற வில்லிலிருந்து எய்யப்பட்டு நம்மிடம் வந்த பரிசுத்த ஆவி தான் அது. அது சரி. நித்தியத்திலிருந்து நித்தியம் வரைக்கும் இருக்கிற தேவனுடைய அன்பின் நாணை இழுத்து பெந்தெகொஸ்தே நாளிலே அந்த விடுதலையின் அம்பை சபைக்குள் தேவன் எய்தார். ஆமென். மேலும் சபையின் கையில் அது கொடுக்கப்பட்டிருக்கிறது... அல்லேலூயா. சபையின் கையில் தேவனுடைய விடுதலையின் அம்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆமென். சபை எப்படிப்பட்ட குழப்பத்துக்குள் இருந்தாலும் அதற்குள்ளாக இருந்து பரிசுத்த ஆவியானவர் அதை விடுவிக்க முடியும். ஆனால் அதைக் கொண்டு அது என்ன செய்யப் போகிறது? அவர்கள் அந்த அம்பை எடுத்து மூன்று முறை தான் அடித்தார்கள். அது அந்த பின்வாங்கிப்போன ராஜா செய்தது போல. அவர்கள் ஒரு முறை அம்பு எய்து, "நல்லது நாம் சபைக்கு கட்டிடங்களை கட்டுவோம், அவ்வளவு தான். நாம் வேத சாஸ்திரத்தை போதிப்போம், அவ்வளவுதான். நாம் மனோதத்துவத்தை போதித்து, ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்குவோம்" என்றார்கள். அவ்வளவு தூரம் தான் உங்களால் அடிக்க முடிந்தது. ஆனால் அநேக ஆசிர்வாதங்களை அவர்களால் பெற முடியவில்லை. 36. மேலும் இன்றிரவு சபை... எனக்கு செவி கொடுங்கள். சபை இன்றிரவும் அடிக்கிறது ஆனால் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற முடியாத அளவுக்கு அடிக்கிறது. பாவத்திலிருந்து விடுதலை பெற முடியாத அளவுக்கு அடிக்கிறது. மேலும் அது ஒரு முறை அடித்து, "ஓ நான் சபையை சேர்ந்து கொண்டேன்" என்று சொல்லுகிறது. சகோதரனே, அந்த பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை நீ பெரும் பொழுது, அது உனக்குள் இருக்கிற அந்த பழைய முன்கோபத்தை உன்னிருந்து எடுத்துப்போடுகிறது. சகோதரியே, அது உன் மேல் ஒரு உடையை உடுத்தி உன்னை ஒரு சீமாட்டியை போல நடந்து கொள்ள செய்கிறது. அது உன்னுடைய புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டு விட செய்கிறது. குடி, பொய், திருட்டு இன்னும் எல்லாவற்றையும். சகோதரனே, நீ அந்த பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக் கொள்ளும் பொழுது அது உன்னை வேறு பிரிக்கிறது. அது உன்னை உலக காரியங்களிலிருந்து விடுவிக்கிறது. ஆமென். அது உன்னை தேவனிடத்தில் அன்பு கூறச் செய்கிறது. அது உன்னை சபைக்கு செல்லத் தூண்டுகிறது. அது உன்னை தேவனை தொழுது கொள்ளச் செய்கிறது. அது உன்னை அதைக் குறித்து உன் அண்டை வீட்டுக்காரரிடம் சாட்சி சொல்ல செய்கிறது. அது உன்னை பாவத்திற்கு மேலாக ஜீவிக்க செய்கிறது. அல்லேலூயா. 37. ஆனால் நவீன சபை அதற்கு குறைவாக தான் அடித்திருக்கிறது. அவர்கள் வெறுமனே அடித்து, "எங்களுக்கு ஒரு சபை கிடைத்துவிட்டது என்று சொல்லுகிறார்கள். எங்களுக்கு ஒரு நல்ல போதகர் கிடைத்திருக்கிறார் என்று சொல்லுகிறார்கள். எங்களுக்கு வேத சாஸ்திரம் இருக்கிறது, உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் அவ்வளவு தான். வேதத்தில் இருக்கிற ஒவ்வொரு வாக்குத்தத்தமும் என்னுடையது. ஒவ்வொரு அதிகாரமும், ஒவ்வொரு வசனமும், ஒவ்வொரு வரியும், அல்லேலூயா. தேவன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை அனுப்பினார். மேலும் அவர் அதை அவர் அதை சபையின் கையில் ஒப்புக்கொடுத்தார். அதாவது தேவனுடைய விடுதலையின் அம்பு எதற்காக என்றால், வியாதிகளிலிருந்தும், பாவங்களிலிருந்தும், வருத்தங்களிலிருந்தும், தொல்லைகளிலிருந்தும், உலக காரியங் களிலிருந்தும் இன்னும் எல்லா காரியங்களிலிருந்தும் ஜனங்களை விடுதலை செய்வதற்காக. ஆனால் அவையெல்லாம் கிடைக்காத அளவுக்கு நாம் குறைவாக அடிக்கிறோம். ஆமென். அந்த முதல் கூட்ட யூதர்கள் செய்தது போல் அல்ல. அவர்கள் தேவன் அவர்களுக்காக வைத்திருந்த எல்லாவற்றையும் பெற்றுக் கொள்ளத்தக்கதாக அடித்தார்கள். அவர்களிடத்தில் எல்லா விதமான அற்புதங்கள், அடையாளங்கள், அதிசயங்கள், பல்வேறு விதமான பரிசுத்த ஆவியின் வரங்கள், இன்னும் எல்லாமும் அவர்களிடத்தில் இருந்தது ஆனால் நாமோ அவைகளெல்லாம் கிடைக்காத அளவுக்கு குறைவாக அடிக்கிறோம். 38. அந்த பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இந்த கடைசி நாட்களில் மேற்கத்திய நாடுகளில் உள்ள புற ஜாதிகளிடத்துக்கு வந்தது. மேலும் தேவன் தம்முடைய விடுதலையின் அம்பை நம் மேல் எய்தார். ஆனால் நாமோ நமக்கு நாமே ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கிக்கொண்டு, "ஓ நான் 'தேவ சங்கம்' அல்லேலுயா. நான் 'தேவனுடைய சபையை சேர்ந்தவன், தேவனுக்கு மகிமை, அல்லேலுயா' என்று சொல்லுகிறோம். அது உங்களுக்கு ஒரு துளி கூட நன்மை உண்டாக்கப் போவதில்லை. நல்லது. சகோதரா, நீ ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கும்படியாக தேவன் உன்னை அடிக்கச் சொல்லவில்லை. அது பிசாசின் வல்லமைகள், வியாதிகள், பாவம், அசுத்தங்கள், பின் புரளி பேசுவது, சபிப்பது, ஓ என்னை! உலக காரியங்கள் அவைகளிலிருந்து விடுதலை பெறத்தக்கதாக ஒவ்வொரு தனி நபரும் தங்களுக்கென்று அடிக்கும்படியாக கொடுக்கப்பட்டது. ஆமென். ஆனால் நாம் குறைவாக அடிக்கிறோம். ஓ நாம் சபைக்கு கடந்து சென்று, ஒரு சபையை சேர்ந்து கொண்டு எல்லாம் அவ்வளவு தான் என்று நாம் நினைத்துக் கொள்ளுகிறோம். அது எல்லாம் அல்ல. சரியா? சகோதரனே தேவனுடைய எந்த ஒரு ஆசீர்வாதமும் குறைவு படுகிற அளவுக்கு குறைவாக அடிக்காதே. வேதம் சொல்லுகிறது, "இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார்" என்று. அப்படிச் சொல்லி அடி. ஆமென். பயப்படாதே. தேவன்,"நானே உன்னை குணமாக்குகிற கர்த்தர்" என்று சொன்னார். தேவன் அப்படிச் சொல்லியிருக்கிறார் என்று சொல்லி அடி. அதுதான் தேவனுடைய விடுதலையின் அம்பு. அது இன்றைக்கு சபைக்குள்ளாக கொடுக்கப்பட்டிருக்கிறது. 39. நாம் ஒரு வரலாற்று தேவனைக் குறித்து பேசுகிறோம். இன்று இரவு காரியம் அது தான். சபை இன்றைக்கு அவ்வாறுதான் கற்பிக்கப்பட்டிருக்கிறது ஏதோ ஒரு வரலாற்று காரியத்தை சொல்லி அதை இன்றைய காலத்துக்கு பொருத்திப் பார்க்கும்படியாக கற்றுக்கொடுக்கப்படவில்லை. எலியாவின் தேவனாய் அவர் இருந்து அதே விதமாய் இன்று இரவில் அவர் இல்லை என்றால், அதனால் என்ன பிரயோஜனம்? அன்று மோசேயின் தேவனாய் இருந்து எபிரேய பிள்ளைகளை எகிப்திலிருந்து விடுதலை செய்து, ஆனால் அதே தேவனாய் இன்று இரவு அவர் இல்லை என்றால், அதனால் என்ன பிரயோஜனம்? அன்றைக்கு அங்கே கலிலேயாவின் கடற்கரையில் நடந்து குருடர்கள் கண்களைத் திறந்து, செவிடர்களையும் ஊமைகளையும் கேட்கவும், பேசவும் வைத்து, பிணியாளிகளையும், குஷ்டரோகிகளையும் சொஸ்தமாக்கி, மரித்தோரை உயிரோடெழுப்பி ஆனால் இன்று இரவிலே அவர் அதே தேவனாக இல்லாதிருப்பார் என்றால், அவர் எந்த அளவுக்கு நல்லவராய் இருக்க முடியும்? அல்லேலூயா. ஆமென். அவர் எந்த அளவுக்கு நல்லவராய் இருப்பார்? உங்கள் பையன்களுக்கு ஒரு மகத்தான கல்வி அறிவு மற்றும் எல்லா வரலாறு மற்றும் எல்லா வேத சாஸ்திரம் மற்றும் வேத பாடங்களை எல்லாம் அவர்களுக்கு கற்பித்து, வரலாற்றில் அவர் இப்படிச் செய்தார், அவர் அப்படிச் செய்தார் என்று விடிய விடிய சொல்லி விட்டு, அதன் பிறகு நீங்களே அவர்களிடம் "ஆனால் அந்த அற்புதங்களின் நாட்களும், அவர் செய்த அந்த மகத்தான காரியங்களும் அதெல்லாம் கடந்து போய்விட்டன" என்று சொல்வீர்களென்றால், அந்த வெறும் வரலாற்றை தெரிந்து கொண்டது அவர்களுக்கு என்ன நன்மையை உண்டாக்கும்? உங்களுடைய கோழிகளுக்கு எல்லாவிதமான சம்பிரதாய தீனிகளையும் போட்டு வயிறார போஷித்து அதன் பிறகு அவைகளை வெளியே போக விடாமல் கூண்டுக்குள்ளே தள்ளி கட்டிப்போட்டு விடுவீர்களென்றால், அதனால் என்ன பிரயோஜனம்? 40. இன்றைக்கும் காரியம் அதே விதமாகத்தான் இருக்கிறது, நம்முடைய எல்லா படிப்பறிவைக் கொண்டும், நம்முடைய எல்லா வேத சாஸ்திரங்கள் மற்றும் நம்முடைய எல்லா ஸ்தாபனங்கள், கோட் பாடுகள் அதையெல்லாம் கொண்டு"அற்புதங்களின் நாட்களெல்லாம் கடந்து போய்விட்டது என்றும், அது போன்ற ஒரு காரியம் இன்றைக்கு கிடையாது, அவர்கள் இன்றைக்கு சுகமாக முடியாது, பரிசுத்த ஆவியின் அபிஷேகம், அது, இது என்று அவர்கள் சொல்லுகிறதெல்லாம் பைத்தியக்காரத்தனம்" என்றெல்லாம் சொல்லி மக்களை நாம் கட்டிப்போட்டு விடுகிறோம். நீங்கள் அவர்களை மறுபடியும் கூண்டில் அடைத்துப் போட்டு "தேவன் அனேக வருடங்களுக்கு முன்பே நம்மை விட்டுப் போய்விட்டார்" என்று சொல்லப் போகிறீர்கள் என்றால், அவர்களுக்கு நீங்கள் வேதத்தைப் பிரசங்கித்து என்ன பிரயோஜனம்? அன்றைக்கு எப்படி அவர் எல்லாரையும் விடுதலை செய்தாரோ அதேபோல இன்றைக்கு அவர் செய்ய மாட்டார் என்றால், அவர் நமக்கு ஒரு பிரயோஜனத்துக்கும் ஆக மாட்டார். அவர் ஒரு செத்த அம்சமாய் இருப்பார். அவர் ஒரு வரலாற்று சம்பந்தப்பட்ட காரியமாய் இருப்பார். ஒரு வரையப்பட்ட படத்தைக் கொண்டு எப்படி ஒரு மனிதனுக்கு நீங்கள் சூடுண்டாக்கப் போகிறீர்கள்? அந்த மனிதன் விறைத்துப் போய் மறித்து விடுவான். நீங்கள் சொல்வீர்கள், "நல்லது சகோதரனே இந்த படத்தில் பார், அந்த நெருப்பு என்ன அழகாக இருக்கிறது! இது இது போல தான் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக எரிந்தது" என்று. ஆனால் இப்பொழுது குளிரில் உறைந்து கொண்டிருக்கிற ஒரு மனிதனுக்கு அந்தப் பழைய கதையை சொல்வதால் அது அவனுக்கு என்ன பிரயோஜனத்தை உண்டாக்கும்? நிச்சயமாக. இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்து "உலகத்தின் முடிவு பரியந்தம் நான் உங்களோடு கூட இருக்கிறேன்" என்று அவர் சொல்லி இருந்து, ஆனால் அவர் இன்றைக்கும் உயிரோடு இருக்கிறார் என்று உங்களால் நிரூபிக்க முடியாமல், ஏதோ வரலாற்றில் சம்பவித்த சம்பவங்களை நீங்கள் அவர்களுக்கு சொல்லிக்கொண்டிருந்தால் அதனால் என்ன பிரயோஜனம்? ஆமென். அவர் அன்றைக்கு என்னவாகவெல்லாம் இருந்தாரோ அப்படியே இன்று இரவிலே அவர் இல்லை என்றால், அவர் தேவனே அல்ல. ஆமென். 41. விடுதலையின் அம்பு சபைக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் உலகப்பற்று, அவிசுவாசம், மூட நம்பிக்கை மேலும், மற்றெல்லா காரியங்களும் சபைக்குள் நுழைந்து, சபைக்குள்ளாக உலகப்பற்றை உள்ளே கொண்டு வந்து சண்டைகள், சச்சரவுகள், வாக்குவாதங்கள் இன்னும் பல்வேறு விதமான ஸ்தாபன தடைகளை போட்டு விட்டன. ஒருவர் சொல்லுகிறார், "நான் இப்படி இருக்கிறேன்" என்று. இன்னொருவர் சொல்லுகிறார், "நான் அப்படி இருக்கிறேன்" என்று. ஒருவர் "நான் பவுலை சேர்ந்தவன்" என்றும், இன்னொருவர் "நான் இன்னொருவரை சேர்ந்தவன்" என்றும் கூறுகின்றனர். ஓ, என்னே! அதுதான் காரியம். ஆனால் சகோதரனே விடுதலையின் அம்பு இன்னுமாக இன்றிரவு இரக்கத்தினால் நிறைந்ததாய் சபைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், அதை கையில் எடுத்து, தேவனுடைய மகிமைக்காக அடிக்க வேண்டியதே. அதுதான் சரி. மேலும் நீ விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்வாயென்றால், தேவன் வாக்குத்தத்தம் செய்த ஒவ்வொரு தெய்வீக ஆசிர்வாதமும் உன்னுடையது தான். நீ அதை விசுவாசிக்கிறாயா? இன்றைக்கு அவர் செய்வதாக கூறியுள்ள சில காரியங்கள் அது உண்மையாய் இருக்கிறது என்று தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் நான் அதை விசுவாசிக்கிறேன். 42. மேலும் அவர் மோசேயை அங்கே மலையின் மேல் சந்தித்தார். அப்பொழுது மோசே அவரை தன்னுடைய எல்லா உபதேசத்தை கொண்டும், வேதத்தைக் குறித்து அவன் அறிந்து வைத்திருந்த எல்லா காரியங்களை கொண்டும், அவனுக்கு அவன் தாய் கற்பித்த எல்லா காரியங்களை கொண்டும், அவனுடைய ஆசிரியர்கள் அவனுக்கு கற்றுக் கொடுத்த எல்லா காரியங்களை கொண்டும் இன்னும் எல்லாவற்றையும் கொண்டும் அவன் அவரை சோதித்துப் பார்த்தான். மேலும் அவன் அதை தானாகவே செய்ய முயற்சித்து தோல்வியடைந்தான். ஆனால் ஒரு விசை தேவனுடைய தூதனானவர் இறங்கி வந்து, பரிசுத்த ஆவியின் வல்லமையில் தேவன் அவனோடு பேசினார். அப்பொழுது தேவனுடைய வார்த்தை அவனுக்கு உண்மையுள்ளதாய் மாறியது. பரிசுத்த ஆவியானவர் அதை மோசேக்கு வெளிப்படுத்திய பொழுது அவன் ஒரு வித்தியாசமான மனிதனானான். என் சகோதரனே, என் சகோதரியே இன்றிரவு நான் உனக்கு சொல்லுவேன். நீ ஒருவேளை நினைத்திருக்கலாம், இது ஏதோ ஒரு மூட மதாபிமானம் அல்லது வேறு ஏதோ ஒன்று என்று. ஆனால், நீ ஒரு விசை தேவனோடு சேர்ந்து கால் எடுத்து வைத்து அவருடைய வாக்குத்தத்தை கையில் எடுத்துக்கொண்டு அங்கே கடந்து வந்து, "இப்பொழுது கர்த்தாவே நான் அதில் விசுவாசம் வைக்கிறேன்" என்று சொல்லிப்பார். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அதைக் கொண்டு என்ன செய்கிறார் என்றும் அதன் பிறகு என்ன சம்பவிக்கிறது என்றும் பார். நீ ஒரு வித்தியாசமான நபராக இருப்பாய். நீங்கள் தாமே தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ்ந்து, விசுவாசித்து கர்த்தராகிய இயேசுவை சேவிப்பீர்களாக. 43. நாம் ஜெபிப்போம். எங்கள் பரலோக பிதாவே இராஜ்ஜியத் திற்குள்ளாக மக்கள் பலவந்தமாய் பிரவேசிக்க வேண்டியது இந்த இரவு தான், இந்த நேரம்தான், இங்கே இருக்கிற இந்த மனிதர்களும் இந்த ஸ்திரீகளும் இதை கேட்பது இதுவே கடைசி முறையாய் இருக்கட்டும். இதுவே அவர்களுக்கு கிடைக்கிற கடைசி தருணமாய் இருக்கட்டும். பொழுது விடிவதற்குள் ஒரு வேளை மரணம் அவர்களை கொண்டு செல்லலாம். இது போன்ற ஒரு கூடாரத்தில் உட்கார்ந்து இந்த செய்தியை கேட்பது சில மக்களுக்கு இதுவே கடைசி முறையாக இருக்கட்டும். ஓ பரலோகத்தின் தேவனே பேசுவீராக. பேசுவீரா? கர்த்தாவே. ஓ, பரிசுத்த ஆவியானவர் தாமே இந்த உடைந்த சில வார்த்தைகளை அவர்கள் இருதயங்களின் ஆழங்களுக்குள்ளாகப் பதியச் செய்வீராக. அதன் பிறகு பரிசுத்த ஆவியானவர் அதன் மேலாக வெளிச்சத்தை வீசி அவர்கள் ஜீவனை பெற்றுக்கொண்டு ஒவ்வொரு இருதயத்துக் கொள்ளும் அது ஒரு புது ஜீவனாய் ஜீவிக்கட்டும். இதை அருளும் கர்த்தாவே. இந்த ஆராதனையிலிருந்து மகிமையை எடுத்துக்கொள்ளும். தேவனே, பாவிகளை இரட்சியும், பின்வாங்கிப் போனவர்களை வீட்டிற்கு திரும்ப கொண்டு வாரும். வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்கும். கிறிஸ்துவின் நாமத்தில் இதை கேட்கிறோம். உங்கள் தலைகள் வணங்கி இருக்க நான் உங்களை ஒன்று கேட்க போகிறேன், இங்கே இருக்கிற ஒரு மனிதனோ ஒரு ஸ்திரீயோ இன்று இரவில் நான் பாவி என்ற ஒரு குற்ற உணர்வு உடையவர்களாக இருக்கிறீர்களா? நீ எவ்வளவு காலமாக சபையை சேர்ந்தவனாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. நீ எந்த பாவம் செய்திருந்தாலும், செய்யவில்லை என்றாலும் நீ குற்றவாளிதான். உனக்கு தேவன் மேல் போதிய அளவு மரியாதை இருக்கிறது என்றால், எல்லாருடைய தலையும் தாழ்த்தி, கண்கள் மூடப்பட்டு இருக்கிற இந்த வேளையில், நீ தேவனுக்கு நேராக உன் கையை உயர்த்தி, "தேவனே நான் என் கரத்தை உயர்த்தி இருக்கிறேன், நான் குற்றவாளி, எனக்கு பாவ மன்னிப்பு தேவை" என்று சொல்லுவாயா? நீ அதை செய்வாயா? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. உன்னை, உன்னை, உன்னை, உன்னை, ஆம். என்னே! என்னே! அநேகர். அங்கே பின்னால். மேலும் உன்னை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. வாலிபனே! தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வாலிபப் பையனே! தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வாலிபப் பெண்ணே! தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே! தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. பெண்மணி! ஓ, அது அற்புதம்! அது அற்புதம்! 44. பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார். மகிமையான தேவனுடைய ஆசிர்வாதங்களை கீழே கொண்டு வருகிறார். வெளியில் யாரோ இருக்கிறார்கள், வாலிபப் பெண்ணே! அங்கே உன் கரத்தை நான் காண்கிறேன். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ஐயா நான் உம்முடைய கரத்தை காண்கிறேன். சரி அங்கே வெளியிலே தூரத்தில், இன்னும் எல்லா இடங்களிலும் இருக்கிற உங்களையும், அங்கே தூரத்தில் மூலையில் நின்று கொண்டிருக்கிற உம்மை தேவன் ஆசீர்வதிப்பாராக. அது அற்புதம்! வேறு யாராவது? சகோதரன் பிரான்ஹாம் நான் ஒரு காரியத்தை அறிந்திருக்கிறேன். நாங்கள் அந்த உண்மையை சந்தித்தாக வேண்டும்; நாங்கள் இதை அறிந்தாக வேண்டும். ஒருவேளை சற்று கரடு முரடாக, முரட்டுத்தனமாக கையாளப்பட்டிருக்கலாம். ஆனால் சகோதரா நாம் கடைசி மணி வேளையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் இதை விட்டு வெளியேறியாக வேண்டும். இங்கு சுவிசேஷத்தை கையாளுவதில் குழந்தைகளின் கையுறைகளை போட்டுக்கொண்டு செய்ய முடியாது, என்னை அப்படியே உங்கள் சபையில் சேர்த்துக்கொள்ளுங்கள். அப்படி அல்ல. இயேசு சொன்னார், "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் அவன் தேவனுடைய ராஜ்யத்தை காண முடியாது" என்று. ஆகவே ஒரு மறுபடியும் பிறந்த நபர்தான் தேவனுடைய பரிசுத்த பிள்ளையாய் இருக்கிறான். இன்றிரவு இதுவரை கை உயர்த்தாத உங்களில் எவராகிலும் அந்த நிலையில் இராதிருப்பீர்கள் என்றால் நீங்கள் தேவனிடத்தில் போதிய அளவு உத்தமமாய் இருந்து உங்கள் கைகளை உயர்த்துவீர்களா? அங்கே ஒரு இருபது பேர் அல்லது அதற்கும் அதிகமான பேர் தங்கள் கைகளை உயர்த்தியிருக்கின்றனர். இன்னும் கைகளை உயர்த்தாதவர்கள் வேறு யாராகிலும், உயர்த்துவீர்களா? தேவன் உம்மை ஆசிர்வதிப்பாராக, ஐயா. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, வாலிப மனிதனே. அங்கே பின்னால் உள்ள சகோதரனே தேவன் உம்மை ஆசிர்வதிப்பாராக. ஆம், ஐயா. அது நல்லது. அங்கே பின்னால் இருக்கிறதான அந்த சிறிய பெண்மணி, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. நான் உன்னை காண்கிறேன். மேலும், நிச்சயமாக தேவனும் காண்கிறார். அவர் காண்கிறார் என்று எனக்கு தெரியும். ஒவ்வொரு சிட்டுக்குருவியை கூட அவர் அறிந்திருக்கிறார். 45. நீங்கள் சொல்லலாம் சகோதரன் பிரான்ஹாம் இன்றிரவு நீங்கள் எந்த பாவத்தை குறித்து பிரசங்கித்தீர்களோ அந்த பாவத்திற்கு எதிராக குற்றவாளியாய் நான் இருக்கிறேன். நான் என் சபைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்து கொண்டு தொலைக்காட்சியை பார்க்கிறவனாய் இருக்கிறேன். நான் பழைய ஆபாச பத்திரிகைகளை படிக்கிற குற்றம் புரிந்தவனாய் இருக்கிறேன். நான் ஆபாச படங்களை பார்க்கிற குற்றம் புரிந்தவனாய் இருக்கிறேன். தெருவிலே நெறி கெட்ட விதத்தில் அரைகுறை ஆடை அணிந்து அவலட்சணமாக திரியும் பெண்களை திரும்பிப் பார்க்கிற குற்றம் புரிந்தவனாய் நான் இருக்கிறேன். இது போன்ற எல்லா குற்றங்களையும் நான் செய்தவனாய் இருக்கிறேன். அப்படிப்பட்ட அவலட்சணங்களை நான் காண நேரிட்ட பொழுது நான் ஒரு உத்தமமான கிறிஸ்தவ மனிதனாகவோ அல்லது சீமாட்டியாகவோ இருந்து அதிலிருந்து என் தலையை திருப்பிக் கொள்வதற்கு பதிலாக அதை திரும்பிப் பார்த்த குற்றவாளியாய் நான் இருக்கிறேன். நீ அந்த குற்றவாளியாய் இருக்கிறாயா? அப்படியென்றால் உன் கைகளை உயர்த்துவதன் மூலமாக தேவனிடத்தில் "ஆம் நான் குற்றவாளிதான்" என்று சொல். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது உத்தமமான இருதயம். அது உத்தமமான இருதயம். நிச்சயமாக. தேவன் அதை கனப்படுத்துவார். இன்னும் பத்து அல்லது பதினைந்து அதிகமான கரங்கள் மேலே சென்றிருக்கின்றன. ஆம், ஐயா. குற்றம். அந்த குற்றத்தின் ஒவ்வொரு துளியையும் இன்று இரவு அவர் உங்களை விட்டு எடுத்து போடும்படியாக நான் தேவனிடத்தில் ஜெபித்து கேட்கப் போகிறேன், நீங்களும் தேவனிடத்தில் ஜெபித்து கேளுங்கள். 46. எங்கள் பரலோக பிதாவே, ஓ தேவனே, அருமையான கர்த்தரே, என் முழு இருதத்தோடும் இன்றைக்கு நான் உம்முடைய வார்த்தையை அறிவிக்க முயற்சித்தேன். நான் மூழ்குகிறதான மணல்களை பார்க்கிறேன். நான் இந்த அருமையான ஜனங்களுக்கு சாத்தான் வைக்கிற கண்ணியை பார்க்கிறேன். ஓ தேவனே, தயவு செய்து எப்படியாவது இவர்கள் இருதயங்களுக்குள்ளாக அன்பை விதைத்து, நான் அவர்களை நேசிக்கிறேன் என்று அவர்களை அறிந்து கொள்ளச் செய்யும். மேலும் எது சத்தியம் என்றும் எது சரி என்றும் என்னால் இயன்றவரை என் முழு இருதயத்தோடும் நான் அவர்களுக்கு சொல்ல முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் அனேகர், ஆம், டஜன் கணக்கில் தாங்கள் குற்றவாளிகள் என்று உணர்ந்து இன்று இரவில் தங்கள் கைகளை உயர்த்தி இருக்கின்றனர். சர்வ வல்லமையுள்ள தேவனே, நொந்து போன ஆத்துமாக்களை நீர் புறக்கணித்து தள்ளி விடுவீரோ? இல்லை. "என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை" என்று நீர் சொல்லி இருக்கிறீரே. தேவனே இரட்சிப்பானது இந்த ஒவ்வொரு இருதயங்களுக்குள்ளாகவும் வேகமாக பாய்ந்து சென்று அவர்களை சுத்தமாக்கி, அவர்கள் இந்த கூடாரத்திலிருந்து புறப்பட்டு போய் அல்லது இன்று இரவு இந்த கட்டிடத்திற்குள் இருந்து புறப்பட்டு போய் இனி ஒருபோதும் அது போன்ற காரியங்களில் தலையிட்டுக் கொள்ளாதிருப்பார்களாக. அஞ்ஞானிகள் வீதிகளின் ஊடாக அரை நிர்வாணமாக தங்களை வெளி காண்பிக்கும் பொழுது, கிறிஸ்தவ பெரிய மனிதர்கள் பரிசுத்த ஆவியானவரால் உணர்த்தப்பட்டு தங்கள் தலைகளை திருப்பிக் கொள்வாராக. கேடுகெட்ட அந்த தொலைக்காட்சி அது உள்ளே நுழைய ஆரம்பித்து அதில் எல்லாவிதமான கேடுகெட்ட, பாவிகளின் நீசத்தனமான காரியங்களை உள்ளே கொண்டு வந்து, (மனம் திரும்பாத பட்சத்தில் அவர்களெல்லாம் ஒரு நாளில் நரகத்துக்கு செல்வார்கள்) இவர்கள் மேல் தங்கள் செல்வாக்கை செலுத்தி, தங்களுடைய அவலட்சணங்களை எல்லாம் தேவனுடைய கிறிஸ்தவர்கள் மேல் வீசி எறியும் பொழுது, பரிசுத்த ஆவியானவர் தாமே இவர்கள் இருதயங்களோடு பேசி, "நினைவு கூர் அன்று இரவு ஒரு நாள் அந்த கூடார கூட்டத்தில் இந்த காரியங்களை குறித்து நான் உன்னை கடிந்து கொண்ட பொழுது நீ உணர்வடைந்து உன் கைகளை உயர்த்தி அறிக்கை செய்தாய்" என்று அவர்களுக்கு நினைப்பூட்டுவாராக. அப்பொழுது அவர்கள் இனி ஒருபோதும் அந்த பாவங்களை செய்யாதிருப்பார்கள். தேவனே, இதை அளியும். 47. இப்பொழுது, ஜனங்கள் தாமே நீர் இன்னும் உயிரோடிருக்கிறீர் என்று அறிந்து கொள்வார்களாக. அப்பொழுது ஜனங்கள் நாங்கள் வெறுமனே ஏதோ பேச வேண்டும் என்பதற்காக வீணாக பேசிக் கொண்டிருக்கவில்லை என்றும், நாங்கள் அறியாத ஒரு காரியத்தை நாங்கள் அவர்களுக்கு அறிமுகப்படுத்த முயற்சிக்கவில்லை என்றும் அறிந்து கொள்வார்கள்.... பரலோக பிதாவே, உம்முடைய கிருபையினாலே உம்முடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் நான் உம்மை அறிந்திருப்பதற்காக நான் உமக்கு நன்றிகளை ஏறெடுக்கிறேன். கர்த்தாவே, நான் என்னுடைய வாழ்க்கையில் அநேக தவறுகளை செய்திருக்கிறேன். அவற்றை குறித்து நான் வெட்கப்படுகிறேன். மேலும், தேவனே அனேக இடங்களில் நான் செய்திருக்க வேண்டிய காரியங்களை செய்யாமலும், சென்றிருக்க வேண்டிய சில இடங்களுக்கு செல்லாமல் வேறு இடங்களுக்குச் சென்று அப்படியாக காரியங்களை மாற்றி செய்திருக்கிறேன், அதற்காக நான் வருந்துகிறேன். மேலும், அதற்காக என் முழு இருதயத்தோடும் நான் மனம் வருந்துகிறேன் ஆகவே மறுபடியுமாக கர்த்தாவே இந்த பூமியின் நாலு திசைகளுக்கும் நான் கடந்து செல்லும்படி என்னை அனுப்புவீராக. மேலும் என் ஜீவன் இருக்கும் பொழுதே, நான் இன்னும் பலமுள்ளவனாய் இருக்கும் பொழுதே இதற்கு முன்பு ஒருபோதும் பிரசங்கித்திராத அளவுக்கு வல்லமையாக உம்முடைய சுவிசேஷத்தை நான் பிரசங்கிப்பேனாக. ஓ, தேவனே இதோ இந்த ஜனங்களுக்கு முன்பாகவே இப்பொழுதே நான் என் பொருத்தனைகளை மறுபடியும் புதுப்பிக்கிறேன். ஓ, கர்த்தாவே, கிறிஸ்துவின் நாமத்தில் நீர் என்னை அபிஷேகிக்க வேண்டுமாய் உம்மை வேண்டிக்கொள்கிறேன். கர்த்தாவே, பரிசுத்த ஆவியை கொண்டு நீர் உம்முடைய அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்வீராக, என்னுடைய சரீரத்தையும் பலப்படுத்துவீராக. ஓ, கர்த்தாவே, அந்த தரிசனங்களையும் கூட புதுப்பிப்பீராக. இந்த கூட்டங்களுக்கு நிதி உதவி அளித்த இந்த ஜீவ கூடாரத்தையும், இன்று இரவிலே இங்கு வந்து இந்த கூட்டங்களிலே கலந்து கொண்ட பாப்திஸ்துகள், மற்றும் மெத்தோடிஸ்ட்டுகள் மற்றும் பிரசிஸ் பிடீரியன்கள் இன்னும் வேறு யாரெல்லாம் இன்று இரவு இங்கு கூடி வந்திருக்கிறார்களோ அவர்களையும் கூட ஆசீர்வதிப்பாராக. இந்த சபையானது கொழுந்து விட்டு எரியட்டும், இந்த ஷ்ரீவ்போர்ட்டில் பழைய பாணியிலான பரிசுத்த ஆவியின் எழுப்புதல் வந்து இறங்கட்டும். இன்று இரவு இங்கு கூடியிருக்கிற இந்த கூட்ட மக்கள் மேல் தேவனுடைய விடுதலையின் அம்பு வந்து விழட்டும், அப்பொழுது அது இந்த ஷ்ரீவ்போர்ட் மாகாணம் முழுவதையும் அதைச் சுற்றிலும் இருக்கிற எல்லா இடங்களையும் பழைய பாணியிலான பரிசுத்த ஆவியின் எழுப்புதலைக் கொண்டு முற்றிலுமாக சீர்திருத்தி விடும். இதை அளியும் கர்த்தாவே. 48. இந்த கூட்டங்களை முடிக்கும்படியாக நாளை இரவு இங்கே நிற்க வேண்டிய இந்த தீரமிக்க சகோதரனை ஆசீர்வதிப்பீராக. ஓ, கர்த்தாவே, நீர் ஜீவிக்கிறீர் என்றும், நீர் என்றென்றும் ஜீவிப்பீரென்றும் இந்த ஜனங்கள் அறிந்து கொள்ளும்படியாக இன்று இரவிலே ஒரு ஜீவனுள்ள அசைவை உண்டாக்கும்படியாக உம்முடைய பரிசுத்த ஆவியை அனுப்புவீராக. கிறிஸ்துவின் நாமத்தில் இதை கேட்கிறேன் ஆமென். அல்லேலூயா. அனேகரால் புரிந்து கொள்ள முடியவில்லை நாங்கள் ஏன் அவ்வளவு சந்தோஷமாகவும் விடுதலையாகவும் இருக்கிறோம் என்று; நான் அழகிய கானானுக்குச் செல்ல யோர்தானை கடந்து விட்டேன், மேலும் இது எனக்கு பரலோகம் போலிருக்கிறது. ஓ இது எனக்கு பரலோகம் போலிருக்கிறது, ஓ இது எனக்கு பரலோகம் போல் இருக்கிறது; நான் அழகிய கானானுக்குச் செல்ல யோர்தானை கடந்து விட்டேன், இது எனக்கு பரலோகத்தை போல் இருக்கிறது. ஓ, நாங்கள் சந்தோஷமாய் இருக்கும் பொழுது நாங்கள் பாடல் பாடி, நாங்கள் கூச்சலிடுகிறோம், சிலருக்கு அது புரியவில்லை என்பதை, நான் காண்கிறேன்; ஆனால் நாங்கள் ஆவினால் நிரப்பப்பட்டிருக்கிறோம், அதில் எந்த சந்தேகமும் இல்லை, அதுதான் என்னுடைய காரியமாய் இருக்கிறது. ஓ, அதுதான் என்னுடைய காரிமாய் இருக்கிறது, (கர்த்தருக்கு ஸ்தோத்திரம்) ஓ, அதுதான் என்னுடைய காரியமாய் இருக்கிறது; நான் ஆவினால் நிரப்பப்பட்டிருந்தேன், அதில் எந்த சந்தேகமும் இல்லை, அதுதான் என்னுடைய காரியமாய் இருக்கிறது. 49. ஓ, நீங்கள் அவரை நேசிக்கவில்லையா? [சபையார் ஆராதிக் கின்றனர்] நாம் அந்த பாடலை மறுபடியும் பாடும்பொழுது நம் அருகில் இருக்கிற ஒவ்வொருவரோடும் நாம் கைகளை குலுக்குவோம். மெத்தோடிஸ்ட்டுகள், நீங்கள் அப்படியே உங்களுக்குத் தெரியும் இந்த பழைய பாணியிலான இந்த பக்தி மார்க்கம் பட்டுடை உடுத்தியவரையும் கதர் ஆடை அணிந்தவரையும் ஒருவரையொருவர் கட்டி அணைத்து "சகோதரியே" என்று கூப்பிடச் செய்யும். அது டக்ஸிடோ சூட்டு போட்டவரையும் ஒரு தொள தொளா துணி அணிந்தவரையும் ஒருவரையொருவர் நோக்கி "சகோதரனே" என்று சொல்லச் செய்யும். ஓ அதுதான் என்னுடைய காரியமாய் இருக்கிறது, (சுற்றிலும் திரும்பி ஒருவரோடொருவர் கை குலுக்குங்கள்) அதுதான் என்னுடைய காரியமாய் இருக்கிறது; நான் ஆவியினால் நிரப்பப்பட்டுள்ளேன், அதில் எந்த சந்தேகமும் இல்லை, அதுதான் என்னுடைய காரியமாய் இருக்கிறது. அல்லேலூயா. எனக்கு ஒரு பாடலை பாட வேண்டும் போல் இருக்கிறது. அது பரவாயில்லை? அது பரவாயில்லை. இது பழைய பாணிலான பரிசுத்த ஆவி, பிசாசு அதன் அருகே வரமாட்டான். அந்த காரணத்தினால் தான் ஜனங்கள் அதற்கு பயப்படுகின்றனர்; ஆனால் அதுவே எனக்குப் போதும். இது பழைய பாணியிலான பக்தி மார்க்கம், இது பழைய பாணியிலான பக்தி மார்க்கம், இது பழைய பாணியிலான பக்தி மார்க்கம்; ; ஆனால் அதுவே எனக்குப் போதும். அது நான் மரிக்கையில் பார்த்துக் கொள்ளும், அது நீ பொய் பேசுவதை நிறுத்தும். அது பிசாசை ஓட செய்யும்; அதுவே எனக்குப் போதும். அந்த பழைய பாணியிலான பக்தி மார்க்கத்தை எனக்குத் தாருங்கள், அந்த பழைய பாணியிலான பக்தி மார்க்கத்தை எனக்குத் தாருங்கள், அந்த பழைய பாணியிலான பக்தி மார்க்கத்தை எனக்குத் தாருங்கள்; அதுவே எனக்குப் போதும். அது மிகவும் அருமை வேறொன்றும் வேண்டாம், அது என் சகோதரனை நேசிக்க செய்கிறது, அது மறைவில் இருக்கிற காரியங்களை வெளியே கொண்டு வருகிறது; அதுவே எனக்குப் போதும். அந்த பழைய பாணியிலான பக்தி மார்க்கத்தை எனக்குத் தாருங்கள், அந்த பழைய பாணியிலான பக்தி மார்க்கத்தை எனக்குத் தாருங்கள், அந்த பழைய பாணியிலான பக்தி மார்க்கத்தை எனக்குத் தாருங்கள்; அதுவே எனக்குப் போதும். (நாம் எல்லாரும் இவ்விதமாகவே பாடுவோம்) அது பவுலுக்கும், சீலாவுக்கும் நன்றாக இருந்தது, அது பவுலுக்கும், சீலாவுக்கும் நன்றாக இருந்தது, அது பவுலுக்கும், சீலாவுக்கும் நன்றாக இருந்தது; இப்பொழுது, அதுவே எனக்குப் போதும். அது பழைய பாணியிலான பக்தி மார்க்கம், அந்த மார்க்கம் எனக்கு கிடைத்து விட்டது, அந்த மார்க்கம் எனக்கு கிடைத்துவிட்டது; அதுவே எனக்குப் போதும். 50. ஆமென். அந்தப் பழைய பாணியிலான பக்தி மார்க்கத்தை பெற்றுக்கொண்டவர்கள் எல்லோரும் இப்பொழுது நம்முடைய கைகளை உயர்த்தி சொல்வோம், "எனக்கு அந்த பழைய பாணியிலான பக்தி மார்க்கம் கிடைத்துவிட்டது. அந்த பக்தி மார்க்கம் எனக்கு கிடைத்துவிட்டது. அந்த பக்தி மார்க்கம் எனக்கு கிடைத்துவிட்டது. அது எனக்குப் போதும். ஆமென். ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு இங்கே பாவியாக அமர்ந்திருந்த சிலர் இப்பொழுது அவர்கள் தங்கள் கைகளை உயர்த்தி, எனக்கு அந்த பழைய பாணியிலான பக்தி மார்க்கம் கிடைத்துவிட்டது" என்று பாடுகிறார்கள். ஆமென். நிச்சயமாக. அது பிசாசை ஓடச் செய்கிறது. அதைத்தான் அது செய்கிறது. அது உங்களை ஒவ்வொருவரையும் நேசிக்கச் செய்கிறது. அது உங்களை, அது உங்களை கர்த்தரை நேசிக்கச் செய்கிறது. அது உங்கள் சத்துருவை நேசிக்கச் செய்கிறது. அது உங்களை எல்லாரையும் நேசிக்கச் செய்கிறது. அது எனக்கு போதும். அது பவுலுக்கும், சீலாவுக்கும் நன்றாக இருந்தது. அது எபிரேய பிள்ளைகளுக்கு நன்றாக இருந்தது. அது அப்பாவுக்கும், அம்மாவுக்கும் நன்றாக இருந்தது. இப்பொழுது எனக்கும் அதுவே போதும். ஆமென். ஆம், ஐயா. "அந்த சீயோனின் பழைய கப்பல்" அந்த பாடல் உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு தெரியுமா? நாம் அதை பாடுவோம். அது சீயோனின் பழைய கப்பல், அது சீயோனின் பழைய கப்பல், அது சீயோனின் பழைய கப்பல்; அதில் ஏறிக்கொள்ளுங்கள், அதில் ஏறிக்கொள்ளுங்கள். அது வயதான என் தகப்பனை கொண்டு சேர்த்தது, அது வயதான என் தகப்பனை கொண்டு சேர்த்தது, அது வயதான என் தகப்பனை கொண்டு சேர்த்தது; அதில் ஏறிக்கொள்ளுங்கள், அதில் ஏறிக்கொள்ளுங்கள். 51. ஓ, எனக்கு அந்த பழைய பாடல்களை மிகவும் பிடிக்கும். நான் எப்பொழுதும் பழைய காலத்து ஆள் தான். மேலும் நான் சோள ரொட்டியையும், கருப்புக் கண் மொச்சை பயரையும் தின்று வளர்ந்தவன். மேலும் நான் அந்த ரொட்டியை குவளையில் உள்ள தண்ணீரில் தோய்த்து எடுத்து, அதன் பிறகு சர்க்கரை தூளில் ஒற்றி எடுத்து, அப்படியாக சாப்பிடுவேன். அம்மா எங்களுக்கு ஏதாவது ஒரு பணியாரம் செய்து கொடுப்பார்கள், பையன்களாகிய நாங்கள், உங்களுக்கு தெரியும் அந்த ரொட்டியை தண்ணீரில் தோய்த்து எடுத்து, சர்க்கரை தூளில் ஒற்றி எடுத்து, அப்படியாக சாப்பிடுவோம், அப்பொழுது அந்த சர்க்கரை தூள் எங்கள் கைகளிலும், புருவங்களிலும், தலை மயிரிலெல்லாம் ஒட்டிக்கொள்ளும். ஆனால் இன்று இரவு நான் என்ன நினைக்கிறேன் என்றால், "கிறிஸ்தவர்களாகிய நமக்கு அப்படிப்பட்ட ஒரு அழகான, நன்றாக முக்கியெடுத்து, ஒற்றியெடுத்து சாப்பிடுகிற ஒரு நல்ல நேரம் தேவைப்படுகிறது" என்று. அது அப்படியே உங்கள் புருவங்களிலும், உங்கள் மேலெல்லாம் அது ஒட்டிக்கொள்ள வேண்டும். ஆமென். சரியாக. நான் பக்தி பரவசப்படுகிறேன். நான் உண்மையாகவே அப்படி உணர்கிறேன். பரலோகத்துக்கு போகப் போகிற, மகிமைக்கு போகப் போகிற அப்படிப்பட்ட ஒரு கூட்ட மக்களோடு கூட இருப்பதை நான் மிகவும் நன்மையாக உணர்கிறேன். அது சரி. 52. இங்கே இருக்கிற உங்களில் எத்தனை பேர் வியாதியுற்றவர்களாகவும், வருத்தப்பட்டவர்களாகவும் இருக்கிறீர்கள்? உங்கள் கைகளை உயர்த்துகிறதை நான் காணட்டும். தேவன் உங்களை சுகமாக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள், உங்களால் முடிந்தால் உங்கள் கைகளை உயர்த்துங்கள். அருமை. அது நல்லது. இப்பொழுது அந்தப் பண்டைய பாணியிலான இரட்சிப்பு உங்களை அந்த பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலமாக, இந்த பரிசுத்த ஆவியின் அபிஷேகத்துக்குள்ளாக கொண்டு வந்திருப்பார் என்றால், பரிசுத்த ஆவி என்பது, பெந்தெகொஸ்தே நாளிலே நம்மோடும், நமக்குள்ளும் உலகத்தின் முடிவு பரியந்தமும் இருக்கும்படியாக அந்த மேலறையில் இறங்கி வந்த அதே இயேசு கிறிஸ்துவின் ஆவியேயன்றி வேறொன்றுமில்லை. மேலும், அன்றைக்கு அந்த பெந்தெகொஸ்தே நாளிலே விழுந்த அதே பரிசுத்த ஆவியாய் அவர் இருப்பாரென்றால், அன்றைக்கு செய்த அதே வல்லமையான கிரியைகளை இன்றைக்கும் கூட செய்ய அவர் வல்லவராய் இருக்கிறார். அவர் நித்திய நித்தியமாக நம்மோடு கூட வாழப் போகிறவராய் இருக்கும் பொழுது, பெந்தெகொஸ்தே நாளிலிருந்து இன்று வரை இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டபடியால் நம்முடைய தேவன் மிகவும் பெலவீனமாகிவிட்டார் என்று நாம் நினைக்கக் கூடாது. [ஒலி நாடாவில் காலியிடம்]... மேசியா வரும் பொழுது, அவர் இந்த காரியங்களையெல்லாம் எங்களுக்கு சொல்லுவார், பாருங்கள்? அதுதான் மேசியாவுடைய அடையாளமாய் இருக்கும். "ஆனால், நீர் யார்?" அவர் சொன்னார், "நானே அவர்." இப்பொழுது, இயேசு நேற்று இருந்த விதம் அவ்விதமாய் இருக்கும் என்றால், அவர் மாறாதவராய் இருப்பார் என்றால், அவர் இன்றைக்கும் அதே விதமாக தான் இருக்க வேண்டும். இப்பொழுது, அன்றைக்கும் இன்றைக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், இப்பொழுது அவர் ஒரு மாம்ச சரீரத்தில் இல்லை. அவருடைய மாம்ச சரீரம் தேவனுடைய சிங்காசனத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறது. அது இயேசுவின் சிங்காசனம் அல்ல, இன்று இரவு அவர் உட்கார்ந்து கொண்டிருப்பது இயேசுவின் சிங்காசனத்தில் அல்ல. வேதம் சொல்லுகிறது, "அவர் தன்னுடைய பிதாவின் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார்" என்று. அது சரியா? "நான் ஜெயங்கொண்டு என் பிதாவின் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறது போல, ஜெயங் கொள்கிறவன் எவனோ அவனும் என்னோடு கூட என்னுடைய சிங்காசனத்தில் வீற்றிருப்பான்." இப்பொழுது அவருடைய சிங்காசனம் பூமியில் இருக்கிறது. அவர் இங்கே தம்முடைய ஜனங்களோடு இருக்க வேண்டும். 53. இப்பொழுது, நீங்கள் பாருங்கள், நீங்கள் ஒருபோதும் ஒரு தூதனாக இருக்க மாட்டீர்கள். அது உங்களுக்கு தெரியும். நீங்கள் ஒருபோதும் ஒரு தூதனாக இருக்க மாட்டீர்கள். உங்களுக்கு ஒரு போதும் வயதாகப் போவதில்லை. உங்களுக்கு ஒரு போதும் சுருக்கங்கள் விழப்போவதில்லை. நீங்கள் ஒரு போதும் வியாதியுறப் போவதில்லை. நீங்கள் ஒருபோதும் கவலை கொள்ளப்போவதில்லை. நீங்கள் ஒருபோதும் ஒரு தூதனாய் இருக்கப் போவதில்லை. நீங்கள் - நீங்கள் ஒரு மனிதனாகத்தான் இருப்பீர்கள். வெறுமனே சாவாமை உள்ளவராக இருப்பீர்கள். அவருடைய சரீரத்தை போலவே ஒரு மகிமையின் சரீரம் உங்களுக்கு உண்டாயிருக்கும். நீங்கள் போஜனம் பண்ணி, பானம் பண்ணி, மற்றும் ஜீவித்து, அன்பு கூர்ந்து மற்றும் என்றென்றும் அவரோடு கூட ஐக்கியம் கொள்ளுகிறவர்களாய் இருப்பீர்கள். காற்றிலே புகை பறப்பது போல மிதந்து கொண்டிருக்கமாட்டீர்கள். ஒரு போதும் வேதம் அப்படி நமக்கு போதிப்பதில்லை. தேவன் தூதர்களை சிருஷ்டித்தார். ஆம். ஆனால், அவர் உங்களை ஒரு போதும் தூதனாக சிருஷ்டிக்கவில்லை. அவர் உங்களை மனிதனாய் இருக்கத்தான் சிருஷ்டித்தார். மேலும் இயேசு இறங்கி வந்தார். தேவன் இறங்கி வந்து மாம்சமானார். மேலும் மாம்சமாகி தம்முடைய ஜனங்களோடு இந்த பூமியில் வாழ்வதற்காக மனிதன் ஆனார். மேலும் ஒரு நாளிலே அந்த மாம்ச சரீரத்தில், மகிமையின் சரீரத்தில் அவர் திரும்பி வருவார். 54. நாம் ஜெப வரிசையை அழைப்பதற்கு முன்பாக ஒரு சிறு கருத்து. நான் உங்களிடத்தில் ஒன்றை கேட்க விரும்புகிறேன். எகிப்தில் இருந்த அந்த எபிரேயர்களை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அதைக் குறித்து நீங்கள் ஆழமாக சிந்திக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அந்த எபிரேயர்களை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒவ்வொரு முறையும் அவர்கள் தங்கள் முதுகிலே அந்தக் கசையடிகளை வாங்கின பொழுதும், சத்துருவினால் கன்னத்தில் அறையப்பட்ட பொழுதும், முகத்தில் காரி துப்பப்பட்டு, எட்டி உதைக்கப்பட்டு இன்னும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் அவர்கள் செய்து, தெருக்களின் ஊடாக இழுத்து வரப்பட்ட போது அவர்கள் அங்கே நோக்கி பார்த்திருப்பார்கள், அங்கே இருந்த ஒரு சிறு பெட்டியை நோக்கி பார்த்திருப்பார்கள். அந்த சிறிய சிவப்பு நிற பெட்டி, அதற்குள்ளாக தான் அந்தத் தீர்க்கதரிசியாகிய யோசேப்பின் எலும்புகள் வைக்கப்பட்டிருந்தன. அந்த அடையாளத்தை பார்த்து அவர்கள் அறிந்து கொண்டனர் ஒரு நாளில் நாம் வெளியே புறப்பட்டு செல்வோம். அவர்கள் ஒரு நாளிலே வெளியே புறப்படப் போவதாக இருந்தார்கள். தேவன் அவர்களுக்கு கொடுத்த அடையாளம் அதுவாக தான் இருந்தது. யோசேப்பு சொன்னான், "நீங்கள் ஒருபோதும்... கர்த்தர்- கர்த்தர் நிச்சயமாக ஒரு நாளில் உங்களை வந்து சந்திப்பார், ஆகவே, நீங்கள் ஒருபோதும் என்னுடைய எலும்புகளை இங்கே விட்டுவிட்டு சென்று விடாதீர்கள். ஆனால், ஒரு நாள் நீங்கள் இங்கிருந்து வெளியே புறப்பட்டு செல்வீர்கள், அப்பொழுது என்னுடைய எலும்புகளையும் உங்களோடு கூட எடுத்துச்செல்லுங்கள்" என்று. ஒவ்வொரு முறையும் ஒரு எபிரேயன், அவன் எப்படிப்பட்ட தொல்லையில் இருந்தாலும் அது காரியமில்லை, அவன் அந்த எலும்புகளை பார்த்து, "எனக்காக ஒரு வாக்குத்தத்தம் இருக்கிறது, ஒரு நாளில் நான் அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு கடந்து செல்வேன்" என்று நினைவு கூறுவான். 55. மேலும் இன்று இரவு, நான் அவருடைய மகிமையை குறித்து சிந்தித்துப் பார்க்கிறேன். இங்கே ஒரு திறக்கப்பட்ட கல்லறை நமக்கு இருக்கும் பொழுது, நாம் சாம்பலுக்கு சாம்பலும், புழுதிக்கு புழுதியுமாக மாறிப்போன நம்முடைய அன்பானவர்களுடைய கல்லறைகளுக்கு புறப்பட்டு செல்கிறோம், நாம் மண் கட்டிகளை எடுத்து தூவுகிறோம். நான் அதை என் மனைவிக்கு செய்தேன், என் குழந்தைக்கு, என் தகப்பனாருக்கு, என் சகோதரனுக்கு. அது எப்படிப்பட்டது என்று எனக்குத் தெரியும். நீங்கள் உங்களுக்கு அன்பானவர்களை சாம்பலுக்கு சாம்பலாகவும், மண்ணுக்கு மண்ணாகவும் பூமிக்குள்ளாக விதைக்கும் பொழுது உங்களோடு சேர்ந்து எப்படி பச்சாதாபப்பட வேண்டும் என்று எனக்கு தெரியும். என்னுடைய இருதயம் அவர்களோடு சேர்ந்து கவலைப்படும். ஆனால் மறுபடியும் ஒரு ஈஸ்டர் காலையில் நான் ஒரு பூங்கொத்தை கொண்டு சென்று அங்கே அந்த கல்லறையில் வைத்து அந்த கல்லறைக்குள்ளாக அவர்களை நோக்கிப் பார்த்து அங்கே இருக்கிறவர்களை குறித்து அவர்கள் இங்கே இல்லை ஆனால் தூரத்தில் எங்கோ ஒரு இடத்தில் தேவனுடைய பிரசன்னத்தில் இருக்கிறார்கள் என்று நினைவு கூறுவேன். "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல் மரணத்தைவிட்டு நீங்கி, nஜீவனுக்குட் பட்டிருக்கிறான்." நான் அதைக் குறித்து சிந்திக்கிறேன். மேலும், நான் நினைக்கிறேன், "ஓ, ஹோப், என் மனைவி போய்விட்டாள். ஓ, சாரோன், என் செல்ல மகள் போய்விட்டாள். தந்தை, எட்வர்ட், மற்றும் சார்லஸ் என் சகோதரன், நீங்கள் எல்லாம் போய் விட்டீர்கள். நான் அவர்கள் கல்லறையில் நிற்கும் பொழுது அங்கே குனிந்து அவர்கள் பெயர்கள் அங்கே எழுதப்பட்டிருக்கிறதையும், அவர்களுடைய புகைப்படங்கள் அங்கே வைக்கப்பட்டிருக்கிறதையும், அங்கே சிறிய மலர்கள் வைக்கப்பட்டிருக்கிறதையும் பார்த்து, "நான் தேவனுடைய பிரசன்னத்தை குறித்து சிந்தித்துப் பார்க்கிறேன்." ஆனால் இப்படியும் நான் நினைக்கிறேன், "இன்றைக்கு என்னால் உங்களை காண முடியவில்லை ஏனென்றால், நீங்கள் வேறு ஒரு விதமான சரீரத்தில், பரம சரீரத்தில் இருக்கிறீர்கள். ஆகவே இங்கே என்னால் உங்களை காண முடியாது." ஆனால் ஒவ்வொரு முறையும், அந்த பலி பீடத்தின் கீழாக இருந்து அந்த ஆத்துமாக்கள் "இன்னும் எவ்வளவு காலம் கர்த்தாவே" என்று அந்த ஆத்துமாக்கள் கூப்பிடுவதை நினைக்கும் பொழுது, அவர்கள் அங்கே பலிபீடத்தின் கீழாக உட்கார்ந்து கொண்டு, அங்கே அவருடைய சிங்காசனத்தண்டையிலே உட்கார்ந்து கொண்டு அந்த மண்ணுக்குரிய சரீரத்திலே, ஆமென். ஆனால் ஒரு காலியான கல்லறையை நாம் பார்க்கும் பொழுது, இயேசு நமக்கு வாக்குத்தத்தம் செய்திருக்கிற "மரித்து கல்லறைகளுக்குள் இருக்கிற நமக்கு அன்பானவர்கள் அவர்கள் அக்கறையில் இருந்தாலும், அவர்கள் ஒரு நாள் தங்களுடைய சொந்த கல்லறைகளிலிருந்து மறுபடியும் உயிர்த்தெழுவார்கள் என்பதற்கு தேவன் கொடுக்கிற அவர்களுடைய அடையாளம் ஒன்று இன்னுமாக இங்கே பூமியில் இருக்கிறது? என்று நாம் அறிந்து கொள்கிறோம். 56. தேவன் எங்கெல்லாம் இருக்கிறாரோ அங்கெல்லாம் ஒரு அடையாளம் இருக்கிறது. அது உங்களுக்கு தெரியுமா? தேவன் எங்கே இருக்கிறாரோ அங்கே அவருடைய அடையாளம் இருக்கிறது. "விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன" என்று வேதம் கூறுகிறது. அது சரி. எங்கு பார்த்தாலும் அடையாளங்கள். எங்கே பார்த்தாலும் அங்கே அடையாளங்கள் இருக்கின்றன. ஆனால், நாமோ அடையாளங்களை தேடக்கூடாது, ஆனால் தேவன் அவைகளை கொடுக்கிறார். அது அவருடைய கிருபையாய் இருக்கிறது. அவர் அவற்றை கொடுக்கிறார். நாம் அந்த அடையாளங்களை தேடுவோமென்றால், அப்பொழுது நாம் தவறாக இருப்போம். ஆனால், தேவன் அவருடைய கிருபையினாலே அந்த அடையாளத்தை நமக்கு கொடுப்பாரென்றால், அது அருமை. மேலும் ஒரு நாளிலே நாம் இங்கிருந்து போகப் போகிறோம் என்பதற்கு இங்கே ஒரு அடையாளம் இருக்கிறது. அந்த கல்லறையிலிருந்து மறுபடியும் புறப்பட்டு நாம் மேலே போகப் போகிறோம். ஏனென்றால், அங்கே எருசலேமில் ஒரு காலியான கல்லறை இருக்கிறது. ஆமென். அதன் பிறகு அங்கிருந்து மேலே. ஏனென்றால், நம்மையெல்லாம் சந்திக்கும்படியாக அங்கேயிருந்து ஒன்று திரும்பி வருகிறது. அங்கே ஒரு அடையாளம் இருக்கிறது. ஒரு நாளிலே அவர்கள் எல்லாரும் மாம்சமாகி அவர்களுடைய சரீரங்களெல்லாம் அங்கே கிடந்தாலும், அந்த தோல் புழுக்களெல்லாம் அவர்களுடைய சரீரங்களை தின்று போட்டு விட்டிருந்தாலும், ஆனாலும், இன்னுமாக அங்கே ஒரு மண்ணுக்குரிய சரீரம் அது திரும்பி வந்து ஒரு நாளிலே மரித்தோரிடத்திலிருந்து மறுபடியும் உயிரோடு எழுந்திருக்கும். ஒரு நாளிலே அவர்கள் இந்த பூமிக்கு திரும்பி வரப் போகிறார்கள், ஓ, அப்பொழுது நான் அவர்களோடு கூட இருக்க விரும்புகிறேன். ஆமென். யோபு சொன்னான், "இந்த என் தோல் முதலானவை அழுகிப்போன பின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன். அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்;" அது சரி. அவன் திரும்பி வந்து கொண்டிருக்கிறான் என்பதை அவன் அறிந்திருந்தான். ஏனென்றால், தேவன் அவ்வாறு வாக்குத்தத்தம் செய்திருந்தார். 57. மேலும் இன்று இரவில் நமக்கு அடையாளங்கள் இருக்கின்றன. ஒரு முறை ஒரு மிஷனரி இந்த தேசத்தினூடாக கடந்து சென்று கொண்டிருந்தார். அவர் சொன்னார், அவரோடு கூட ஒரு நாத்திகன் இருந்தான், அவன் ஒரு வழிகாட்டி, அவன் சொன்னான், "நீங்களெல்லோரும் இங்கே வந்து உங்களால் பார்க்க முடியாத ஒரு காரியத்தை குறித்து இங்கே பேசிக் கொண்டிருக்கிறீர்கள், அதெல்லாம் முட்டாள்தனம், நீங்கள் சொல்லுகிறது போல அப்படிப்பட்ட ஒரு காரியமே இல்லை" என்று சொன்னானாம். மேலும் அவன் "ஏன் நீங்களெல்லாம் உங்கள் வீட்டிற்கு திரும்பிச் சென்று உங்கள் வேலைகளை பார்க்கக்கூடாது" என்று சொன்னானாம். அதற்கு அந்த மிஷனரி ஒன்றுமே சொல்லவில்லையாம். அன்று இரவு அவர்கள் தங்களுடைய கூட்டங்களையெல்லாம் முடித்த பிறகு, அடுத்த நாள் காலையில் அவர்கள் எழுந்திருந்தபோது, வனாந்தரத்தின் பின்னால் இருந்த குன்றுகளுக்குப் பின்னாலிருந்து சூரியன் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்ததாம். அந்த கடவுள் நம்பிக்கை இல்லாத அந்த மனிதன் வெளியே சென்று, அவன் சொன்னான், "ஓ என்ன ஒரு காலை." அவன் மறுபடியும் சொன்னான், "இங்கே கடந்த இரவு இந்த இடத்தை சுற்றிலும் குள்ள நரிகள் இருந்தன" என்று. அதற்கு இவர், "அங்கே நரிகள் இருந்தன என்று உனக்கு எப்படி தெரியும்" என்று கேட்டாராம். அதற்கு அவன், "அவை அங்கே இருந்தன என்பதற்கான அடையாளத்தை நான் கண்டேனே" என்று சொன்னானாம். அதற்கு இவர் "நான் ஒரு குள்ள நரியை கூட பார்க்கவில்லையே" என்றாராம். அதற்கு அவன் "ஆனால் அவை இருந்ததற்கான அடையாளம் இருந்ததே, அதை வைத்து அவை இருந்தன என்று நான் அறிந்து கொண்டேன்" என்று சொன்னானாம். உடனே இவர் அந்த சூரியனை நோக்கிப் பார்த்து, "அல்லேலூயா! தேவன் இன்னுமாக ஜீவிக்கிறார், அவர் இன்னுமாக சிங்காசனத்தண்டையில் வீற்றிருக்கிறார் என்பதற்கான அடையாளத்தை நான் பார்க்கிறேன்." ஆமென். என்றாராம். மேலும், இன்றிரவு பாவிகளை இரட்சிக்கும்படியாக இயேசு வரும்பொழுதும், அவர் தம்முடைய வார்த்தையை பிட்டுக் கொடுக்கும் பொழுதும், தம்முடைய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்யும்பொழுதும், தேவனுக்கு துதிகளை ஏறெடுக்கிறோம். நம்முடைய கிறிஸ்து இன்று இரவு ஜீவிக்கிறார். ஆமென். 58. நாம் ஜெபிப்போம். பரலோக பிதாவே, அந்த மகத்தான அந்த வேளை இப்பொழுது நெருங்கி வந்திருக்கிறது. நான் உம்மைக் குறித்து என் முழு இருதயத்தோடும் சாட்சி பகர்ந்திருக்கிறதான இந்த வேளையில், அந்த தருணமானது நெருங்கி வந்திருக்கிறது. என் இதயத்தில் உத்தமத்தோடு கூட என்னால் முடிந்தவரை சரியாய் இருந்து, தேவனுடைய ராஜ்யத்தை உயர்த்தி, மற்றும் ஜனங்கள் மேல் வரும் நியாயத்தீர்ப்பை குறித்தும் சரியாக அவர்களுக்கு எச்சரித்து சொல்லி விட்டேன். கர்த்தாவே, இப்பொழுது அவர்களும் மனந்திரும்பி இருக்கிறார்கள். இவர்களில் அநேகர் தங்களுடைய பாவ ஜீவியத்தைக் குறித்து வெட்கப்பட்டவர்களாய் உத்தம இருதயத்தோடு கூட அவர்கள் தங்கள் கைகளை உயர்த்தி இருக்கிறார்கள். தேவனே இங்கே கைகளை உயர்த்தியிருக்கிற ஒருவரை கூட நீர் மன்னிக்க வில்லை என்று நான் நம்ப மாட்டேன். மேலும் இப்பொழுது, நீர் இங்கு இருக்கிறீர் என்று இவர்களுக்கு காண்பிக்கத்தக்கதாக, நீர் அப்படி அவர்களுக்கு காண்பித்து தான் ஆக வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை, ஆனால், உம்முடைய மாம்ச சரீரத்திரத்தில் இன்று இரவில் நீர் இங்கே தோன்றும் பொழுது அவர்கள் உம்மைக் கண்டு தாங்கள் ஒரு ஜீவனுள்ள தேவனுக்கு நேராக தான் தங்கள் கைகளை உயர்த்தி இருக்கிறார்கள் என்று அறிந்து சந்தோஷப்படத்தக்கதாக. மேலும் இந்த மிகவும் வினோதமான இந்த வேளையிலே நாங்கள் ஜீவித்துக்கொண்டிருக்கும் பொழுது, நாங்கள் செய்தித்தாள்களில் நோக்கிப் பார்க்கிறோம், அந்த மகத்தான அர்மகெதோன் யுத்தம் வந்து கொண்டிருக்கிறது என்று. நாங்கள் பீரங்கிகளையும், அணுகுண்டுகளையும் பார்க்கிறோம். புறஜாதிகளின் முடிவு சமீபித்திருக்கிறதை நாங்கள் பார்க்கிறோம். உலகம் நன்றாக முதிர்ந்திருக்கிறதை நாங்கள் பார்க்கிறோம். நாங்கள் அதை எல்லாவிதத்திலும் பார்க்கிறோம். இதுவே அந்த வேளையாய் இருக்கிறது. அது நெருங்கிவிட்டது. தேவனே, எங்களுக்கு ஒரு ஜீவனுள்ள தேவன் இருக்கிறார் என்பதற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஒருவர் இருக்கிறார், அவர் இப்பொழுதே இங்கே இருக்கிறார், தம்மை கண்கூடாக காண்பித்துக் கொண்டிருக்கிறார், அதற்காக நாங்கள் உமக்கு மிகவும் நன்றி செலுத்துகிறோம். உமக்கு முன்பாக நான் என்னை தாழ்த்தியிருக்கிறதான இந்த வேளையிலே, உம்முடைய தாழ்மையான ஊழியக்காரனாகிய அடியேன், உம்முடைய முன் குறிக்கப்பட்ட வரத்தைக்கொண்டு இன்று இரவில் இந்த ஜனங்களுக்கு முன்பாக உம்முடைய பிரதிநிதியாக நான் என்னைக் காண்பிக்க நீர் என்னை அனுமதிப்பீரா என்று நான் ஆச்சரியப்படுகிறேன்! உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் கேட்டுக்கொள்கிறேன். ஆமென். 59. நான்... எப்படியோ, நான் இன்று இரவு தேவனுடைய மகிமை இங்கே இருப்பதைக் குறித்து நான் மிகவும் நன்மையாக உணர்கிறேன். நான் அது இதேபோல இதற்கு முன்பாகவே வல்லமையாக உடைத்து எழும்ப வேண்டுமென்று வெகுவாக விரும்பினேன். நல்லது அந்த ஜெப அட்டைகள் என்னவாய் இருக்கின்றன. கடந்த இரவு எதில் பார்த்தோம்? அது R என்பதில் துவங்குகிறதா? அது R என்று தான் நினைக்கிறேன்! நல்லது. நான் நினைக்கிறேன் Rல் கடைசியிலிருந்து நாம் அழைத்தோம் என்று. அப்படியென்றால், இன்று இரவு நாம் அதை முதலிலிருந்து அழைப்போம். அது சரி. யாராகிலும்... இப்பொழுது, நீங்கள் இங்கே இல்லையென்றால், நாம் முதலில் பார்ப்போம், அவர்கள் இன்றிரவு திரும்பி வராமல் இருக்கலாம்! யாரிடமாவது R1 இருக்கிறதா? உங்கள் ஜெப அட்டையை பாருங்கள். ஆம். அது நல்லது, பிறகு. நல்லது. பெண்மணியே அப்படியே இந்த பக்கம் வாருங்கள். R2, 3, 4, 5, 6, 7, 8, 9,10, 11, 12 அங்கே ஒரு டஜன் முதலில் உயர்த்தப்பட்ட கைகள் இன்றிரவு இங்கே இருக்கின்றன. சில நேரங்களில் நான் அப்படிச் செய்வதுண்டு, ஒரு இரவிலே எத்தனை பேர் இரட்சிக்கப்படுகிறார்களோ அத்தனை பேரையும் நான் மேடைக்கு அழைப்பதுண்டு. எத்தனை பேர் இரட்சிக்கப் படுகிறார்களோ, என்னால் முடிந்த வரைக்கும் நான் அப்படிச் செய்ய முயற்சிப்பேன். தேவன் எனக்கு கிருபை அளிக்கும் படியாக கேட்கிறேன். நீங்கள் சொல்லலாம், "ஓ, அது என்ன" என்று. நான் அதை கவனித்துப் பார்க்கிறேன். எனக்கு தேவனிடத்தில் ஒரு சில காரியம் உண்டு. நான் சொல்லுவேன் இப்பொழுது கர்த்தாவே, இன்று இரவிலே நீர் ஐம்பது பேரை இரட்சிப்பீரென்றால் நான் ஐம்பது பேரை மேடைக்கு அழைப்பேன். அல்லது அந்த ஐம்பது பேருக்கும் ஜெபிப்பதற்கான பெலனை நீர் எனக்குத் தாரும். அல்லது இன்னும் அதிகமான பேரை நீர் இரட்சிப்பீரென்றால், ஏன், அவ்வளவு பேருக்கும் ஜெபிப்பதற்குத் தேவையான பெலனை எனக்குத் தாரும் என்று கேட்பேன். மேலும், நான் நான் நான் இப்பொழுது, நான் வழக்கமாக அதை அழைப்பதுண்டு. மேலும், நான் யூகிக்கிறேன் 12 கரங்கள் உயர்த்தப்பட்டது என்று. அதை நேர்மறையாக்க, நான் மிகவும் குறுகிய மனப்பான்மையோடு இல்லை. நாம் பார்ப்போம். கடைசியாக அழைக்கப்பட்டது என்ன 13, 14 மற்றும் 15. R-12, 13, 14 மற்றும் 15, அவர்கள் வரட்டும். அது அதை இரட்டைப்படை எண்ணாக்கட்டும். மேலும், ஒரு வேளை வெளியில் யாராவது நிற்கிறதை நான் பார்த்திருக்கக்கூடும். நான் கர்த்தரோடு உத்தமமாய் இருக்கிறேன் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். இப்பொழுது, நீங்கள் அவரை நேசிக்கவில்லையா? அவர் அற்புதமானவராய் இல்லையா? 60. இப்பொழுது, கவனியுங்கள் நண்பர்களே, அவர்கள், உதவி காரர்கள் அங்கே கீழே, தயவுசெய்து சகோதரர்களே, அங்கே கீழே சென்று அந்த ஜனங்களை வரிசையில் வரச் செய்வீர்களா? அப்பொழுது அவர்கள் தங்களுடைய எண்ணின் படி வரிசையாக வர முடியும். இப்பொழுது, அவர்கள் அதை செய்கிறதான வேளையில், எத்தனை பேர்இப்பொழுது ஜெப அட்டை இல்லாமல் இருக்கிறீர்கள். உங்களுக்கு எப்படி, இயேசு உங்களை சுகமாக்க வேண்டுமா? நான் உங்கள் கரங்களை காணட்டும். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக! தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக! தேனே! தம்பி, தேவன் உன்னை ஆசிர்வதிப்பாராக! அங்கு எல்லா இடங்களிலும், அது அருமையாக இருக்கிறது. இப்பொழுது, உனக்கு ஒரு ஜெப அட்டை இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உனக்கு விசுவாசம் மாத்திரம் இருந்தால் போதும். அது சரிதானே? உனக்கு விசுவாசம் இருக்க வேண்டும். அவ்வளவுதான். தேவன் "ஜெப அட்டை வைத்திருப்பவர்களெவர்களோ" என்று அவர் சொல்லவில்லை. அவர் சொன்னார், "விசுவாசிக்கிறவர்களெவர்களோ, எவர்களெல்லாம் விசுவாசிக்கிறார்களோ" அது சரியா? அதற்கும் ஜெப அட்டைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜெப அட்டை என்பது வெறுமனே வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதற்காக மாத்திரமே. இப்பொழுது, வரங்களும், தேவனுடைய அழைப்புகளும் மனந்திரும்புதலில்லாமல் அளிக்கப்படுகிறது என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள். வேதம் அவ்வாறு கூறுகிறது. தேவன் அதை சபையில் வைத்திருக்கிறார். தேவன். 61. இப்பொழுது, கவனியுங்கள், ஷ்ரீவ்போர்ட்டிலுள்ள சிறுப் பிள்ளைகளே, இப்பொழுது நான் உங்களுக்கு ஒரு சிறு எச்சரிப்பை செய்யட்டும், வரப்போகிற நாட்களிலே நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். இப்பொழுது, கத்தி கூச்சலிட்டு, தேவனை துதிப்பதெல்லாம் தேவன் இல்லை. 'காயீன்' அவனும் அதே காரியத்தை தான் செய்தான். ஆனால் அவர்களோ வேத வாக்கியங்களிலிருந்து வந்தார்கள். பாருங்கள்! அவர்கள் தேவனுடைய வார்த்தையிலிருந்து வருகிறார்கள். பாருங்கள்! இப்பொழுது, அதை கவனியுங்கள். ஏனென்றால், தேவன் எப்பொழுதாவது ஒரு எழுப்புதலை அனுப்புவாரென்றால், அப்பொழுது பாதாளமும் கூட ஒரு எழுப்புதலை அனுப்புகிறது என்பதை நினைவு கூறுங்கள். மேலும் மோசேயும், ஆரோனும் அந்த எகிப்தியர்களை தோற்கடிக்கும்படியாக புறப்பட்டு சென்றபோது, அங்கே யன்னேயும், யம்பிரேக்களும் கூட இருந்தார்கள், அவர்கள் அங்கே நின்று கொண்டு கிட்டத்தட்ட மோசேயை ஆள்மாறாட்டம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களால் வியாதிகளை கூட வரவழைக்க முடிந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால், அவர்களால் வியாதியை சுகமாக்க முடியவில்லை. தேவனேயன்றி வேறொருவராலும் சுகமாக்க முடியாது. தேவன் மாத்திரமே சுகமளிப்பவர். அதுதான் சரி. தேவன் மாத்திரமே சுகமளிப்பவர். இப்பொழுது, அதனுடைய கனிகள் அவை என்னவாக இருந்தன என்பதை நிரூபித்தன. பாருங்கள்! "அவர்கள்கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்" அது சரிதானா? 62. இப்பொழுது, ஓ, நீங்கள் கர்த்தராகிய இயேசுவை உங்கள் முழு இருதயத்தோடும் நேசிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அது சரி. இப்பொழுது, அது என்ன என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். எனக்கு ஒரு சில நிமிடம் காத்திருக்க வேண்டும். ஒருவேளை நான் நினைக்கிறேன் இந்த ஜனங்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்று, அப்பொழுது அவர்கள் அப்படியே கடந்து போகலாம். அது நன்றாக இருக்கும். நான் அப்படி தான் நினைக்கிறேன். அப்படியே அந்த பெண்மணி வரட்டும். இங்கே ஒரு நிமிடம் நிற்கட்டும். இப்பொழுது, ஒரு நிமிடம். இப்பொழுது, பெண்மணி, இப்பொழுது, இங்கே இருக்கிற அந்த பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அது எப்படிப்பட்டது என்று நான் உனக்கு சொல்லட்டும். நீ அதை விசுவாசிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நீ அப்படிச் செய்வாயா? என்னுடைய கூட்டங்களில் ஒன்றில் நீ இருப்பது இதுதான் முதல் தடவையா? இல்லை. இதற்கு முன்பாக என்னுடைய கூட்டங்களில் நீ இருந்திருக்கிறாய். ஆனால், எனக்கு உன்னை தெரியவில்லை. தெரியாது தானே? எனக்கு உன்னை தெரியாது. ஆனால், நீ தேவனை விசுவாசிப்பாயென்றால், உனக்கு இருக்கிற இந்த ஸ்திரீகளுக்குரிய தொல்லை அது உன்னை விட்டுப் போய்விடும். நீ அதை விசுவாசிக்கிறாயா? தேவன் அவளை ஆசீர்வதித்து, அவளை சுகமாக்குவாராக என்று நான் ஜெபிக்கிறேன். ஆமென். 63. ஸ்திரியே, உன்னை எனக்குத் தெரியாது. தேவனுக்குத் தெரியும். ஆனால் அந்த புற்று நோய்க்கான அந்த மரண நிழல், நீ தேவனை விசுவாசிப்பாயென்றால் தேவன் உன்னை சுகமாக்க முடியும். நீ அதை விசுவாசிக்கிறாயா? அப்படியென்றால் நீ வீட்டுக்குப் போகலாம். இப்பொழுது, பெண்மணி ஒரு வேளை நான் உனக்கு ஜெபம் செய்யாமலேயே நீ அங்கே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்த பொழுதே தேவன் உன் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார் என்று நான் சொல்வேனென்றால், நீ அதை ஏற்றுக்கொள்வாயா? அப்படியென்றால், நீ அப்படியே விசுவாசித்துக் கொண்டு கடந்து போகலாம், இயேசுவின் நாமத்தில் நீ சுகம் அடைவாய். போ. பெண்மணி நீ உன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா? அப்படியென்றால், நீ போய் தேவனுக்கு நன்றி செலுத்து. "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று நாம் சொல்வோமாக. [சபையார் "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று சொல்கிறார்கள் -- ஆசி.] பெண்மணியே, நீ உன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா? தேவன் உன்னை சுகமாக்குவார் என்றும், அந்த சர்க்கரை வியாதியை உன்னை விட்டு எடுத்துப் போடுவார் என்றும் நீ விசுவாசிக்கிறாயா? அவர் அதை செய்வார் என்று நீ விசுவாசிக்கிறாயா? அவர் அதை உன்னிடத்திலிருந்து எடுத்துப் போடுவார் என்று விசுவாசிக்கிறாயா? நல்லது. சரி. ஆமென். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் எல்லாரும் விசுவாசிக்கிறீர்களா? விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். வேதம் கூறுகிறது, "நீ விசுவாசித்தால், உனக்கு எல்லாம் கூடும்" என்று. 64. பெண்மணியே நீ எப்படி இருக்கிறாய்? எனக்கு உன்னை தெரியாது, அப்படித்தானே? என்னை அவருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறாயா? தேவனுடைய ஊழியக்காரன் என்று. நாம் இருவரும் ஒருவருக்கொருவர் அந்நியராய் இருக்கிறோம் ஆனால் உன்னுடைய தொல்லை என்ன என்பதை தேவனால் எனக்கு வெளிப்படுத்த முடியும் என்று நீ விசுவாசிக்கிறாயா? அவரால் முடியும் என்று நீ விசுவாசிக்கிறாயா? நீ விசுவாசிக்கிறாய்? அது தேவனிடத்திலிருந்து வருகிறது என்று நீ அதை ஏற்றுக் கொள்வாயா? அது தேவனிடத்திலிருந்து வருகிறது என்று நீ விசுவாசிப்பாயா? நல்லது. மீதி இருக்கிற நீங்கள் எல்லாரும் அப்படியே விசுவாசிப்பீர்களா? ஒருவர் சொன்னார்... நாம் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் கதையை எடுத்துக்கொள்வோம், ஒரு நிமிடத்திற்கு. நாம் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் கதையை எடுத்துக்கொள்வோம். அங்கே அவர் அவர் ஒரு கிணற்றண்டையில் உட்கார்ந்து கொண்டு அங்கே ஒரு பெண் வருகிறாள். உங்களுடையதும் -- உங்களுடைய கதையும் இன்றைக்கு அதே விதமாகத்தான் இருக்கிறது. பாருங்கள்? அப்படி இல்லை, ஒருவேளை அதே காரியமாக இல்லாமல் இருக்கலாம்! நான் வெகு தூரத்தில் இருக்கிறேன். நான் வெறுமனே அந்த கர்த்தராகிய இயேசுவின் ஒரு ஊழியக்காரன். ஆனால் நீங்கள் அந்த சமாரிய பெண்ணைப் போல ஒரு நடத்தை கெட்டவள் என்று நான் சொல்ல வரவில்லை, ஆனால், அது மறுபடியுமாக ஒரு மனிதனும், ஒரு பெண்ணும் சந்திக்கும் காரியமாக இருக்கிறது. மேலும், கிறிஸ்து சொன்னார், "இந்த உலகத்தின் கடைசி பரியந்தம் அவர் நம்மோடு கூட இருப்பதாக." அவர் அப்படி இருப்பாரென்றால், ஜனங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்பதற்கு அதுவே அடையாளமாக இருக்கும். அன்றைக்கு அந்த வாக்குத்தத்தத்தை செய்த அதே கிறிஸ்து இன்றைக்கு இங்கே இருக்கிறார். அது சரியா? நீங்கள் அதை விசுவாசிப்பீர்களா, ஜனங்களே? [ஜனங்கள் "ஆமென்" என்று சொல்கின்றனர் ஆசி.] 65. இப்பொழுது, இங்கே இருக்கிற இந்த ஸ்திரீயை குறித்து ஒருவேளை கர்த்தர் சில காரியங்களை எனக்கு வெளிப்படுத்துவாரென்றால், ஒருவேளை அவளுடைய தொல்லை என்ன என்பதைக் காட்டிலும் மேலான காரியங்களை வெளிப்படுத்துவாரென்றால், அப்பொழுது நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். அப்படியென்றால், என்னை நோக்கிப் பார். சகோதரியே, நீ என்னை பார்ப்பாயா? இப்பொழுது இது ஒரு வரம். இது வெறுமனே தேவனுடைய ஒரு வரம். நான் உன்னை அறிந்து கொள்வதற்கு எனக்கு வேறு வழியே இல்லை. உன்னை குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் நீ ஒரு நிமிடம் அப்படியே என்னை நோக்கிப் பார். நான் உன்னிடத்தில் பேசிக்கொண்டிருக்கிறதான இந்த வேளையிலே நாம் விசுவாசிப் போம். பாருங்கள்? நல்லது. இப்பொழுது, ஆம், ஐயா. நீ இப்பொழுது ஒரு மரிக்கும் நிலையில் இருக்கிறாய். அதுதான் சரி. ஏனென்றால், உனக்கு புற்றுநோய் இருக்கிறது. புற்றுநோய் மாத்திரமல்ல, புற்று நோய்கள். உனக்கு அது இரண்டு இருக்கிறது. அது இரண்டுமே உன்னுடைய மார்பகங்களில் இருக்கிறது. அதுதான் சரி. நீ மிகவும் நடுக்கம் கொண்டிருக்கிறாய். இல்லையா? மேலும் நீ இங்கே ஷ்ரீவ்போர்ட்டை சேர்ந்தவள் அல்ல. இல்லை, ஐயா. நீர் ஆர்கன்சாஸிலிருந்து வருகிறீர். அதுதான் சரி. உன்னுடைய பெயர் ரோசலி. அது சரியில்லையா? இப்பொழுது, நீ ஆர்கன்சாஸுக்கு திரும்பிச் சென்று கர்த்தராகிய இயேசுவை விசுவாசித்து சுகம் அடைவாயாக. ஆமென். 66. அது என்ன அது? பரிசுத்த ஆவிக்கு விட்டுக் கொடுப்பது. நாம் இன்று இரவு அவருக்கு நம்மை விட்டுக் கொடுப்போம். ஓ, அவர் இங்கே இருக்கிறார். விட்டுக் கொடுங்கள், ஓ, தேவனே. இருதயங்களை வெளிப்படுத்தும். விட்டுக் கொடுங்கள், அவருக்கு விட்டுக் கொடுங்கள், கர்த்தாவே... ஆமென். இப்பொழுது, தரிசனங்கள் தான் என்னை பலவீனமடையச் செய்கின்றன, நிச்சயமாக. தரிசனங்கள் சுகம் அளிப்பதில்லை. தரிசனங்கள் வெறுமனே தேவனையும் (ஆமென்) அவருடைய நன்மைகளையும் நமக்கு ரூபகராப்படுத்துகின்றன. அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற அந்தப் பெண்மணி, தேவன் அந்த பித்தப்பை கோளாறில் இருந்து உன்னை குணமாக்குகிறார் என்று நீ விசுவாசிக்கிறாயா? அவர் உன்னை சுகமாக்குவார் என்று நீ விசுவாசிக்கிறாயா? நீ உன் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் நீ எதை கேட்டாயோ அதை பெற்றுக்கொள்வாய். நீ அதை விசுவாசித்தால். ஆமென். பாருங்கள்? நான் அந்த பெண்ணுக்கு ஒரு ஜெப அட்டை இருக்கிறதா என்று வியக்கிறேன்! பெண்மணி, ஜெப அட்டை இல்லையா? உனக்கு ஒரு ஜெப அட்டை இருக்கிறதா? உன்னிடத்தில் ஜெப அட்டை இல்லையா? இருக்கிறதா? ஆம். உன்னிடத்தில் ஒரு ஜெப அட்டை இருக்கிறது. நல்லது அப்படியென்றால், இப்பொழுது, உனக்கு அது தேவையில்லை. அது சரி. இப்பொழுது, அது உனக்கு தேவையில்லை. இப்பொழுது உன்னுடைய விசுவாசம் அவரைத் தொட்டது. "உன்னால் விசுவாசிக்க கூடுமானால்." 67. அந்தப் பெண்மணி, கடைசியிலிருந்து இரண்டாவதாக இருக்கிற அந்த வயதான பெண்மணி, ஒரு ஜோடி கண்ணாடிகளை அணிந்து கொண்டு இந்த பக்கமாக பார்த்துக் கொண்டிருக்கிற அந்தப் பெண்மணி, உங்களுக்கு குறைந்த இரத்த அழுத்த வியாதி இருக்கிறது. சகோதரியே, இயேசு கிறிஸ்துவால் உன்னை சுகமாக்க முடியும் என்று நீ விசுவாசிக்கிறாயா? அங்கே ஒரு இளஞ்சிவப்பு நிற பஞ்சு மெத்தையின் மேல் உட்கார்ந்து கொண்டு, புள்ளி போட்ட உடையை அணிந்து கொண்டு, என்னை நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிற நீ, மேலே நோக்கிப் பார்த்து, ஆம், என்று சொல். அங்கே இருக்கிற நீ இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்குகிறார் என்று நீ விசுவாசிக்கிறாயா? நீ அதை விசுவாசித்தால் உன் கைகளை உயர்த்திக் காட்டு. சரி அப்படியென்றால், நீ அதை ஏற்றுக்கொள். ஆமென். பாருங்கள் எப்படியாக எப்படியாக விசுவாசமானது சுயநினைவின்றி இருக்கிறது என்று? அந்தப் பெண்மணி அங்கே உட்கார்ந்து கொண்டு, தன் இருதயத்தில் ஏதேதோ காரியங்களை நினைத்துக் கொண்டிருந்தாள், நான் பேசியதை கூட அவள் அதிகமாக கேட்கவில்லை. அது சரி. ஆனால், நீங்கள் பாருங்கள்? தேவன் அவளோடு பேசினார். ஆமென். அது "இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார்" என்பதாக இல்லையா? அது... நான்... நானல்ல. அது வேதாகமம். ஆமென். நீ விசுவாசித்தால், உனக்கு எல்லாம் கூடும். 68. ஸ்திரீயே, நாம் ஒருவருக்கொருவர் அந்நியர். ஏன், நீ பார்ப்பதற்கு நல்ல ஒரு ஆரோக்கியமான நபரைப் போல் இருக்கிறாய். நான் உன்னை இதற்கு முன்பு பார்த்ததில்லை. ஆனால் கர்த்தராகிய இயேசு உன்னை அறிவார். அவர் அறிவார் இல்லையா? நீயும் அவரை விசுவாசிக்கிறாய். நீ என்னை அவருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறாய்? என்னே, எப்படிப்பட்டதான ஒரு விசுவாசம் ஜனங்கள் மத்தியில் அசைவாடிக் கொண்டிருக்கிறது. ஆகவே... நீங்கள் அதை அவ்விதமாகவே வைத்துக் கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். நீ மிகவும் நடுக்கம் கொண்டிருக்கிறாய், ஏனென்றால், ஆம், ஏனென்றால், நீ உன்னுடைய பெருங்குடலில் ஒரு கோளாறினால் அவதியுற்றுக் கொண்டிருக்கிறாய். அது சரி. அது உன்னுடைய பெருங்குடலில் இருக்கிற ஒரு கட்டி. அது சரி. அது சரியா? உனக்கு உன் வயிற்றிலே கூட பிரச்சனை இருக்கிறது. வயிற்றிலே. அது சரி. அது சரிதானே? நான் உன் மனதை படிக்கவில்லை. ஆனால், உனக்கு அந்த தொல்லை தான் இருக்கிறதாக மருத்துவர் சொல்கிறார். ஆகவே இப்பொழுது நீ சுகமாகப் போகிறாய் என்று நீ விசுவாசிக்கிறாய். அது சரி. இப்பொழுது இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நீயாகவே நடந்து செல். தேவன் உன்னோடு இருப்பாராக. ஆமென். நீ அவரை விசுவாசிக்கிறாய்? சந்தேகப்படாதே. விசுவாசம் கொள். 69. நீ எப்படி இருக்கிறாய்? நாம் இருவரும் ஒருவருக்கொருவர் அந்நியர், அப்படித்தானே? அப்படித்தான். எனக்கு உன்னை தெரியாது. உனக்கு என்னை தெரியாது. உனக்கு இருக்கிற பிரச்சனை என்ன என்று எனக்கு ஒன்றுமே தெரியாது. அது உனக்கு தெரியும். எனக்கு அது தெரியாது. நான் வெளிப்படையாக சொல்கிறேன், அங்கே ஒன்றுமே இல்லை. நீ இங்கே இருக்கிற ஒரே காரணம் நீ வேறு யாரோ ஒருவருக்காக இங்கே இருக்கிறாய். அது உன்னுடைய சகோதரன். அவர் இங்கே இல்லை. அவர் இங்கிருந்து வடமேற்கில் உள்ள ஓக்லஹாமா என்கிற இடத்தில் இருக்கிறார். அவர் ஒரு குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். நான் அவருக்காக ஜெபிக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாய். அது சரியா? அது சரி. நீ உன் வழியே போகலாம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கர்த்தராகிய இயேசு அந்த மனிதனை இரட்சிக்கிறார். அல்லேலூயா. தேவனிடத்தில் விசுவாசம் கொள். நீ எப்படி இருக்கிறாய்? நாம் ஒருவருக்கொருவர் அந்நியர். எனக்கு உன்னை தெரியாது. உனக்கு என்னை தெரியாது. தேவன் நம் இருவரையும் அறிவார். நான் உனக்கு ஜெபிக்க வேண்டும் என்பதற்காக நீ இங்கே இருக்கிறாய். உன்னுடைய இடது கண்ணில் உனக்கு ஒரு சதை வளர்ச்சி இருக்கிறது, அதை இப்பொழுது சரியாக பார்க்க முடியாது. ஆனால், எப்படியாகிலும் அது அங்கே இருக்கிறது. அது சரிதானே? உனக்கு உன் முகத்திலே தோல் புற்றுநோய் இருக்கிறது. அது சரிதானே? அதற்காக ஜெபிக்கப்பட வேண்டும் என்று நீ விரும்புகிறாய். அது உண்மை தானே. அப்படியென்றால் இங்கே வா, நான் ஜெபிப்பேன். ஓ, தேவனே, இயேசுவின் நாமத்தில் நீர் இந்த வியாதியை எடுத்துப் போட வேண்டுமென்று நான் உம்மிடத்தில் ஜெபிக்கிறேன். இப்பொழுது இயேசுவின் நாமத்தில் நான் இதை சபிக்கிறேன். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், அவளை விட்டு வெளியே வா. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே. 70. தேவனிடத்தில் விசுவாசமாய் இரு. விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும். "நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய்" என்று வேதம் கூறுகிறது. நீ அதை விசுவாசிக்கிறாயா? ஆமென். சரியாக இங்கே இரண்டு சிறு பிள்ளைகள் நின்று கொண்டிருக்கிறதை நான் காண்கிறேன். அவர்களுடைய தாயார் அவர்களோடு இருக்கிறாள். அவர்கள் இருவருக்கும் சைனஸ் வியாதி இருக்கிறது. அது சரி. கர்த்தராகிய இயேசு அந்த பிள்ளைகளை சுகமாக்குவார் என்று நீ விசுவாசிக்கிறாய். உன்னால் விசுவாசிக்க முடிந்தால், உன்னிடத்தில் விசுவாசம் இருந்து நீ தேவனை விசுவாசிப்பாயென்றால் தேவன் அதை செய்வார். இரண்டு சிறு பிள்ளைகள், ஒரு சிறிய பையன், ஒரு சிறு பெண். விசுவாசம் கொள், அப்பொழுது தேவன் உனக்கு அதை அருளுவார். அது சரி. நீ - சிறு சகோதரியே, இயேசு கிறிஸ்து தான் தேவனுடைய குமாரன் என்று உன் முழு இருதயத்தோடும் நீ விசுவாசிப்பாயா? நீ அப்படி செய்வாயா? நான் உனக்கு ஒரு அன்னியன். எனக்கு உன்னை தெரியாது. நான் உன்னை பார்த்ததே இல்லை. நீ அந்த பாடல் குழுவில் உட்கார்ந்து இருந்தாய். அது சரி. நீ சற்று பதற்றத்துடன் காணப்படுகிறாய். அப்படி இல்லையா? மேலும் தேவன் உன்னை சுகமாக்குவார் என்று நீ விசுவாசிக்கிறாய். "தேவன் உன்னை சரியாக்குவார், சுகமாக்குவார்" என்று நீ விசுவாசி. மேலும் இன்னொரு காரியம், வேறொருவர் கூட சுகமாக்கப்பட வேண்டும் என்பது உன் இருதயத்தின் வாஞ்சையாய் இருக்கிறது. அது சரி. அங்கே ஆற்றுக்கு அப்பால் எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு பெண்மணி, போஸீர். மேலும் அவளுக்கு கீல்வாதம் மற்றும் வாதநோய் இருக்கிறது. அது சரிதானே? ஆமென். நீ என்னை தேவனுடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறாயா? சரி. அப்படியென்றால், நீ போய், நீ எதை கேட்டாயோ அதை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே பெற்றுக் கொள். ஆமென். 71. தேவனால் அறுவை சிகிச்சையை தாண்டிச் செல்ல முடியும். ஒரு அறுவை சிகிச்சை இல்லாமலேயே அந்தக் கட்டியை நேரடியாக அவரால் எடுத்து போட்டு உன்னை சுகமாக்க முடியும். நீ அதை விசுவாசிக்கிறாயா? நல்லது. அப்படி என்றால், கிறிஸ்துவின் நாமத்தில் அதைப் பெற்றுக்கொள். ஆமென். இங்கே கூடியுள்ள ஜனங்கள் அதை விசுவாசிக்கும்படிக்கு நான் சவால் விடுகிறேன். ஒவ்வொருவரும் அதை விசுவாசிக்கும்படிக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் சவால் விடுகிறேன். அந்த பக்கமாக பாருங்கள், என்னை அல்ல, ஆனால் அவரை நோக்கிப் பாருங்கள். ஆம். அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஜெபியுங்கள். சந்தேகப் படாதீர்கள். விசுவாசம் கொள்ளுங்கள். ஆமென். அங்கே கைகளை உயர்த்தி இருக்கிற நீ, உன்னுடைய உயர் இரத்த அழுத்தம் உன்னை விட்டு போய்விடும் என்று நீ விசுவாசிக்கிறாயா? அவர் அதை செய்வார் என்று நீ நீ விசுவாசிக்கிறாயா? ஆம். அவர் அதை உன்னை விட்டு எடுத்துப்போடுகிறார் என்று நீ விசுவாசிக் கிறாயா? நீ அவர் அதை செய்வார் என்று விசுவாசிக்கிறாயா? நல்லது. நீ அதை பெற்றுக் கொள்ளலாம். சிறு மெக்ஸிகப் பெண்ணே, நீ எதற்காக அழுது கொண்டிருக்கிறாய்? நான் நினைக்கிறேன் நீ ஒரு ஸ்பானிய பெண் என்று. என்னை தேவனுடைய தீர்க்கதரிசி என்று நீ விசுவாசிக்கிறாயா? சில நிமிடங்களுக்கு நீ எழுந்து நிற்பாயா? நீ ஒரு நிமிடம் எழுந்து நிற்பாயா? என்னைப்பார். எனக்கு எப்பொழுதுமே மெக்சிக மக்களிடம் வெற்றி தான் கிடைத்திருக்கிறது, ஏனென்றால், அவர்கள் விசுவாசிக்கிறார்கள். ஒரு நிமிடம் அப்படியே என்னை நோக்கிப் பார். உன்னை சுற்றி ஏதோ ஒன்று இருக்கிறது. ஒரு கரிய நிழல் உன்னைப் பின் தொடர முயற்சிக்கிறது. நீ ஜெபித்துக்கொண்டிருக்கிறாய். உனக்கு தேவையானதெல்லாம் வேறு யாருக்காகவோ ஜெபித்துக்கொண்டிருக்கிறாய். அது உன்னுடைய தோழி. அவள் நரம்பு தளர்ச்சியினால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். அது சரியாய் இல்லையா? சிறு பெண்ணே. உன்னுடைய இருதயத்தை தொல்லை படுத்திக் கொண்டிருப்பது எது என்று நான் உனக்கு சொன்னால் நீ என்னை தேவனுடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிப்பாயா? நீ இரட்சிக்கப்பட வேண்டும் என்றும், பரிசுத்த ஆவியை பெறவேண்டும் என்றும் விரும்புகிறாய். அது சரிதானே? அது சரிதானே? அதற்காக தான் இப்பொழுது நீ அழைக்கப்பட்டிருக்கிறாய். 72. இங்கே இருக்கிற யாருக்காவது பரிசுத்த ஆவியின் அபிஷேகம் தேவையா? இரட்சிக்கப்பட விரும்புகிறீர்களா? அவளோடு கூட கடந்து வாருங்கள். அல்லேலூயா. இங்கே மேலே ஏறி வாருங்கள். இயேசு இங்கே இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசித்தால், மேலும் தேவனால் உங்களை இரட்சிக்க முடியும் என்று நீங்கள் விசுவாசித்தால், வாருங்கள். வாருங்கள். எல்லோரும் வாருங்கள். பரிசுத்த ஆவியின் அபிஷேகம் வேண்டும் என்று விரும்புகிற நீங்கள் ஒவ்வொருவரும் வாருங்கள். நாங்கள் இன்னுமாக வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்போம். வாருங்கள், இரட்சிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிற எல்லாரும், கைகளை உயர்த்தின எல்லாரும். நான் நினைக்கிறேன், இப்பொழுது தேவன் ஒரு மகத்தான காரியத்தை செய்ய ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார். வாருங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் இங்கு வந்து முழங்கால் படியிடுங்கள். நீங்கள் வந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இதுவே. வாருங்கள், பாப்திஸ்துகளே. வாருங்கள், மெத்தோடிஸ்டுகளே. வாருங்கள், பிரஸ்பிட்டீரியன்களே. நான் உங்களுக்கு கிறிஸ்துவின் நாமத்தில் சவால் விடுகிறேன். வந்து தேவனை முயற்சித்துப் பாருங்கள். வாருங்கள், தேவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். நீங்கள் அதை செய்வீர்களா? வாருங்கள், இப்பொழுதே வந்து அதை செய்யுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும், எல்லோரும். தங்கள் கைகளை மேலே உயர்த்தியிருக்கிற நீங்கள் எல்லாரும் அப்படிச் செய்யுங்கள். வாருங்கள், மேலே வாருங்கள். இங்கே ஒரு முடமான சிறு பையன் வருகிறான். பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும்படியாக. ஓ, நீ உன்னைக் குறித்து நீ வெட்கப்பட வேண்டும். நீ கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வர மாட்டாயா? இதுதான் அது. நீ வருவாயா? நீ வருவாயா? 73. எல்லா இடங்களிலும் இருக்கிறவர்களே, உங்கள் தலைகளை தாழ்த்துங்கள். நாம் ஒரு சிறு ஜெபத்தை ஏறெடுப்போம். பரிசுத்த ஆவியானவர் மகத்தான விதத்திலே அசைவாடுகிறார் என்று நான் உணர்கிறேன். ஏதோ காரியம் சம்பவிக்கப் போகிறது. ஓ, கிறிஸ்துவே, இவர்களுக்கு அழைப்பு விடுவதற்கு கர்த்தாவே, நான் என்னால் முடிந்த அளவுக்கு காரியத்தை செய்து விட்டேன். இப்பொழுது அவர்களையெல்லாம் உம்மிடத்தில் நான் சமர்ப்பிக்கிறேன், மேலும் நீர் இங்கு வந்திருக்கிறீர். நான் வார்த்தையை பிரசங்கித்து, நீர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தீர் என்று அவர்களுக்கு சொல்லி இருக்கிறேன். மேலும், இன்று இரவு கர்த்தாவே நாங்கள் உம்முடைய சாட்சிகளாய் இருக்கிறோம். மேலும் நீர் இங்கே இருக்கிறீர். நீர் இந்த பூமியில் இருந்த பொழுது எப்படி சாட்சி பகர்ந்தீரோ அதே போல இன்றைக்கும் நீர் செய்து கொண்டிருக்கிறீர். இன்று இரவிலே இங்கே பரிசுத்த ஆவியின் ரூபத்தில் இருக்கிறீர். பாவத்தை கடிந்து கொள்கிறீர். நீர் ஒரு எழுப்புதலை அனுப்பிக்கொண்டிருக்கிறீர். உம்முடைய ஜனங்களுக்கு அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கிறீர். அந்த விடுதலையின் நேரம். அந்த விடுதலையின் அம்பு..?... தேவனே, இந்த திரளான ஜனங்களில் இன்று இரவில் உம்மைத் தேவைப்படுகிறவர்கள் ஒவ்வொருவரையும் இந்த பீடத்தண்டையில் வந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்படியாக நீர் செய்ய வேண்டும் என்று கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். நீங்கள் வருவீர்களா? அது சரி, பெண்மணி. அது சரி. அப்படியே கடந்து செல். உன்னுடைய காலூன்றி நில். இது பரிசுத்த ஆவியானவர் உன்னோடு பேசுவது. நான் அவ்விதகமாக உணரவில்லை என்றால் நான் இதை சொல்ல மாட்டேன் என்னுடைய இருதயத்தில் நான் அப்படி உணர மாட்டேன். நான் இந்த இடத்தில் நின்று கொண்டு கர்த்தருடைய நாமத்தில் இந்த காரியங்களை செய்து, அதே நேரத்தில் நான் ஒரு மாய்மாலக்காரனாக இருக்க வேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாய். பார்? இந்த உலகத்தில் இருக்கிற எதற்காகவும் நான் அப்படிச் செய்ய மாட்டேன். அங்கே இருக்கிற ஜனங்கள் பீடத்தண்டைக்கு வரும்படியாக ஏவப்படுகிறார்கள் என்பதை நான் அவ்விதகமாக உணர்ந்து ஏவப்படுகிறேன். அதுதான் சரி. ஆகவே நீ யார் என்று அறிந்திருப்பாய் என்றால், நீ இந்த மேடைக்கு வரும்படியாக கிறிஸ்துவின் நாமத்தில் நான் உனக்கு சவால் விடுகிறேன். 74. மேலும் நினைவு கூறுங்கள். நான் உங்களை ஒரு வேளை நியாயத்தீர்ப்பு நாளில் சந்திக்க நேர்ந்து, அப்பொழுது நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவீர்களென்றால், அது என் தவறல்ல. அது தேவனுடைய தவறும் அல்ல. நான் அவருடைய வார்த்தையை பிரசங்கித்திருக்கிறேன். அவரும் தம்முடைய அற்புதங்களைக் கொண்டும், அடையாளங்களைக் கொண்டும் அதை உறுதிப்படுத்தி இருக்கிறார். அவர் இன்று இரவு இங்கே இருக்கிறார். அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்திருக்கிறார். இப்பொழுது உங்களுக்கு அவர் தேவை என்றால் வாருங்கள். இம்மானுவேலின் இரத்த நாளங்களிலிருந்து பாய்கின்ற ஒரு ஊற்று உண்டாகி இருக்கிறது, பாவிகள் அதற்குள் மூழ்கி தங்கள் பாவக்கறைகளை நீக்கிக்கொள்ள முடியும். இப்பொழுது ஒரு சபையின் கொள்கையைப் பிடித்துக்கொண்டும், அல்லது ஒரு சபையில் அங்கத்தினனாய் இருப்பதை உறுதியாகப் பிடித்துக் கொண்டும் ஆனால், நித்திய ஜீவனின் நிச்சயமில்லாமல் இன்றைக்கு நீ இருப்பாய் என்றால், என் நண்பனே நீ இப்பொழுதே வருவது உனக்கு நல்லது. இந்த ஜீவியத்தில் நான் இனி ஒருபோதும் உன்னை சந்திக்க முடியாமல் போகலாம்! உன்னுடைய...?... நாம் மறுபடியும் சந்திப்பதற்கு முன்பாக போய்விடலாம். நீ மறுபடியும்...?... ஆனால், இதுதான் உனக்கான இரவு. வாலிபனே தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது சரி. ஓ, பெண்மணி அது உன்னை உணர்த்துகிறது, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அப்படியே நேராக நடந்து வா. உன்னுடைய இருக்கையை விட்டு எழுந்து நேராக இங்கே நடந்து வா. நேராக இங்கே வா. நினைவில் கொள், வாழ்க்கையில் உனக்கு வேறு வழியில்லை. பொழுது விடிவதற்குள்ளாக நீ ஒரு வேளை மரிக்கலாம். ஆனால், ஒரு காரியம் மாத்திரம் நிச்சயம் நீ மரிக்கத்தான் போகிறாய். இங்கே இருக்கிற நீங்கள் ஒவ்வொருவரும் தேவனை சந்தித்தாக வேண்டும். மேலும் நீங்கள் அவரை நியாயத்தீர்ப்பில் சந்திக்கப் போகிறீர்கள். இன்று இரவு பிரசங்கிக்கப்பட்ட இந்த செய்திக்கு அன்று நீங்கள் அவருக்கு கணக்கு கொடுத்தாக வேண்டும். இந்த மேடையின் மேல் வந்திருக்கிற நீங்கள் எல்லாரும் இங்கே வந்ததற்காக ஒரு நாளிலே அவருக்கு முன்பாக தோன்றி கணக்குச் சொல்ல வேண்டும். சரியாக இங்கே ஷ்ரீவ்போர்ட்டிலும், லூயிசியானாவிலுமுள்ள நீங்கள், மாறாத அடையாளங்களினால் வேதாகமம் உங்களுக்கு முன்பாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதற்கான மாறாத அடையாளங்கள். 75. அவர் உங்களை இந்த பீடத்தண்டைக்கு வரும்படியாக அழைக்கிறார் என்று சொல்வதற்கு நான் அவருடைய சாட்சியாய் இருக்கிறேன். வாலிபர்களே மற்றும் முதியவர்களே, மெத்தோ டிஸ்ட்டுகளே, பாப்திஸ்துகளே, பெந்தெகொஸ்தேகாரர்களே, யாருக்கெல்லாம் வர விருப்பமோ அவர்கள் இந்த பீடத்தண்டை வரலாம். இரத்தத்தால் நிறைந்த ஒரு ஊற்று இங்கே இருக்கிறது..? என்னுடைய சாட்சியின் மூலம், அதாவது..?...பாவிகள் அங்கே வருவதற்கு..?...வாருங்கள். நீங்கள் எல்லாரும் இந்த பீடத்துக்கு செல்லுகிற அந்த வழியிலே கடந்து வாருங்கள். தொலைக்காட்சி பெட்டியை பார்ப்பதை விட்டு வெளியேறுங்கள். உலகத்தின் காரியங்களை பார்ப்பதிலிருந்து வெளியேறுங்கள். இன்று இரவு கல்வாரியை நோக்கிப் பாருங்கள். கிறிஸ்துவை பாருங்கள். உங்களுக்காக யார் மரித்தார் என்பதை பாருங்கள். உங்களுக்காக (பாவத்தின்) கிரயத்தை யார் செலுத்தினார் என்று பாருங்கள். உங்கள் பாவத்தை எல்லாம் இனி நினைவு கூறாமல் இருக்க போகிறவர் யார்...?... என்று பாருங்கள். உலகத்தின் காரியங்களை விட்டு வெளியே வாருங்கள். பெண்மணியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக? நீ நீண்ட காலம் ஜீவிக்கும்படியாக, வா, இறங்கி வா. இன்னும் வேறு யார் வரப்போவது? வாருங்கள், ஒவ்வொருவரும், ஒவ்வொருவரும், இப்பொழுது கர்த்தரிடத்திலிருந்து உங்களுக்கு வேறு ஏதாவது தேவை இருக்குமென்றால், இப்பொழுதே இந்த பீடத்தண்டைக்கு இறங்கி வாருங்கள். பரிசுத்த ஆவியின் அபிஷேகம் எனக்கு வேண்டும் என்று விரும்புகிற நீ, பீடத்தை நோக்கி கடந்து வா. பீடத்தை நோக்கி உன் வழியை உண்டாக்கிக் கொள். அந்த பின்வாங்கிப் போன நீயும் உன் வழியை உண்டாக்கிக் கொள். பரிசுத்த ஆவியின் அபிஷேகம் எனக்கு வேண்டும் என்று சொல்கிற நீ, சுகம் எனக்கு வேண்டும் என்று சொல்லுகிற நீ, நீங்கள் எல்லாரும் பீடத்தை நோக்கி உங்கள் வழியை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் யாராயிருந்தாலும் சரி பீடத்தை நோக்கி உங்கள் வழியை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். 76. தேவனுடைய தீர்க்கதரிசியாக நான் கிறிஸ்துவின் நாமத்தில் பேசிச் சொல்லுகிறேன், அவர் இங்கே தம்முடைய கைகளை விரித்தவராய் உங்களுக்காக, ஒவ்வொரு நபருக்கும் தேவையான ஒவ்வொன்றையும் கொடுக்கும் படியாக, முற்றிலுமான விடுதலையின் அம்போடு கூட அவர் இங்கே நின்று கொண்டிருக்கிறார், இந்த இடத்துக்கு கடந்து வாருங்கள். தேவனுடைய விடுதலையின் அம்பு அது உன்னுடைய கையில் இருக்கிறது. அதைக் கொண்டு அடிப்பதற்கு நீ பயப்பட வேண்டாம். நீ தீர்மானம் எடுக்க வேண்டிய உன்னுடைய நேரம் இதுதான். இதுதான் வேளை, இதுதான் நேரம், அடி, அடி, அதை அடி, உன்னை கலங்கச் செய்கிற ஒவ்வொன்றையும் அடி, கல்வாரியை நோக்கி அடி, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை தொடு. உன் இருதயத்தை எழும்பப் பண்ணு, உன் கைகளை எழும்பப் பண்ணு, உன் ஆத்துமாவை எழும்பப் பண்ணு, உன்னுடைய துதிகளை எழும்பப் பண்ணு, உன் ஆராதனையை எழும்பப் பண்ணு, உடைய கண்ணீரை எழும்பப் பண்ணு, உன்னுடைய எல்லாவற்றையும் எழும்பப் பண்ணு. ஆமென்...?... என்ன ஒரு வெளிச்சம்! என்ன ஒரு நேரம்! என்ன ஒரு...?... என்ன ஒரு ஜனங்கள்! தேவனுக்கு ஸ்தோத்திரம். ஒவ்வொரு நபரையும் சுகமாக்கும். சாத்தானே, அவர்களையெல்லாம் அவிழ்த்து விடு. சாத்தானே, "அவர்களை விட்டு வெளியே வா" என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் உன்னை கடிந்து கொள்கிறேன், தொலைக்காட்சிகளிலிருந்தும், எல்லாவிதமான உலகப் பிரகாரமான காரியங்களிலிருந்தும் அவர்களை விட்டுவிடு. ஓ, தேவனே இதை அளியும். உம்முடைய ஆசிர்வாதங்களை அவர்கள் மேல் பொழியப் பண்ணும். தேவனுக்கு மகிமை உண்டாவதாக. உங்கள் கைகளை உயர்த்தி அவரை ஸ்தோத்திரியுங்கள், உங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளுங்கள். இந்த கட்டிடத்தில் உள்ள ஒவ்வொருவரும் எழுந்து உங்கள் கால்களை ஊன்றி, நின்று தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துங்கள். அல்லேலூயா. அல்லேலூயா. அற்புதம்...?... [சகோதரன் பிரான்ஹாமும் ஜனங்களும் தொடர்ந்து கர்த்தரை ஆராதிக்கிறார்கள் -- ஆசி]...?...அந்த வழியில். வியாதியஸ்தர்கள் சொஸ்தமாகிறார்கள், தேவனுடைய மகிமை விழுந்து கொண்டிருக்கிறது, ஆமென். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அல்லேலூயா. அல்லேலூயா. கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப் படுவதாக..?... நாங்கள் எவ்வளவாய் உம்மை நேசிக்கிறோம்! நாங்கள் எவ்வளவாய் உம்மை துதிக்கிறோம்! நாங்கள் எவ்வளவாய் உம்மை தொழுது கொள்ளுகிறோம்! எவ்வளவாய்..?... தேவனுக்கு மகிமை உண்டாவதாக. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. கர்த்தரை ஸ்தோத்தரியுங்கள். கர்த்தரை ஸ்தோத்தரியுங்கள்..?...பரிசுத்த ஆவியை அனுப்பும்...?...ஒவ்வொரு இருதயத்தையும் சுகமாக்கும். ஒவ்வொரு குறை கூறுபவரையும் சுகமாக்கும்..?...செவிகொடும், கர்த்தாவே. பரிசுத்த ஆவினால் நிரப்பும். மகிமையை இறங்கப்பண்ணும். ஆத்துமாக்களுக்கு இரட்சிப்பைக் கொண்டு வாரும். ஓ தேவனே கிறிஸ்துவின் நாமத்தில் என் முழு இருதயத்தோடும் என் முழு பலத்தோடும் நான் உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன். 2 THE ARROW OF GOD'S DELIVERANCE SHOT FROM A BOW ஒரு வில்லிலிருந்து எய்யப்பட்ட தேவனுடைய விடுதலையின் அம்பு 2